அமேசான்: ரூ.18,000-க்கு கீழ் கிடைக்கும் அட்டகாசமான ஸ்மார்ட்போன்கள்.! இதோ பட்டியல்.!
இந்த ஆண்டு பல 5ஜி ஸ்மார்ட்போன்கள் பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக 5ஜி சேவை இந்தியாவில் விரைவில் அறிமுகம் செய்யப்படும் என்பதால், தொடர்ந்து பல நிறுவனங்கள் 5ஜி ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்த வண்ணம் உள்ளது.

குறிப்பாக சியோமி, ரியல்மி, விவோ போன்ற நிறுவனங்கள் அதிகளவில் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளன. மேலும் இப்போது அமேசான் தளத்தில் ரூ.18,000-க்கு கீழ் கிடைக்கும் அட்டகாசமான ஸ்மார்ட்போன்களின் பட்டியலை சற்று விரிவாகப் பார்ப்போம்.
ரெட்மி நோட் 10 ப்ரோ
6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி வசதி கொண்ட ரெட்மி நோட் 10 ப்ரோ ஸ்மார்ட்போனை அமேசான் தளத்தில் ரூ.17,999-விலையில் வாங்க முடியும். ரெட்மி நோட் 10 ப்ரோ ஸ்மார்ட்போன் 6.67 இன்ச் சூப்பர் அமோலெட் முழு எச்டி ப்ளஸ் டிஸ்ப்ளேவுடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீத டிஸப்ளே எச்டிஆர் 10 ஆதரவை கொண்டிருக்கிறது. ரெட்மி நோட் 10 ப்ரோ ஸ்மார்ட்போனானது நான்கு பின்புற கேமராக்களுடன் வருகிறது. குவாட் கேமரா அமைப்போடு இந்த ஸ்மார்ட்போன் 64 மெகாபிக்சல் முதன்மை கேமரா, 8 எம்பி அல்ட்ரா வைட் ஆங்கிள் கேமரா, 5 எம்பி சூப்பர் மேக்ரோ ஷூட்டர் கேமரா மற்றும் 2 எம்பி ஆழ சென்சார் உடன் வருகிறது. ரெட்மி நோட் 10 ப்ரோ ஸ்மார்ட்போனின் முன்புறத்தில் 16 எம்பி செல்பி கேமரா பொருத்தப்பட்டுள்ளது. ரெட்மி நோட் 10 ப்ரோ ஸ்மார்ட்போனானது 5020 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 33 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங்
ஆதரவோடு வருகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 11 ஆதரவோடு வருகிறது. 4 ஜி, வைஃபை, ஜிபிஎஸ், ப்ளூடூத், ஐஆர் பிளாஸ்டர், என்எப்சி, 3.5 மிமீ ஆடியோ ஜாக், யூஎஸ்பி டைப்-சி போர்ட் ஆதரவுகளை கொண்டுள்ளது ரெட்மி நோட் 10 ப்ரோ. அதேபோல் இந்த ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 732ஜி சிப்செட் வசதி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சாம்சங் கேலக்ஸி எம்32
6ஜிப ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட சாம்சங் கேலக்ஸி எம்32 ஸ்மார்ட்போன் மாடலை அமேசான் தளத்தில் ரூ.16,999-விலையில் வாங்க முடியும். குறிப்பாக 6.4-இன்ச் டிஸ்பிளே, 800 நிட்ஸ் பிரைட்நஸ், கொரில்லா கிளாஸ் 5, மீடியாடெக் ஹீலியோ ஜி80 ஆக்டோ-கோர் ப்ராசஸர், 6000 எம்ஏஎச் பேட்டரி, ஆண்ட்ராய்டு 11 இயங்குதளம் மற்றும் பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளது இந்த சாம்சங் கேலக்ஸி எம்32 மாடல். அதேபோல் இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் 64எம்பி மெயின் கேமரா + 8எம்பி ரியர் கேமரா + 2எம்பி டெப்த் கேமரா + 2எம்பி மேக்ரோ கேமரா என மொத்தம் நான்கு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கு 20எம்பி செல்பீ கேமராவைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன்.
விவோ Y21T
4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட விவோ Y21T ஸ்மார்ட்போனை அமேசான் தளத்தில் ரூ.16,490-விலையில் வாங்கமுடியும். விவோ Y21T ஸ்மார்ட்போம் டூயல் சிம் (நானோ) உடன் வருகிறது. இந்த புதிய Vivo Y21T ஆனது Funtouch OS 12 உடன் Android 11 இல் இயங்குகிறது. இது 6.58 இன்ச் HD+ (720x1,600 பிக்சல்கள்) டிஸ்ப்ளே கொண்டுள்ளது. ஹூட்டின் கீழ், தொலைபேசியில் ஆக்டா-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 680 சிப்செட் உடன் 4ஜிபி ரேம் உடன் இணைக்கப்பட்டுள்ளது. Vivo Y21T மூன்று பின்புற கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது, இதில் f/1.8 லென்ஸுடன் 50 மெகாபிக்சல் முதன்மை சென்சார் உள்ளது, மேலும் f/2.4 மேக்ரோ லென்ஸுடன் 2 மெகாபிக்சல் இரண்டாம் நிலை சென்சார் மற்றும் 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார் உள்ளது.Vivo Y21T ஆனது f/1.8 லென்ஸுடன் 16 மெகாபிக்சல் செல்ஃபி கேமராவுடன் வருகிறது.ஸ்மார்ட்போனில் 128GB உள் சேமிப்புஉள்ளது. கூடுதல் ஸ்டோரேஜ் வசதிக்காக இது ஒரு பிரத்தியேக ஸ்லாட் வழியாக 1TB வரை விரிவாக்கத்தை ஆதரிக்கிறது. Vivo Y21T இல் உள்ள இணைப்பு விருப்பங்களில் 4G LTE, Wi-Fi, Bluetooth v5, GPS/ A-GPS, FM ரேடியோ, USB டைப்-C மற்றும் 3.5mm ஹெட்ஃபோன் ஜாக் ஆகியவை அடங்கும். பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை ஸ்கேனரும் உள்ளது. Vivo Y21T ஆனது 18W ஃபாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கும் 5,000mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. ஸ்மார்ட்போன் 164.26x76.08x8mm நடவடிக்கைகள் மற்றும் 182 கிராம் எடை கொண்டது.
ஒப்போ ஏ55
4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட ஒப்போ ஏ55 ஸ்மார்ட்போனை அமேசான் தளத்தில் ரூ.15,490-விலையில் வாங்க முடியும். மேலும் இந்த ஸ்மார்ட்போன் மாடல் 6.51-இன்ச் டிஸ்பிளே வசதியுடன் வெளிவந்துள்ளது. குறிப்பாக ஒப்போ ஏ55 ஸ்மார்ட்போனில் 2.3ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் மீடியாடெக் ஹீலியோ 35 சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது. எனவே பயன்படுத்தவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் ஆண்ட்ராய்டு 11 இயங்குதளம்,5000 எம்ஏஎச் பேட்டரி உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். ஒப்போ ஏ55 ஸ்மார்ட்போனின் பின்புறம் 50எம்பி மெயின் கேமரா + 2எம்பி Mono கேமரா மேக்ரோ கேமரா என மொத்தம் மூன்று கேமராக்கள் உள்ளன. செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமரா ஆதரவுடன் வெளிவந்துள்ளது ஒப்போ ஏ55 மாடல்.


Click it and Unblock the Notifications