அமேசான்: ரூ.17,000-க்கு கீழ் கிடைக்கும் அசத்தலான ஸ்மார்ட்போன்கள்.! இதோ பட்டியல்.!
விவோ, ஒப்போ, சியோமி ஸ்மார்ட்போன்கள் இந்திய சந்தையில் தொடர்ந்து பட்ஜெட் விலையில் அதிக ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகின்றன. குறிப்பாக இந்நிறுவனங்கள் இந்த ஆண்டு பல 5ஜி ஸ்மார்ட்போன்களை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இப்போது அமேசான் தளத்தில் ரூ.17,000-க்கு கீழ் கிடைக்கும் அசத்தலான ஸ்மார்ட்போன்களின் பட்டியலை சற்று விரிவாகப் பார்ப்போம்.
ரெட்மி 10 பிரைம்
6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ரெட்மி 10 பிரைம் ஸ்மார்ட்போனை அமேசான் தளத்தில் ரூ.14,999-விலையில் வாங்க முடியும். ரெட்மி 10 பிரைம் ஸ்மார்ட்போன் மாடல் 6.5-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்புடன் வெளிவந்துள்ளது. பெரிய டிஸ்பிளே என்பதால் வீடியோ கேம் உள்ளிட்ட பல்வேறு வசதிகளுக்கு மிக அருமையாக பயன்படுத்தலாம். மேலும் 1,080x2,400 பிக்சல் தீர்மானம், 20:9 என்ற திரைவிகிதம், கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு, 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த புதிய சாதனம். ரெட்மி 10 பிரைம் ஸ்மார்ட்போனின் கேமரா அமைப்பு மிகவும் அருமையாக இருக்கிறது என்றே கூறலாம். அதாவது இந்த சாதனத்தின் பின்புறம் 50எம்பி பிரைமரி சென்சார் + 8எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 2எம்பி டெப்த் சென்சார் + 2எம்பி மேக்ரோ சென்சார் என மொத்தம் நான்கு கேமராக்கள் உள்ளன. ரெட்மி 10 பிரைம் ஸ்மார்ட்போனில் 8எம்பி செல்பீ கேமரா வசதி கொடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் ரெட்மி 10 பிரைம் சாதனத்தில் ஆக்டோ-கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி88 சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது. மேலும் MIUI 12.5 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை கொண்டுள்ளது ரெட்மி 10 பிரைம் ஸ்மார்ட்போன். ஆக்ஸிலரோமீட்டர், ஆம்பியண்ட் லைட், மேக்னடோமீட்டர் மற்றும் ப்ராக்ஸிமிட்டி போன்ற சென்சார்களை கொண்டுள்ளது இந்த ரெட்மி 10 பிரைம். 4ஜி எல்டிஇ, வைஃபை 802.11, ப்ளூடூத் வி5.1,ஜிபிஎஸ்/ஏ-ஜிபிஎஸ், ஐஆர் பிளாஸ்டர், எஃப்எம் ரேடியோ, யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5 மிமீ ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த ரெட்மி 10 பிரைம்..
ரியல்மி நார்சோ 30
6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ரியல்மி நார்சோ 30 ஸ்மார்ட்போனை அமேசான் தளத்தில் ரூ.15,499-விலையில் வாங்க முடியும். ரியல்மி நார்சோ 30 ஸ்மார்ட்போன் ஆனது 6.5-இன்ச் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டு வெளிவந்துள்ளது. மேலும் 1080 x2400 பிக்சல்கள், 90 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதம், 90.5 சதவிகிதம் ஸ்கிரீன்-டு-பாடி விகிதம், 405 பிபிஐ பிக்சல் அடர்த்தி மற்றும் 580 நிட்ஸ் பிரைட்நஸ், மீடியாடெக் ஹீலியோ ஜி95 சிப்செட் வசதி, ஆண்ட்ராய்டு 11 இயங்குதளம், 5000 எம்ஏஎச் பேட்டரி, 30 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, கைரேகை ஸ்கேனர் வசதி என பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த ரியல்மி நார்சோ 30 மாடல். ரியல்மி நார்சோ 30 ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி பிரைமரி சென்சார் + 2எம்பி மேக்ரோ சென்சார் + 2எம்பி டெப்த் சென்சார் என மொத்தம் மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி செல்பீ கேமரா ஆதரவுடன் வெளிவந்துள்ளது ரியல்மி நார்சோ 30 மாடல். அதேபோல் 3.5மிமீ ஆடியோ ஜாக், டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 801.11, ப்ளூடூத் 5.0, என்எப்சி, ஜிபிஎஸ்/ஏ-ஜிபிஎஸ் என பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது ரியல்மி நார்சோ 30.
