வாங்க சூப்பர் சான்ஸ்.. ஒரிஜினல் விலையில் இருந்து இறங்கிய Samsung 5ஜி போன்.. 5000mAh பேட்டரி, 25W சார்ஜிங்!
ரூ.20,000 பட்ஜெட்டில் ஒரு நல்ல சாம்சங் 5ஜி ஸ்மார்ட்போனை வாங்க வேண்டும் என்கிற பிளானில் உள்ளவர்கள் உடனே அமேசான் இந்தியா வலைத்தளத்திற்கு செல்லவும். ஏனென்றால், சந்தையில் உள்ள பெரும்பாலான ஸ்மார்ட்போன்களின் விலைகள் உயர்ந்துகொண்டிருக்கும் இந்த வேளையில், சாம்சங் கேலக்ஸி எம்36 5ஜி மாடலானது அதன் அசல் அறிமுக விலையை விட மலிவான விலைக்கு வாங்க கிடைக்கிறது.
நினைவூட்டும் வண்ணம் சாம்சங் கேலக்ஸி எம்36 5ஜி ஸ்மார்ட்போனின் சிங்கிள் 6ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.22,999 க்கு அறிமுகமானது, ஆனால் தற்போது அமேசான் இந்தியா வலைதளத்தில் ரூ.1000 நேரடி விலைகுறைப்பை பெற்று ரூ.21,999 க்கு வாங்க கிடைக்கிறது. கூடவே ரூ.659 பேங்க் கேஷ்பேக்கும் கிடைக்கிறது. இதன் மூலம் சாம்சங் கேலக்ஸி எம்36 5ஜி ஸ்மார்ட்போனின் இறுதி விலையை இன்னும் குறைக்க முடியும்.

ஆர்வமுள்ள வாடிக்கையாளர்கள் சாம்சங் கேலக்ஸி எம்36 5ஜி ஸ்மார்ட்போனின் 8ஜிபி ரேம் + 128ஜிபி அல்லது 8ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன்களையும் கூட வாங்கலாம். இவைகள் 6ஜிபி + 128ஜிபி அறிமுகம் செய்யப்பட்ட பின்னர் அறிமுகமான வேரியண்ட்கள் ஆகும். இதில் 8ஜிபி ரேம் + 128ஜிபி ஆப்ஷன் ஸ்டோரேஜ் ரூ.23,999 க்கு வாங்க கிடைக்கிறது. 8ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் அமேசானில் அவுட் ஆப் ஸ்டாக்கில் உள்ளது (விரைவில் ஸ்டாக் செய்யப்படலாம்)
சாம்சங் கேலக்ஸி எம்36 5ஜி ஸ்மார்ட்போனின் விரிவான அம்சங்கள்: டிஸ்பிளேவை பொறுத்தவரை சாம்சங் கேலக்ஸி எம்36 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 6.7-இன்ச் FHD பிளஸ் சூப்பர் AMOLED டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இந்த டிஸ்பிளேவின் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் ஆனது மென்மையான வியூவிங் எக்ஸ்பீரியன்ஸை வழங்குகிறது.
மேலும் இந்த டிஸ்பிளே கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் பிளஸ் மூலம் பாதுகாக்கப்படுகிறது மற்றும் கிளாசிக் ஆன வாட்டர் டிராப் நாட்ச் வடிவமைப்பை பெற்றுள்ளது. சிப்செட்டை பொறுத்தவரை சாம்சங் கேலக்ஸி எம்36 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது சாம்சங்கின் இன்-ஹவுஸ் எக்சினோஸ் 1380 சிப்செட்டால் இயக்கப்படுகிறது.
இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 15-ஐ அடிப்படையாக கொண்ட ஒன்யுஐ 15 (OneUI 15) ஓஎஸ் உடன் வந்தது. சாம்சங் நிறுவனம் இந்த ஸ்மார்ட்போனிற்கு 6 ஆண்டுகள் வரை ஆப்ரேட்டிங் சிஸ்டம் மேம்படுத்தல்கள் கிடைக்கும் என்று உறுதிஸ் செய்துள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனில் கூகுள் ஜெமினி அடிப்படையிலான பல்வேறு ஏஐ அம்சங்களும் உள்ளன. அதாவது சர்க்கிள்-டு-சர்ச், ஜெமினி லைவ் மற்றும் ஏஐ செலக்ட் ஆகிய அம்சங்கள் உள்ளன.
கேமராக்களை பொறுத்தவரை சாம்சங் கேலக்ஸி எம்36 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) உடனான 50எம்பி ப்ரைமரி கேமராவை உள்ளடக்கிய ட்ரிபிள் கேமரா செட்டப்பை கொண்டுள்ளது. இதில் 8MP அல்ட்ரா-வைட் லென்ஸ் மற்றும் 2MP மேக்ரோ சென்சார் ஆகியவைகளும் அடக்கம்
முன்பக்கத்தில் செல்பீகள் மற்றும் வீடியோ கால்களுக்கு, 13MP செல்பீ கேமரா உள்ளது. இதன் கேமரா செட்டப்பில் 4கே வீடியோ ரெகார்ட், நைட் மோட் மற்றும் லோ-லைட் வீடியோ திறன்கள் போன்ற அம்சங்களும் உள்ளன. கடைசியாக, பேட்டரியை பொறுத்தவரை சாம்சங் கேலக்ஸி எம்36 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 25W யூஎஸ்பி டைப்-சி சார்ஜிங்கை ஆதரவு உடனான 5000mAh பேட்டரியை கொண்டுள்ளது.
சாம்சங் தொடர்பான மற்ற சமீபத்திய செய்திகளை பொறுத்தவரை, இந்நிறுவனம் இந்தியாவில் அதன் 2026 விஷன் ஏஐ டிவி லைன்அப்பை (2026 Vision AI TV Lineup) அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் மைக்ரோ ஆர்ஜிபி, ஓஎல்இடி, நியோ க்யூஎல்இடி, தி ஃபிரேம், மினி எல்இடி மற்றும் யுஎச்டி என பல வகையான ஸ்மார்ட் டிவி மாடல்கள் அடங்கும்.
சாம்சங்கின் மைக்ரோ ஆர்ஜிபி மாடல்களின் (Samsung's Micro RGB range) விலை ரூ.1,24,990 முதல் தொடங்குகிறது. சாம்சங்கின் ஓஎல்இடி மாடல்களின் (Samsung's OLED range) விலை ரூ.1,14,990 முதல் தொடங்குகிறது. சாம்சங்கின் ஃபிரேம் டிவி மாடல்களின் (Samsung's Frame TV range ) விலை ரூ.56,990 முதல் தொடங்குகிறது.
சாம்சங்கின் நியோ க்யூஎல்இடி மாடல்களின் (Samsung's Neo QLED range) விலை ரூ.52,990 முதல் தொடங்குகிறது. சாம்சங்கின் மினி எல்இடி மாடல்களின் (Samsung's Mini LED range) விலை ரூ.42,990 முதல் தொடங்குகிறது. சாம்சங்கின் யுஎச்டி டிவி மாடல்களின் (Samsung's UHD TV range) விலை ரூ.36,990 முதல் தொடங்குகிறது. அனைத்தும் ஏற்கனவே விற்பனைக்கு உள்ளன.


Click it and Unblock the Notifications