Home
Deal of the day

போட்றா 2 ஆர்டர்-ஐ.. ரூ.9499 க்கு 5G, கர்வ்டு டிஸ்பிளே, 8GB ரேம், 5000mAh பேட்டரி, 50MP கேமரா.. எந்த மாடல்?

2025 ஆம் ஆண்டில் வரிசையாக பல புதிய ஸ்மார்ட்போன்கள் அறிமுகமாகின்றன. அவைகளில் பெரும்பாலும் 5ஜி ஆதரவுடன் வருகின்றன. இருப்பினும் உங்களுக்கு புத்தம் புதிய மாடலை நம்பி வாங்கும் அளவிற்கு தைரியம் இல்லை என்றால்.. நல்ல ரிவ்யூ-வை பெற்ற மாடலைத்தான் வாங்குவீர்கள் என்றால்.. கூடவே உங்கள் பட்ஜெட் ரூ.10,000 க்குள் என்றால்.. கவலையை விடுங்கள் நீங்கள் சரியான இடத்திற்கு தான் வந்துள்ளீர்கள்.

ரூ.10,000 க்குள் என்கிற பட்ஜெட்டில் அறிமுகமாகி விற்பனையில் சக்கைபோடு போட்ட லாவா பிளேஸ் 2 5ஜி (Lava Blaze 2 5G) ஸ்மார்ட்போன் தற்போது டிஸ்கவுண்ட் விலையில் வாங்க கிடைக்கிறது. அமேசான் இந்தியா வலைத்தளத்தில் தற்போது இந்த ஸ்மார்ட்போனின் 4ஜிபி ரேம் + 64ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.9,499 க்கு வாங்க கிடைக்கிறது.

போட்றா 2 ஆர்டர்-ஐ.. ரூ.9499 க்கு 5G, கர்வ்டு டிஸ்பிளே, 8GB ரேம்!

அறிமுகத்தின் போது இதே ஆப்ஷன் ரூ.9,999 க்கு வாங்க கிடைத்தது. அதாவது இது ரூ.500 டிஸ்கவுண்ட் விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த டிஸ்கவுண்ட் லாவா பிளேஸ் 2 5ஜி ஸ்மார்ட்போனின் கிளாஸ் ப்ளூ மற்றும் கிளாஸ் லாவெண்டர் கலர் ஆப்ஷன்களின் மீது கிடைக்கிறது.

லாவா பிளேஸ் 2 5ஜி ஸ்மார்ட்போனின் விரிவான அம்சங்கள்: டிஸ்பிளேவை பொறுத்தவரை, லாவா பிளேஸ் 2 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 720x1600 பிக்சல்ஸ் உடனான 6.56 இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இது செல்பீ கேமராவிற்கான ஹோல் பஞ்ச் கட்அவுட் உடனான 2.5டி கர்வ்டு டிஸ்பிளே ஆகும்..

சிப்செட்டை பொறுத்தவரை லாவா பிளேஸ் 2 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது ஆக்டா-கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 6020 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. இது 6ஜிபி வரையிலான ரேம் உடன் இணைக்கப்பட்டுள்ளது. ஆனால் ரூ.9499 க்கு கிடைப்பது 4ஜிபி ரேம் ஆப்ஷன் ஆகவும். இந்த ரேம்-ஐ விர்ச்சுவல் ரேம் அம்சத்தின் வழியாக 8ஜிபி வரை நீட்டிக்க முடியும். 6ஜிபி ரேம் ஆப்ஷனை வாங்கினால் 12ஜிபி வரை நீட்டிக்க முடியும்.

இன்டர்னல் ஸ்டோரேஜை பொறுத்தவரை, இந்த ஸ்மார்ட்போனில் ரூ.9499 க்கு கிடைப்பது 64ஜிபி ஆப்ஷன் ஆகும், லாவா பிளேஸ் 2 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 6ஜிபி ரேம் + 128ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷனின் கீழும் வாங்க கிடைக்கிறது. அமேசானில் தற்போது இது ரூ.11,499 க்கு வாங்க கிடைக்கிறது

கேமராக்களை பொறுத்தவரை, லாவா பிளேஸ் 2 5ஜி ஸ்மார்ட்போனில் எல்இடி ஃப்ளாஷ் ஆதரவு உடனான டூயல் ரியர் கேமரா செட்டப் உள்ளது. அதில் 50 மெகாபிக்சல் ப்ரைமரி கேமரா + 0.08 மெகாபிக்சல் செக்ண்டரி கேமரா உள்ளது. முன்பக்கத்தில் ஸ்கிரீன் ஃபிளாஷ் ஆதரவு உடனான 8 மெகாபிக்சல் செல்பீ கேமரா உள்ளது.

கனெக்டிவிட்டி ஆப்ஷன்களை பொறுத்தவரை, லாவா பிளேஸ் 2 5ஜி மாடல் ஆனது 5ஜி ஆதரவு, 4ஜி ஆதரவு, ப்ளூடூத், எஃப்எம் ரேடியோ, வைஃபை 802.11 பி/ஜி/என்/ஏசி, ஓடிஜி, 3.5மிமீ ஆடியோ ஜாக் மற்றும் யூஎஸ்பி டைப் சி போர்ட் ஆகியவைகளை கொண்டு உள்ளது.

பட்ஜெட் விலை மாடலாக இருந்தாலும் கூட இது பக்கவாட்டில் பொருத்தப்பட்ட ஃபிங்கர் பிரிண்ட் சென்சார் உடன் வருகிறது. இதில் ஃபேஸ் அன்லாக் அம்சமும் உள்ளது. பேட்டரி மற்றும் பாஸ்ட் சார்ஜிங்கை பொறுத்தவரை லாவா பிளேஸ் 2 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 18W ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 5000எம்ஏஎச் பேட்டரியை கொண்டுள்ளது

இதெல்லாம் ஒருபக்கம் இருக்க 2025 ஆம் ஆண்டு குடியரசு தின விழாவை முன்னிட்டு, அமேசான் இந்தியா வலைத்தளமானது கிரேட் ரிபப்ளிக் டே விற்பனைக்கான (Amazon great republic day sale 2025) ஆரம்ப தேதியை அறிவித்துள்ளது. இது வருகிற 2025 ஜனவரி 13 ஆம் தேதி மதியம் 12 மணி முதல் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் கீழ் என்னென்ன ஸ்மார்ட்போன்கள் மீது ஆபர் கிடைக்கும் என்கிற பட்டியலை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்.

English summary
Looking For Good 5G Phone Under Rs 10000 Lava Blaze 2 5G Selling At Discounted Price in Amazon
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X