சாம்சங் கேலக்ஸி ஏ12
6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட சாம்சங் கேலக்ஸி ஏ12 ஸ்மார்ட்போனை அமேசான் தளத்தில் ரூ.15,499-விலையில் வாங்க முடியும். சாம்சங் கேலக்ஸி ஏ12 ஸ்மார்ட்போன் ஆனது 6.5-இன்ச் TFT Infinity-V டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. மேலும் 720x1,600 பிக்சல் தீர்மானம், 20:9 என்ற திரைவிகிதம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் வெளிவந்துள்ளது. சாம்சங் கேலக்ஸி ஏ12 ஸ்மார்ட்போனில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட octa core பிராசஸர் வசதி மற்றும் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். சாம்சங் கேலக்ஸி ஏ12 ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி பிரைமரி கேமரா + 5எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 2எம்பி டெப்த் சென்சார் + 2எம்பி மேக்ரோ லென்ஸ் என மொத்தம் நான்கு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் 8எம்பி செல்பீ கேமரா உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளது இந்த சாதனம். சாம்சங் கேலக்ஸி ஏ12 ஸ்மார்ட்போனில் 5000 எம்எஏச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது,
எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் 15 வாட் பாஸ்ட் சார்ஜிங் அம்சத்தினை கொண்டுள்ளது இந்த அட்டகாமசான ஸ்மார்ட்போன் மாடல். வைஃபை, புளூடூத் 5.1, ஜி.பி.எஸ், க்ளோனாஸ், நாவிக், டூயல் சிம் மற்றும் யூ.எஸ்.பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.
ஒப்போ ஏ54
4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ஒப்போ ஏ54 ஸ்மார்ட்போனை அமேசான் தளத்தில் ரூ.14,990-விலையில் வாங்க முடியும். ஒப்போ ஏ54 ஸ்மார்ட்போன் ஆனது 6.51-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 720x1,600 பிக்சல் தீர்மானம், 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன்மாடல். ஒப்போ ஏ54 ஸ்மார்ட்போனில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஆக்டோ-கோர் மீடியாடெக் ஹீலியோ பி35 (எம்டி6765) பிராசஸர் வசதி இடம்பெறுள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன். விரைவில் ஆண்ட்ராய்டு 11 அப்டேட் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒப்போ ஏ54 ஸ்மார்ட்போனின் பின்புறம் 13எம்பி பிரைமரி சென்சார் + 2எம்பி செகன்டரி சென்சார் + 2எம்பி tertiary சென்சார் என மொத்தம் மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் வீடியோ கால் அழைப்புகளுக்கு என்றே 16எம்பி செல்பீ கேமரா இவற்றுள்ள அடக்கம். குறிப்பாக இரவு நேரங்களில் கூட இந்த ஸ்மார்ட்போனின் கேமரா கொண்டு துல்லியமான வீடியோக்களை எடுக்கமுடியும் என்று ஒப்போ நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒப்போ ஏ54 ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, கைரேகை சென்சார் என பல்வேறு அட்டகாச அம்சங்களை கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன்மாடல். 4ஜி எல்டிஇ, வைஃபை 802.11 ஏசி, ப்ளூடூத் 5.0, ஜிபிஎஸ் / ஏ-ஜிபிஎஸ், என்எப்சி, ஐஆர் பிளாஸ்டர், ஹெட்ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த புதிய ஒப்போ ஏ54 ஸ்மார்ட்போன்.


Click it and Unblock the Notifications