Home
Deal of the day

அமேசான்: ரூ.9000-க்கு கீழ் கிடைக்கும் அசத்தலான ஸ்மார்ட்போன்கள்.! இதோ பட்டியல்.!

நோக்கியா, ரியல்மி, டெக்னோ போன்ற நிறுவனங்கள் கம்மி விலையில் பல அசத்தலான ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளன. குறிப்பாக கடந்த வருடம் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகளுக்கு தகுந்தபடி சிறந்த ஸ்மார்டபோன்களை கம்மி விலையில் இந்த நிறுவனங்கள் தான் அறிமுகம் செய்தன என்பது குறிப்பிடத்தக்கது.

அமேசான்: ரூ.9000-க்கு கீழ் கிடைக்கும் அசத்தலான ஸ்மார்ட்போன்கள்.! இதோ ப

இப்போது அமேசான் தளத்தில் ரூ.9000-க்கு கீழ் கிடைக்கும் அசத்தலான ஸ்மார்ட்போன்களின் பட்டியலை சற்று விரிவாகப் பார்ப்போம்.

நோக்கியா சி20 பிளஸ்

3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரி வசதி கொண்ட நோக்கியா சி20 பிளஸ் ஸ்மார்ட்போனை அமேசான் தளத்தில் ரூ.8,999-விலையில் வாங்க முடியும். நோக்கியா சி20 பிளஸ் ஆனது 6.5-இன்ச் டிஸ்பிளே வசதியுடன் வெளிவந்துள்ளது. மேலும் ஆக்டோ-கோர் Unisoc SC9863a சிப்செட் வசதி,ஆண்ட்ராய்டு 11 (Go edition) இயங்குதளம், 5000 எம்ஏஎச் பேட்டரி உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த நோக்கியா சி20 பிளஸ் ஸ்மார்ட்போன். நோக்கியா சி20 பிளஸ் ஸ்மார்ட்போனின் பின்புறம் 8எம்பி பிரைமரி சென்சார் + 2எம்பி டெப்த் சென்சார் என மொத்தம் இரண்டு கேமராக்கள் இடம்பெற்றுள்ளன. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 5எம்பி செல்பீ கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன். மேலும் 4ஜி எல்டிஇ, வைஃபை 802.11, ப்ளூடூத் வி4.1, ஜிபிஎஸ்/ஏஜிபிஎஸ், எஃப்எம் ரேடியோ, மைக்ரோ-யுஎஸ்பி, 3.5 மிமீ ஹெட்போன் ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த நோக்கியா சி20 பிளஸ் சாதனம்.

ரியல்மி C21Y

3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி மெமரி கொண்ட ரியல்மி C21Y ஸ்மார்ட்போனை அமேசான் தளத்தில் ரூ.8,778-விலையில் வாங்க முடியும்.ரியல்மி C21Y ஸ்மார்ட்போன் ஆனது 6.5-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்புடன் வெளிவந்துள்ளது. பின்பு 720x1,600 பிக்சல் தீர்மானம், 20:9 என்ற திரைவிகிதம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். ரியல்மி C21Y ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் Unisoc T610 SoC சிப்செட் வசதி உள்ளது. மேலும் Realme UI சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன்.ரியல்மி C21Y சாதனத்தின் பின்புறம் 13எம்பி பிரைமரி சென்சார் + 2எம்பி மேக்ரோ சென்சார் + 2எம்பி monochrome சென்சார் என மொத்தம் மூன்று கேமராக்கள் உள்ளன. பின்பு செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 5எம்பி செல்பீ கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது இந்த ரியல்மி C21Y ஸ்மார்ட்போன் மாடல். ரியல்மி C21Y ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் கைரேகை சென்சார் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டு வெளிவந்துள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன். குறிப்பாக 4ஜி எல்டிஇ, வைஃபை 802.11, ப்ளூடூத் வி5.0,ஜிபிஎஸ்/ஏ-ஜிபிஎஸ், மைக்ரோ-யுஎஸ்பி போர்ட், 3.5 மிமீ ஹெட்போன் ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த ரியல்மி C21Y ஸ்மார்ட்போன்.

ரெட்மி 9ஏ

2ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி மெமரி கொண்ட ரெட்மி 9ஏ ஸ்மார்ட்போனை அமேசான் தளத்தில் ரூ.7,499-விலையில் வாங்க முடியும். ரெட்மி 9ஏ ஸ்மார்ட்போன் மாடல் ஆனது 6.53-இன்ச் எச்டி பிளஸ் ஐபிஎஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு1600 x 720 பிக்சல் திர்மானம் மற்றும் 20:9 என்ற திரைவிகிதம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்தது. இந்த ரெட்மி 9ஏ ஸ்மார்ட்போனில் 2ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி25 பிராசஸர் வசதி உடன் IMG PowerVR GE8320 GPU இடம்பெற்றுள்ளது, மேலும் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு அருமையாக இருக்கும். ரெட்மி 9ஏ ஸ்மார்ட்போன் மாடலில் 2ஜிபி/3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது, மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டு வெளிவந்தது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். குறிப்பாக சிறந்த வடிவமைப்புடன் இந்த சாதனம் வெளிவந்தது. ரெட்மி 9ஏ ஸ்மார்ட்போனின் பின்புறம் 13எம்பி கேமரா பொருத்தப்பட்டுள்ளது, பின்பு 5எம்பி செல்பி கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் உள்ளிட்ட பல்வேறு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். இந்த ஸ்மார்ட்போனில் 5000எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது, அதிக நேரம் பயன்படுத்த முடியும். பின்பு பாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்ப ஆதரவுடன் இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது. ப்ளூடூத் 5, டூயல் 4ஜி வோல்ட்இ,வைஃபை 802.11, ஜிபிஎஸ் + க்ளோனஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

Tecno Spark Go 2021 ஸ்மார்ட் போன்

இந்த Tecno Spark Go 2021 ஸ்மார்ட் போன் அமேசான் வலைத்தளத்தில் இப்போது சலுகை விலையில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட் போனின் அசல் விலை ரூ. 8,999 ஆகும். இந்த ஸ்மார்ட்போன் இப்போது சிறப்பு விற்பனையின் ஒரு பகுதியாக வெறும் ரூ. 7,221 விலையில் வாங்க கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் 2 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி ஸ்டோரேஜ் உடன் வருகிறது. இது 6.52' எச்டி பிளஸ் கொண்ட டிஸ்பிளே உடன் வருகிறது. இது 13 எம்பி AI டூயல் ரியர் கேமரா மற்றும் 8 எம்பி செல்பி கேமரா உடன் வருகிறது. இது MediaTek பிராசஸர் உடன் 5000mAh பேட்டரியை ஆதரிக்கிறது.

English summary
List of smartphones available for less than Rs 9,000 on Amazon: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X