Home
Deal of the day

ஒரே போடு.. 43% டிஸ்கவுண்ட்.. ரூ.13,999 இல்ல ரூ.7,999.. 16GB ரேம், 50MP AI கேம், 45W சார்ஜிங், 5000mAh பேட்டரி!

ரூ.8000 தான் என்னோட பட்ஜெட்.. 5ஜி சப்போர்ட்லாம் தேவை இல்லை.. 4ஜி மாடலா இருந்தாலும் ஓகே தான்.. ரூ.8000 குள்ள ஒரு நல்ல ஸ்மார்ட்போன் சொல்லுங்கப்பா என்று விசாரித்து கொண்டிருக்கும் பட்ஜெட்வாசியா நீங்கள்? ஆம் என்றால் நீங்கள் உடனே செல்ல வேண்டியது அமேசான் இந்தியா வலைத்தளத்திற்கு தான்!

ஏனென்றால் ரூ.13,999 என்கிற எம்ஆர்பி விலையில் அறிமுகமான ஒரு ஐடெல் 4ஜி ஸ்மார்ட்போன் தற்போது அமேசான் இந்தியா (Amazon India) வலைத்தளத்தில் 43% நேரடி தள்ளுபடியை பெற்று ரூ.7,999 க்கு வாங்க கிடைக்கிறது. அது ஐடெல் பி55 பிளஸ் 4ஜி (Itel P55 Plus 4G) மாடல் ஆகும்.

43% டிஸ்கவுண்ட்.. ரூ.13,999 இல்ல ரூ.7,999 தான்.. எந்த மாடல்?

இது பட்ஜெட் விலை 4ஜி ஸ்மார்ட்போன் என்பதால் கொஞ்சம் மொக்கையான அம்சங்களை கொண்டிருக்கும் என்று நினைக்க வேண்டாம். இது 16ஜிபி வரையிலான ரேம், 50எம்பி ஏஐ டூயல் கேமரா செட்டப், 45W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு உடனான 5000எம்ஏஏச் பேட்டரி உட்பட பல முக்கிய அம்சங்களை கொண்டுள்ளது.

விரிவான அம்சங்களை பொறுத்தவரை,ஐடெல் பி55 பிளஸ் 4ஜி ஸ்மார்ட்போன் ஆனது டூயல் சிம் சப்போர்ட் உடன் வருகிறது. டிஸ்பிளேவை பொறுத்தவரை 90ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.6 இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளேவை கொண்டுள்ளது. செல்பீ கேமராவை வைப்பதற்காக ஸ்க்ரீனில் ஹோல் பஞ்ச் கட்அவுட் உள்ளது.

இந்த்ஸ் ஸ்மார்ட்போனின் டிஸ்பிளேவானது - ஃபேஸ் அன்லாக், பேக்கிரவுண்ட் கால்கள், பேட்டரி தொடர்பான அறிவிப்புகள் மற்றும் பலவற்றை விரைவாக அணுகுவதற்கான டைனமிக் பார் அம்சத்தையும் ஆதரிக்கிறது. சிப்செட்டை பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போன் ஆக்டா-கோர் யூனிசாக் டி606சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது.

மெமரி ஃப்யூஷன் தொழில்நுட்பத்துடன், மேம்படுத்தப்பட்ட செயல்திறனுக்காக இந்த ஸ்மார்ட்போனில் உள்ள ரேம்-ஐ கிட்டத்தட்ட 16ஜிபி வரை விரிவாக்கலாம். கேமராக்களை பொறுத்தவரை, ஐடெல் பி55 பிளஸ் ஸ்மார்ட்போன் ஆனது ஏஐ ஆதரவு கொண்ட 50 மெகாபிக்சல் டூயல் ரியர் கேமரா செட்டப்பை கொண்டுள்ளது.
செல்பீ மற்றும் வீடியோ காள்களுக்காக 8-மெகாபிக்சல் முன்பக்க கேமராவை கொண்டுள்ளது

ஐடெல் பி55 பிளஸ் ஸ்மார்ட்போனில் ஃபேஸ் அன்லாக் அம்சம் இருக்கும் போதிலும் கூட இது பயோமெட்ரிக் அங்கீகாரத்திற்கான ஃபிங்கர் பிரிண்ட் சென்சாரையும் கொண்டுள்ளது. பேட்டரியை பொறுத்தவரை இது 45W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு கொண்ட 5000எம்ஏஎச் பேட்டரியை கொண்டுள்ளது. ஐடெல் நிறுவனத்தின் கூற்றுப்படி, இந்த 45W ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பம் அது 30 நிமிடங்களில் பேட்டரி அளவை 70 சதவீதத்திற்கு கொண்டு செல்லும்.

அமேசான் வலைதளத்தில் தள்ளுபடி விலையில் கிடைக்கும் மற்ற ஐடெல் போன்களின் விவரங்கள்: ஐடெல் கலர் ப்ரோ 5ஜி (Itel Color Pro 5G) 27% வரையிலான தள்ளுபடியை பெற்று ரூ.9,199 க்கு வாங்க கிடைக்கிறது. ஐடெல் எஸ்24 (Itel S24) 25% வரையிலான தள்ளுபடியை பெற்று ரூ.8,499 க்கு வாங்க கிடைக்கிறது.

ஐடெல் ஏ50 (Itel A50) 10% வரையிலான தள்ளுபடியை பெற்று ரூ.6,099 க்கு வாங்க கிடைக்கிறது. ஐடெல் ஆரா 05ஐ (Itel Aura 05i) 15% வரையிலான தள்ளுபடியை பெற்று ரூ.5,749க்கு வாங்க கிடைக்கிறது. ஐடெல் பிளிப் ஒன் (Itel Flip One) 24% வரையிலான தள்ளுபடியை பெற்று ரூ.2,499 க்கு வாங்க கிடைக்கிறது.

ஐடெல் சர்க்கிள் 1 (Itel Circle 1) 48% வரையிலான தள்ளுபடியை பெற்று ரூ.999 க்கு வாங்க கிடைக்கிறது. ஐடெல் ஐடி 5027 (Itel it 5027) 33% வரையிலான தள்ளுபடியை பெற்று ரூ.1.069 க்கு வாங்க கிடைக்கிறது. ஐடெல் ஐடி 5330 (Itel it 5330) 24% வரையிலான தள்ளுபடியை பெற்று ரூ.1,369 க்கு வாங்க கிடைக்கிறது.

English summary
Looking For New 4G Smartphone Itel P55 Plus Gets Big Discount on Amazon India Check Details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X