ரூ.9000-ஐ யாரு விடுவா.. ரூ.5000 விலை குறைப்பு + ரூ.4000 வங்கி தள்ளுபடி.. லேட்டஸ்ட் Pixel மீது.. எந்த மாடல்?
ஆபர் விலையில் நல்ல கூகுள் பிக்சல் ஸ்மார்ட்போனை தேடிக்கொண்டு இருக்கீர்கள் என்றால், நீங்கள் உடனே செல்ல வேண்டியது பிரபல இகாமர்ஸ் வலைத்தளம் ஆன பிளிப்கார்ட்டுக்கு (Flipkart) தான். ஏனென்றால் கூகுளின் லேட்டஸ்ட் பிக்சல் 10 சீரீஸின் ஸ்டாண்டர்ட் வேரியண்ட் மீது ரூ.5000 நேரடி விலைக்குறைப்பு + ரூ.4000 வங்கி தள்ளுபடி என மொத்தம் ரூ.9000 ஆபர் கிடைக்கிறது.
அது பிக்சல் 10 (Pixel 10) மாடல் ஆகும். நினைவூட்டும் வண்ணம் இந்த ஸ்மார்ட்போன் கடந்த ஆகஸ்ட் 2025 இல் - மற்ற பிக்சல் 10 சீரீஸ் ஸ்மார்ட்போன்கள் ஆன - பிக்சல் 10 ப்ரோ மற்றும் பிக்சல் 10 ப்ரோ எக்ஸ்எல் ஆகிய மாடல்களுடன் இந்தியாவில் அறிமுகமானது.

கூகுள் பிக்சல் 10 ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்:
- 6.3-இன்ச் புல் எச்டி பிளஸ் ஓஎல்இடி சூப்பர் ஆக்சுவா டிஸ்பிளே
- டைட்டன் எம்2 செக்யூரிட்டி சிப் உடனான இன்-ஹவுஸ் டென்சர் ஜி5 சிப்செட்
- 48எம்பி ட்ரிபிள் ரியர் கேமரா
- பில்ட்-இன் க்யூஐ 2 சார்ஜிங் மேக்னட்கள்
- பிக்சல் ஸ்னாப் மேக்நட் சார்ஜிங் அக்ஸசெரீஸ்கள் உடனான இணக்கம்
- 4,970எம்ஏஎச் பேட்டரி
அறிமுக விலையை (அசல் விலை) பொறுத்தவரை கூகுள் பிக்சல் 10 ஸ்மார்ட்போனின் சிங்கிள் 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.79,999 ஆகும். ஆனால் தற்போது பிளிப்கார்ட் வலைதளத்தில் தற்போது ரூ.74,999 க்கு பட்டியலிடப்பட்டு உள்ளது. இது ரூ.5000 நேரடி விலை குறைப்பு அல்லது நேரடி டிஸ்கவுண்ட்டை குறிக்கிறது .
இதோடு சேர்த்து பிக்சல் 10 ஸ்மார்ட்போனின் மீது ரூ.4000 பேங்க் டிஸ்கவுண்டும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதை பெற உங்களிடம் எச்டிஎப்சி கிரெடிட் கார்டு இருக்க வேண்டும். ஒருவேளை உங்களிடம் பிளிப்கார்ட் எஸ்பிஐ கிரெடிட் கார்டு அல்லது பிளிப்கார்ட் ஆக்சிஸ் கிரெடிட் கார்டு இருந்தால் உங்களுக்கு ரூ.3750 டிஸ்கவுண்ட் கிடைக்கும்.
கூகுள் பிக்சல் 10 ஸ்மார்ட்போனின் முழு அம்சங்கள்:
- 1,080 × 2,424 பிக்சல்ஸ்
- 120Hz ரெஃப்ரெஷ் ரேட்
- 3000 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ்
- கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் 2 ப்ரொடெக்ஷன்
- பேக் பேனலிலும் அதே ப்ரொடெக்ஷன் கிளாஸ்
- 3என்எம் டென்சர் ஜி5 சிப்செட் மற்றும் டைட்டன் எம்2 செக்யூரிட்டி சிப்
- 12ஜிபி ரேம், 256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ்
- ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ்
- ஏழு வருடஓஎஸ் மற்றும் செக்யூரிட்டி அப்டேட்கள் கிடைக்கும்
- கூகுள் ஜெமினை ஆதரவு
- மெட்டீரியல் யூ எக்ஸ்பிரசிவ் டிசைன் சிஸ்டம் (Material You Expressive design system)
- ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்
- 48 மெகாபிக்சல் ப்ரைமரி சென்சார்
- 5x ஜூம் ஆதரவுடன் 10.8 மெகாபிக்சல் டெலிஃபோட்டோ கேமரா
- 13 மெகாபிக்சல் அல்ட்ராவைடு ஷூட்டர்
- 10.5 மெகாபிக்சல் செல்பீ கேமரா
- கேமரா கோச் உட்பட பல ஏஐ ஆதரவு கொண்ட இமேஜிங் டூல்கள்
- 4970mAh பேட்டரி
- 30W பாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவு
- 15W வரையிலான Qi2 வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவு
- பிக்சல் ஸ்னாப் ஆக்சஸெரீஸ்களுடன் இணக்கமானது
- ஹீட் மேனேஜ்மென்ட்டிற்காக ஒரு வேப்பர் கூலிங் சேம்பர்
- தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான ஐபி68 ரேட்டிங்
- இன்-டிஸ்பிளே பிங்கர் பிரிண்ட் சென்சார்
- இசிம் ஆதரவு, 5ஜி, 4ஜி, ஜிபிஎஸ், ஜிஎன்எஸ்எஸ்
- கூகுள் கேஸ்ட், ப்ளூடூத் 6, வைஃபை, என்எப்சி
- யுஎஸ்பி டைப்-சி.


Click it and Unblock the Notifications