அமேசான்: பட்ஜெட் விலையில் கிடைக்கும் அசத்தலான விவோ ஸ்மார்ட்போன்கள்.!
விவோ நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்களுக்கு இந்தியாவில் நல்ல வரவேற்பு உள்ளது. அதாவது தனித்துவமான டிஸ்பிளே வசதி மற்றும் அட்டகாசமான கேமரா, தரமான சிப்செட் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களுடன் இந்த விவோ ஸ்மார்ட்போன்கள் வெளிவருவதால் இந்தியாவில் நல்ல வரவேற்பு உள்ளது.

மேலும் இந்நிறுவனம் 5ஜி ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்வதில் அதிக ஆர்வம் காட்டுகிறது என்றுதான் கூறவேண்டும். இப்போது அமேசான் தளத்தில் பட்ஜெட் விலையில் கிடைக்கும் விவோ ஸ்மார்ட்போன்களின் பட்டியலை சற்று விரிவாகப் பார்ப்போம்.
விவோ Y1s ஸ்மார்ட்போன்
3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி மெமரி கொண்ட விவோ Y1s ஸ்மார்ட்போன் மாடலை அமேசான் தளத்தில் ரூ.9,490-விலையில் வாங்க முடியும். அதேபோல் இந்த சாதனம் 6.22' இன்ச் எச்டி பிளஸ் ஐபிஎஸ் எல்சிடி கொண்ட டியூட்ராப் நாட்ச் டிஸ்பிளே வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது. பின்பு 1520 x 720 பிக்சல் தீர்மானம், மீடியாடெக் ஹீலியோ பி 35 சிப்செட் , ஆண்ட்ராய்டு 10 உடன் கூடிய FuntouchOS இயங்குதளம், மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட், 13 மெகாபிக்சல் கொண்ட ரியர் கேமரா, 5 மெகாபிக்சல் கொண்ட செல்ஃபி கேமரா, 4 ஜி வோல்டிஇ, வைஃபை 802.11 பி / ஜி /என், புளூடூத் 5.0, ஜிபிஎஸ், மைக்ரோ யுஎஸ்பி, 3.5 ஆடியோ ஜாக், 4,030 எம்ஏஎச் பேட்டரி உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த விவோ Y1s ஸ்மார்ட்போன் மாடல்.
விவோ Y21
4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட விவோ Y211 ஸ்மார்ட்போனை அமேசான் தளத்தில் ரூ.13,990-விலையில் வாங்க முடியும். குறிப்பாக விவோ Y211 ஸ்மார்ட்போன் ஆனது 6.51-இன்ச் எச்டி பிளஸ் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 720x1,600 பிக்சல் தீர்மானம், மீடியாடெக் ஹீலியோ பி35 சிப்செட் வசதி, ஆண்ட்ராய்டு 11 இயங்குதளம், 5000 எம்ஏஎச் பேட்டரி, 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு என பல்வேறு சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். அதேபோல் விவோ Y21 ஸ்மார்ட்போனின் பின்புறம் 13எம்பி பிரைமரி கேமரா+ 2எம்பி secondary சென்சார் என மொத்தம் இரண்டுகேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி செல்பீ கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். அதேபோல் யூஎஸ்பி டைப்-சி போர்ட், டூயல் சிம் ஸ்லாட்டுகள், 4ஜி உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது விவோ Y21.
விவோ Y20G 2021
4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட விவோ Y20G 2021 ஸ்மார்ட்போனை அமேசான் தளத்தில் ரூ.13,390-விலையில் வாங்க முடியும். அதேபோல் விவோ Y20G ஸ்மார்ட்போன் ஆனது 6.51-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு மீடியாடெக் ஹீலியோ ஜி80 எஸ்ஒசி சிப்செட் வசதி, ஆண்ட்ராய்டு 11 இயங்குதளம், 5000 எம்ஏஎச் பேட்டரி உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் உள்ளன. மேலும் விவோ Y20G ஸ்மார்ட்போனின் பின்புறம் 13எம்பி பிரைமரி சென்சார் + 2எம்பி டெப்த் சென்சார் + 2எம்பி மேக்ரோ லென்ஸ்
என மொத்தம் மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் 8எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட பல்வேறு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம். 4ஜி வோல்ட்இ, வைஃபை 802.11 பி / ஜி / என், புளூடூத் 4.2, ஜிபிஎஸ் மற்றும் மைக்ரோ யூ.எஸ்.பி போர்ட் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.
விவோ Y12G
3ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட விவோ Y12G ஸ்மார்ட்போனை அமேசான் தளத்தில் ரூ.11,990-விலையில் வாங்க முடியும். மேலும் விவோ Y12G ஸ்மார்ட்போன் ஆனது 6.51-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 720x1,600 பிக்சல் தீர்மானம், 20:9 என்ற திரைவிகிதம், குவால்காம் ஸ்னாப்டிராகன் 439 சிப்செட் வசதி, ஆண்ட்ராய்டு 11 இயங்குதளம், 5000 எம்ஏஎச் பேட்டரி, 10 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு உள்ளிட்ட பல சிறப்பான அமசங்கள் இவற்றுள் அடக்கம். அதேபோல் விவோ Y12G ஸ்மார்ட்போனில் 13எம்பி பிரைமரி லென்ஸ் + 2எம்பி secondary சென்சார் என மொத்தம் இரண்டு கேமராக்கள்
பொருத்தப்பட்டுள்ளன. குறிப்பாக இதன் கேமராவைப் பயன்படுத்தி இரவு நேரங்களில் கூட துல்லியமான புகைப்படங்களை எடுக்க முடியும். மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி செல்பீ கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது
விவோ Y12G. மேலும் 4 ஜி எல்டிஇ, வைஃபை, ப்ளூடூத் வி 5.0, ஜிபிஎஸ்/ ஏ-ஜிபிஎஸ், எஃப்எம் ரேடியோ, மைக்ரோ-யூஎஸ்பி மற்றும் 3.5 மிமீ ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இடம்பெற்றுள்ளன.
விவோ Y20T
6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட விவோ Y20T ஸ்மார்ட்போனை ரூ.15,490-விலையில் வாங்க முடியும். குறிப்பாக விவோ ஒய் 20 டி ஆனது ஆண்ட்ராய்டு 11 அடிப்படையிலான ஃபன்டச் ஓஎஸ் 11.1 உடன் இயக்குகிறது. இது 6.51' இன்ச் எச்டி+ கொண்ட 720 x 1,600 பிக்சல்கள் உடைய டிஸ்பிளேவை ஹாலோ ஃபுல்வியூ அம்சத்துடன் கொண்டுள்ளது. ஹூட்டின் கீழ், இந்த ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 662 சிப்செட் மூலம் இயங்குகிறது. கேமிங் ஆர்வலர்களுக்கு, விவோ ஒய் 20 டி அல்ட்ரா கேம் மோட், எஸ்போர்ட்ஸ் மோட், 4 டி கேம் வைப்ரேஷன் மற்றும் கேம் பிக்சர்-இன்-பிக்சர் ஆகியவற்றுடன் மல்டி டர்போ 5.0 உடன் வருகிறது. புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களுக்கு, இந்த சாதனம் 13 மெகாபிக்சல் முதன்மை சென்சார், 2 மெகாபிக்சல் கொண்ட மேக்ரோ ஷூட்டர் மற்றும் மற்றொரு 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார் ஆகிய மூன்று பின்புற கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. இந்த அசத்தலான ஸ்மார்ட்போன்.


Click it and Unblock the Notifications