அமேசான்: ரூ.16,000-க்கு கீழ் கிடைக்கும் அசத்தலான விவோ ஸ்மார்ட்போன்கள்.!
இந்தியாவில் விவோ ஸ்மார்ட்போன்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது என்றுதான் கூறவேண்டும். குறிப்பாக இந்நிறுவனம் அறிமுகம் செய்யும் ஸ்மார்ட்போன்கள் தனித்துவமான டிஸ்பிளே மற்றும் தரமான சிப்செட் வசதியுடன் வெளிவருவதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும் என்றே கூறலாம்.

மேலும் விவோ நிறுவனம் அடுத்த ஆண்டு பல 5ஜி ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்போது அமேசான் தளத்தில் ரூ.16,000-க்கு கீழ் கிடைக்கும் அசத்தலான விவோ ஸ்மார்ட்போன்களின் பட்டியலை சற்று விரிவாகப் பார்ப்போம்.
விவோ Y12s
3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி மெமரி கொண்ட விவோ Y12s ஸ்மார்ட்போன் மாடலை அமேசான் தளத்தில் ரூ.9,737-விலையில் வாங்க முடியும். மேலும் விவோ Y12s 2021 ஸ்மார்ட்போன் ஆனது 6.51-இன்ச் எச்டி பிளஸ் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 720 x 1600 பிக்சல் தீர்மானம், 20:9 என்ற திரைவிகிதம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். இந்த ஸ்மார்ட்போனில் மிகவும் எதிர்பார்த்த1.9 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 439 சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது. விவோ Y12s ஸ்மார்ட்போனின் பின்புறம் 13எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி செகண்டரி கேமரா என மொத்தம் இரண்டு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் 8எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் எனப் பல்வேறு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். விவோ Y12s சாதனத்தில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது, எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. குறிப்பாக ஃபேஸ் அன்லாக், கைரேகை ஸ்கேனர் உள்ளிட்ட ஆதரவுகளுடன் இந்த புதிய விவோ ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. விவோ Y12s சாதனத்தில் 4ஜி வோல்ட்இ, 2.4 ஜிகாஹெர்ட்ஸ் வைஃபை, புளூடூத் 5.0, ஜிபிஎஸ், மைக்ரோ யூ.எஸ்.பி 2.0 மற்றும் 3.5 மிமீ ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகள் அடக்கம்.
விவோ Y20T
6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி வசதி கொண்ட விவோ Y20T ஸ்மார்ட்போனை அமேசான் தளத்தில் ரூ.15,490-விலையில் வாங்க முடியும். இது டூயல் நானோ சிம் விருப்பத்துடன் வருகிறது. விவோ ஒய் 20 டி ஆனது ஆண்ட்ராய்டு 11 அடிப்படையிலான ஃபன்டச் ஓஎஸ் 11.1 உடன் இயக்குகிறது. இது 6.51' இன்ச் எச்டி+ கொண்ட 720 x 1,600 பிக்சல்கள் உடைய டிஸ்பிளேவை ஹாலோ ஃபுல்வியூ அம்சத்துடன் கொண்டுள்ளது. ஹூட்டின் கீழ், இந்த ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 662 சிப்செட் மூலம் இயங்குகிறது.கேமிங் ஆர்வலர்களுக்கு, விவோ ஒய் 20 டி அல்ட்ரா கேம் மோட், எஸ்போர்ட்ஸ் மோட், 4 டி கேம் வைப்ரேஷன் மற்றும் கேம் பிக்சர்-இன்-பிக்சர் ஆகியவற்றுடன் மல்டி டர்போ 5.0 உடன் வருகிறது. புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களுக்கு, இந்த சாதனம் 13 மெகாபிக்சல் முதன்மை சென்சார், 2 மெகாபிக்சல் கொண்ட மேக்ரோ ஷூட்டர் மற்றும் மற்றொரு 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார் ஆகிய மூன்று பின்புற கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. முன்பக்கத்தில், Vivo Y20T இல் உள்ள நாட்சில் 8 மெகாபிக்சல் செல்ஃபி ஷூட்டர் உள்ளது, அதில் f/1.8 துளை உள்ளது. முன் கேமரா ஆரா ஸ்கிரீன் லைட் மற்றும் போர்ட்ரேட் மோட் உடன் வருகிறது. இணைப்பு விருப்பங்களில் டூயல் பேண்ட் வைஃபை, 4 ஜி, ப்ளூடூத் வி 5 மற்றும் மைக்ரோ-யூஎஸ்பி போர்ட் ஆகியவை அடங்கும். போர்டில் உள்ள சென்சார்களில் ஆக்ஸிலரோமீட்டர், ஆம்பியண்ட் லைட் சென்சார், இ-காம்பஸ், கைரோஸ்கோப் மற்றும் ப்ராக்ஸிமிட்டி சென்சார் ஆகியவை அடங்கும்.
விவோ Y12G
3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி மெமரி கொண்ட விவோ Y12G ஸ்மார்ட்போனை அமேசான் தளத்தில் ரூ.10,990-விலையில் வாங்க முடியும். விவோ Y12G ஸ்மார்ட்போன் ஆனது 6.51-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 720x1,600 பிக்சல் தீர்மானம், 20:9 என்ற திரைவிகிதம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது. அதேபோல் பெரிய டிஸ்பிளே என்பதால் வீடியோ உள்ளிட்ட பல வசதிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். விவோ Y12G ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 439 சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது. குறிப்பாக கேமிங் உள்ளிட்ட பல்வேறு வசதிகளுக்கு தகுந்தபடி இந்த ஸ்மார்ட்போன் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் Funtouch OS 11 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த புதிய ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. விவோ Y12G ஸ்மார்ட்போனில் 13எம்பி பிரைமரி லென்ஸ் + 2எம்பி secondary சென்சார் என மொத்தம் இரண்டு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. குறிப்பாக இதன் கேமராவைப் பயன்படுத்தி இரவு நேரங்களில் கூட துல்லியமான புகைப்படங்களை எடுக்க முடியும். மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி செல்பீ கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடல்.விவோ Y12G ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. விவோ Y12G ஸ்மார்ட்போனில் 4 ஜி எல்டிஇ, வைஃபை, ப்ளூடூத் வி 5.0, ஜிபிஎஸ்/ ஏ-ஜிபிஎஸ், எஃப்எம் ரேடியோ, மைக்ரோ-யூஎஸ்பி மற்றும் 3.5 மிமீ ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இடம்பெற்றுள்ளன.
விவோ Y1s
3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி மெமரி கொண்ட விவோ Y1s ஸ்மார்ட்போனை அமேசான் தளத்தில் ரூ.9,490-விலையில் வாங்க முடியும். குறிப்பாக 6.22' இன்ச் எச்டி பிளஸ் ஐபிஎஸ் எல்சிடி கொண்ட டியூட்ராப் நாட்ச் டிஸ்பிளே வசதியுடன் வெளிவந்துள்ளது. மேலும் மீடியாடெக் பி35 ஆக்டோ-ஆகார் சிப்செட் வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது. எனவே பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் 13எம்பி கேமரா பொருத்தப்பட்டுள்ளது. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கு என்றே 5எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான விவோ Y1s மாடல். அதேபோல் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளம், 4030 எம்ஏஎச் பேட்டரி மற்றும் பாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. இதுதவிர 4 ஜி வோல்டிஇ, வைஃபை 802.11 பி / ஜி / என், புளூடூத் 5.0, ஜிபிஎஸ், மைக்ரோ யுஎஸ்பி 3.5 ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த விவோ Y1s மாடல்.


Click it and Unblock the Notifications