Home
Deal of the day

அமேசான்: ரூ.16,000-க்கு கீழ் கிடைக்கும் அசத்தலான ஸ்மார்ட்போன்கள்.! இதோ பட்டியல்.!

விவோ நிறுவனம் நேற்று புதிய விவோ டி1 5ஜி ஸ்மார்ட்போனை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்துள்ளது. இதேபோல் பல 5ஜி ஸ்மார்ட்போன்களை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது விவோ. ஒப்போ, சியோமி, சாம்சங் போன்ற நிறுவனங்களும் விரைவில் பல 5ஜி ஸ்மார்ட்போன்களை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.

அமேசான்: ரூ.16,000-க்கு கீழ் கிடைக்கும் அசத்தலான ஸ்மார்ட்போன்கள்.!

குறிப்பாக இந்தியாவில் 5ஜி ஸ்மார்ட்போன்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது என்றுதான் கூறவேண்டும். இப்போது அமேசான் தளத்தில் ரூ.16,000-க்கு கீழ் கிடைக்கும் அசத்தலான ஸ்மார்ட்போன்களின் பட்டியலை சற்று விரிவாகப் பார்ப்போம்.

ரெட்மி நோட் 10எஸ்

6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட ரெட்மி நோட் 10எஸ் ஸ்மார்ட்போன் மாடலை அமேசான் தளத்தில் ரூ.14,999-விலையில் வாங்க முடியும். ரெட்மி நோட் 10எஸ் ஸ்மார்ட்போனானது கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்புடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் 6.43 இன்ச் அமோலெட் டிஸ்ப்ளே வசதியோடு வருகிறது. இது 2400 x 1080 பிக்சல்கள் முழு எச்டி ப்ளஸ் தீர்மானத்துடன் வருகிறது. அதேபோல் ஹூட்டின் கீழ் இந்த ஸ்மார்ட்போன் ஆக்டோ கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி95 சிப்செட் உடன் வருகிறது. இமேஜிங் ஆதரவுக்கு என ரெட்மி நோட் 10 எஸ் ஸ்மார்ட்போனில் 64 மெகாபிக்சல் முதன்மை கேமரா, 8 மெகாபிக்சல் இரண்டாம் நிலை கேமரா மற்றும் 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார் ஆகிய குவாட் கேமரா அமைப்பைக் கொண்டிருக்கிறது. ஸ்மார்ட்போனின் முன்பக்கத்தில் 13 மெகாபிக்சல் செல்பி கேமரா இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனானது 5000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 33 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பத்துடன் வருகிறது. இணைப்பு விருப்பங்களில் 4 ஜி, வைஃபை, ஜிபிஎஸ், ப்ளூடூத், ஐஆர் பிளாஸ்டர், என்எப்சி, 3.5 மிமீ ஆடியோ ஜாக், யூஎஸ்பி டைப்-சி போர்ட் ஆதரவுகளை கொண்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி எம்21 2021 எடிஷன்

4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட சாம்சங் கேலக்ஸி எம்21 2021 ஸ்மார்ட்போனை அமேசான் தளத்தில் ரூ.12,999-விலையில் வாங்க முடியும். மேலும் சாம்சங் கேலக்ஸி எம்21 2021 எடிஷன் ஸ்மார்ட்போன் ஆனது 6.4-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் Super AMOLED இன்பினிட்டி-யு டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 1,080x2,340 பிக்சல் தீர்மானம், 19.5:9 என்ற திரைவிகிதம், கார்னிங் கொரில்லா கிளாஸ் ஆதரவு, ஆண்ட்ராய்டு 11 இயங்குதளம், 6000 எம்ஏஎச் பேட்டரி, ஆக்டோ-கோர் எக்ஸிநோஸ் 9611 எஸ்ஒசி சிப்செட் வசதி உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளன. குறிப்பாக இந்த சாதனத்தின் பின்புறம் 48எம்பி பிரைமரி சென்சார் + 8எம்பி வைடு லென்ஸ் + 5எம்பி டெப்த் சென்சார் என மொத்தம் மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் செல்பீகளுக்கும்,
வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 20எம்பி செல்பீ கேமரா ஆதரவு கொண்டுள்ளது கேலக்ஸி எம்21 2021.

நோக்கியா ஜி20

4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட நோக்கியா ஜி20 ஸ்மார்ட்போனை அமேசான் தளத்தில் ரூ.12,490-விலையில் வாங்க முடியும். குறிப்பாக நோக்கியா ஜி20 ஸ்மார்ட்போன் ஆனது 6.5-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. மேலும் 1600x720 பிக்சல் தீர்மானம், 20: 9 திரை விகிதம், 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், ஆக்டோ-கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி35 எஸ்ஒசி சிப்செட் வசதி, ஆண்ட்ராய்டு 11 இயங்குதளம், 5050 எம்ஏஎச் பேட்டரி ஆதரவு, 10 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, கைரேகை சென்சார், கூகுள் அசிஸ்டென்ட் பட்டன் என பல்வேறு அசத்தலான அம்சங்களை கொண்டுள்ளது இந்த நோக்கியா ஜி20 ஸ்மார்ட்போன் மாடல். அதேபோல் இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் 48 மெகாபிக்சல் முதன்மை சென்சார் + 5 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் ஷூட்டர் + 2 மெகாபிக்சல் மேக்ரோ ஷூட்டர் + 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார் என மொத்தம் நான்கு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி செல்பீ கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன் மாடல். மேலும் 4ஜி எல்டிஇ, வைஃபை 802.11 பி /ஜி/ என், ப்ளூடூத் வி 5.0, ஜிபிஎஸ்/ஏ-ஜிபிஎஸ், என்எப்சி, எஃப்எம் ரேடியோ, யூ.எஸ்.பி டைப்-சி, 3.5 மிமீ ஹெட்ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது நோக்கியா ஜி20

ஒப்போ ஏ16

4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட ஒப்போ ஏ16 ஸ்மார்ட்போனை அமேசான் தளத்தில் ரூ.13,490-விலையில் வாங்க முடியும். இந்த ஒப்போ ஏ16 ஸ்மார்ட்போன் ஆனது 6.52-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 720 x 1600 பிக்சல் தீர்மானம், 20:9 என்ற திரைவிகிதம், 480 நிட்ஸ் ப்ரைட்னஸ், 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு இந்த புதிய ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. பெரிய டிஸ்பிளே என்பதால் இந்த சாதனத்தை பயன்படுத்துவதற்கு அருமையாக இருக்கும். அதேசமயம் இதன் வடிவமைப்பும் மிக அருமையாக உள்ளது. ஒப்போ ஏ16 ஸ்மார்ட்போனில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மீடியாடெக் ஹீலியோ ஜி35 சிப்செட் வசதி உள்ளது. எனவே இயக்கத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும் என்றே கூறலாம். பின்பு ColorOS 11.1 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த புதிய ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. ஒப்போ ஏ16 ஸ்மார்ட்போனின் பின்புறம் 13எம்பி பிரைமரி சென்சார் + 2எம்பி மேக்ரோ சென்சார் + 2எம்பி டெப்த சென்சார் என மொத்தம் மூன்று கேமராக்கள் உள்ளன. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி செல்பீ கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடல். இந்த ஒப்போ ஏ16 ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் 10 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். பின்பு டூயல் 4ஜி வோல்ட்இ, என்எப்சி, ப்ளூடூத், வைஃபை, 3.5 மிமீ ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த புதிய ஒப்போ ஏ16 ஸ்மார்ட்போன்.

English summary
List of smartphones available for less than Rs 16,000 on Amazon: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X