Amazon-ல் ஆர்டர் தெறிக்குது.. 6000mAh பேட்டரி கொண்ட Samsung 5G போன் மீது ரூ.4000 டிஸ்கவுண்ட்.. எந்த மாடல்?
6000mAh பேட்டரியுடன், கடந்த 2024 செப்டம்பர் மாத இறுதியில் இந்தியாவில் அறிமுகமான ஒரு சாம்சங் 5ஜி ஸ்மார்ட்போன் தற்போது அமேசான் இந்தியா வலைதளத்தில் தள்ளுபடி விலையின் கீழ் விற்பனை செய்யப்படுகிறது. அது என்ன மாடல்? அசல் விலை என்ன? ஆபர் விலை என்ன? என்னென்ன அம்சங்களை கொண்டுள்ளது? இதோ விவரங்கள்:
என்ன மாடல்? பிரபல இ-காமர்ஸ் வலைத்தளமான அமேசான் இந்தியாவில் (Amazon India), தற்போது தள்ளுபடி விலையின் (Discount Price) கீழ் விற்பனை செய்யப்படும் மாடல் - சாம்சங் கேலக்ஸி எம்15 5ஜி ப்ரைம் எடிஷன் (Samsung Galaxy M15 5G Prime Edition) ஸ்மார்ட்போன் ஆகும்.

சாம்சங் கேலக்ஸி எம்15 5ஜி ப்ரைம் எடிஷனின் அசல் விலை என்ன? ஆபர் விலை என்ன? இந்த ஸ்மார்ட்போனின் பேஸிக் 4ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன், அதன் எம்ஆர்பி விலையான ரூ.15,999 க்கு பதிலாக ரூ.4000 நேரடி தள்ளுபடியை பெற்று, தற்போது ரூ.11,999 க்கு வாங்க கிடைக்கிறது.
இதேபோல 6ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன், அதன் எம்ஆர்பி விலையான ரூ.16,999 க்கு பதிலாக ரூ.4000 நேரடி தள்ளுபடியை பெற்று ரூ.12,999 க்கு வாங்க கிடைக்கிறது. கடைசியாக உள்ள 8ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன், அதன் எம்ஆர்பி விலையான ரூ.17,999 க்கு பதிலாக ரூ.3500 நேரடி தள்ளுபடியை பெற்று ரூ.14,499 க்கு வாங்க கிடைக்கிறது
என்னென்ன அம்சங்கள்? டிஸ்பிளேவை பொறுத்தவரை சாம்சங் கேலக்ஸி எம்15 5ஜி ப்ரைம் எடிஷன் ஆனது 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (90Hz Refresh rate) மற்றும் 1,080 x 2,340 பிக்ஸல்ஸ் ரெசல்யூஷன் உடனான 6.5-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் சூப்பர் அமோஎல்இடி டிஸ்பிளேவை (6.5-inch Full-HD+ Super AMOLED display) கொண்டுள்ளது.
சிப்செட்டை பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போன் மீடியாடெக் டைமன்சிட்டி 6100 பிளஸ் (MediaTek Dimensity 6100+ SoC) சிப்செட் மூலம்இயக்கப்படுகிறது. இது 8ஜிபி வரையிலான ரேம் மற்றும் 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்பட்டு உள்ளது.
ஓஎஸ்-ஐ பொறுத்தவரை இது ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) அடிப்படையிலான சாம்சங்கின் ஒன்யுஐ 6.0 (OneUI 6.0) உடன் அனுப்பப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனிற்கு 4 ஓஎஸ் அப்டேட்கள் (OS Updates) மற்றும் 5 வருட செக்யூரிட்டி அப்டேட்கள் (Security Updates) கிடைக்கும் என்றும் உறுதியளிக்கப்பட்டுள்ளது.
கேமராக்களை பொறுத்தவரை சாம்சங் கேலக்ஸி எம்15 5ஜி ப்ரைம் எடிஷனில் ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் (Triple Rear Camera Setup) உள்ளது. அதில் 5 மெகாபிக்சல் மற்றும் 2 மெகாபிக்சல் சென்சார்கள் உடனான 50 மெகாபிக்சல் ப்ரைமரி கேமரா உள்ளது. முன்பக்க கேமராவாக 13 மெகாபிக்சல் செல்பீ சென்சார் உள்ளது
பேட்டரியை பொறுத்தவரை, முன்னரே குறிப்பிட்டபடி சாம்சங் கேலக்ஸி எம்15 5ஜி ப்ரைம் எடிஷனில் 6,000 எம்ஏஎச் பேட்டரி (6000 mAh Battery) பேக் செய்யப்பட்டுள்ளது. கவனிக்கப்பட வேண்டிய மற்ற அம்சங்களை பொறுத்தவரை இது பக்கவாட்டில் பொருத்தப்பட்ட பிங்கர் பிரிண்ட் சென்சாரை (Fingerprint Sensor) கொண்டுள்ளது.
மேலும் இந்த ஸ்மார்ட்போனில் நாக்ஸ் செக்யூரிட்டி (Knox Security), குயிக் ஷேர் (Quick Share) மற்றும் தெளிவுக்கான கால்களுக்கான வாய்ஸ் ஃபோகஸ் (Voice Focus) ஆகிய அம்சங்களும் உள்ளன. கனெக்டிவிட்டி ஆப்ஷன்களை பொறுத்தவரை, இதில் டூயல் 5ஜி (Dual 5G), 4ஜி எல்டிஇ (4G LTE), ஜிபிஎஸ் (GPS), ப்ளூடூத் 5.3 (Bluetooth 5.3), யுஎஸ்பி டைப்-சி போர்ட் (USB Type-C Port) மற்றும் 3.5மிமீ ஆடியோ ஜாக் ஆகியவைகள் உள்ளன.


Click it and Unblock the Notifications