Home
Deal of the day

Amazon-ல் போட்டு தாக்கும் Pixel போன்..ரூ.16000 விலை குறைப்பு + ரூ.3000 பேங்க் டிஸ்கவுண்ட்.. எந்த மாடல்?

கூகுள் ஸ்மார்ட்போன் வாங்க வேண்டும் என்கிற ஐடியா அல்லது பட்ஜெட் உங்களிடம் இருந்தால். இதுவே அதற்கான சரியான நேரம். ஏனென்றால் கடந்த ஆகஸ்ட் 2025 இல் அறிமுக செய்யப்பட்ட கூகுள் பிக்சல் 10 சீரீஸின் ஸ்டாண்டர்ட் வேரியண்ட் ஆன பிக்சல் 10 மாடல் ஆனது தற்போது நல்ல டிஸ்கவுண்ட் விலையில் வாங்க கிடைக்கிறது.

நினைவூட்டும் வண்ணம் கூகுள் பிக்சல் 10 (Google Pixel 10) ஸ்மார்ட்போனின் சிங்கிள் 12 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.79,999 க்கு அறிமுகம் செய்யப்பட்டது. இந்த ஸ்மார்ட்போன் இண்டிகோ, ஃப்ரோஸ்ட், லெமன்கிராஸ் மற்றும் அப்சிடியன் கலர்களில் வெளியானது.

Amazon-ல் போட்டு தாக்கும் Pixel போன்..ரூ.16000 விலை குறைப்பு!

தற்போது அமேசான் இந்தியா வலைத்தளத்தில், மேற்கண்ட 4 கலர் ஆப்ஷன்களும் 3கலர்கள் ஆனது வெவ்வேறு வகையான ஆபர் விலையில் வாங்க கிடைக்கிறது: அப்சிடியன் - ரூ.65,199 க்கும், இண்டிகோ - ரூ.63,800 க்கும் மற்றும் ஃப்ரோஸ்ட் - ரூ.65,700 க்கும் வாங்க கிடைக்கிறது. அனைத்துமே அறிமுக விலையை விட மலிவான விலைகள் ஆகும். கூடுதலாக ரூ.3000 வரையிலான பேங்க் கார்டு ஆபரும் கிடைக்கிறது.

கூகுள் பிக்சல் 10 ஸ்மார்ட்போனின் விரிவான அம்சங்கள்:
- 1,080 × 2,424 பிக்சல்ஸ்
- 120Hz ரெஃப்ரெஷ் ரேட்
- 3000 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ்
- கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் 2 ப்ரொடெக்ஷன்
- பேக் பேனலிலும் அதே ப்ரொடெக்ஷன் கிளாஸ்

- 3என்எம் டென்சர் ஜி5 சிப்செட் மற்றும் டைட்டன் எம்2 செக்யூரிட்டி சிப்
- 12ஜிபி ரேம், 256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ்
- ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ்
- ஏழு வருடஓஎஸ் மற்றும் செக்யூரிட்டி அப்டேட்கள் கிடைக்கும்
- கூகுள் ஜெமினை ஆதரவு
- மெட்டீரியல் யூ எக்ஸ்பிரசிவ் டிசைன் சிஸ்டம் (Material You Expressive design system)

- ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்
- 48 மெகாபிக்சல் ப்ரைமரி சென்சார்
- 5x ஜூம் ஆதரவுடன் 10.8 மெகாபிக்சல் டெலிஃபோட்டோ கேமரா
- 13 மெகாபிக்சல் அல்ட்ராவைடு ஷூட்டர்
- 10.5 மெகாபிக்சல் செல்பீ கேமரா
- கேமரா கோச் உட்பட பல ஏஐ ஆதரவு கொண்ட இமேஜிங் டூல்கள்

- 4970mAh பேட்டரி
- 30W பாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவு
- 15W வரையிலான Qi2 வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவு
- பிக்சல் ஸ்னாப் ஆக்சஸெரீஸ்களுடன் இணக்கமானது
- ஹீட் மேனேஜ்மென்ட்டிற்காக ஒரு வேப்பர் கூலிங் சேம்பர்
- தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான ஐபி68 ரேட்டிங்
- இன்-டிஸ்பிளே பிங்கர் பிரிண்ட் சென்சார்
- இசிம் ஆதரவு, 5ஜி, 4ஜி, ஜிபிஎஸ், ஜிஎன்எஸ்எஸ்
- கூகுள் கேஸ்ட், ப்ளூடூத் 6, வைஃபை, என்எப்சி. யுஎஸ்பி டைப்-சி.

முன்னரே குறிப்பிட்டபடி கூகுள் பிக்சல் 10 சீரிஸ் (Pixel 10 Series) ஆனது கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்தியாவில் அறிமுகமானது. இதன் கீழ் பிக்சல் 10 (Pixel 10), பிக்சல் 10 ப்ரோ (Pixel 10 Pro), பிக்சல் 10 ப்ரோ எக்ஸ்எல் (Pixel 10 Pro XL) மற்றும் பிக்சல் 10 ப்ரோ ஃபோல்ட் (Pixel 10 Pro Fold) என மொத்தம் 4 மாடல்கள் வெளியாகின.

கூகுள் பிக்சல் 11 சீரீஸ் எப்போது அறிமுகமாகும்? கூகுள் இதற்கான தேதியை இன்னும் அறிவிக்கவில்லை. ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளின் போக்கை பார்க்கும்போது, இது 2026 ​​ஆகஸ்ட் மாதத்தில் இது வெளியாகலாம் என்று தெரிகிறது.

நினைவூட்டும் வண்ணம் பிக்சல் 9 ஸ்மார்ட்போன் ஆனது ஆகஸ்ட் 13, 2024 அன்று அறிவிக்கப்பட்டது. பிக்சல் 10 ஆனது ஆகஸ்ட் 20, 2025 அன்று அறிவிக்கப்பட்டது. கூகுள் இதே கால அட்டவணையை பின்பற்றினால், ஜூன் மாத இறுதியில் அல்லது ஜூலை மாதத்தில் கூகுள் அறிமுக நிகழ்விற்கான இன்வைட்ஸ் அனுப்பப்படலாம்; நிகழ்வு 2026-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தின் நடுப்பகுதிக்கும், இறுதிக்கும் இடைப்பட்ட காலத்தில் நடைபெறலாம்.

Best Mobiles in India

English summary
Looking For Google Smartphone Pixel 10 Selling at 3 different discounted prices in Amazon
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X