அமேசான்: ரூ.13,000-க்கு கீழ் கிடைக்கும் அசத்தலான ஸ்மார்ட்போன்கள்.! இதோ பட்டியல்.!
சியோமி, சாம்சங், ரியல்மி உள்ளிட்ட நிறுவனங்கள் பட்ஜெட் விலையில் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய அதிக ஆர்வம் காட்டுகின்ற என்றுதான் கூறவேண்டும். குறிப்பாக இந்நிறுவனங்கள் அறிமுகம் செய்துள்ள ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் அதிகளவில் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

அதேபோல் இந்நிறுவனங்கள் தொடர்ந்து 5ஜி ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்த வண்ணம் உள்ளன. மேலும் இப்போது அமேசான் தளத்தில் ரூ.13,000-க்கு கீழ் கிடைக்கும் அசத்தலான ஸ்மார்ட்போன்களின் பட்டியலை சற்று விரிவாகப் பார்ப்போம்.
ரெட்மி 10 பிரைம்
4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட ரெட்மி 10 பிரைம் கொண்ட ரெட்மி 10 பிரைம் ஸ்மார்ட்போனை ரூ.12,499-விலையில் வாங்க முடியும். ரெட்மி 10 பிரைம் ஸ்மார்ட்போன் மாடல் 6.5-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்புடன் வெளிவந்துள்ளது. பெரிய டிஸ்பிளே என்பதால் வீடியோ கேம் உள்ளிட்ட பல்வேறு வசதிகளுக்கு மிக அருமையாக பயன்படுத்தலாம். மேலும் 1,080x2,400 பிக்சல் தீர்மானம், 20:9 என்ற திரைவிகிதம், கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு, 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த புதிய சாதனம். ரெட்மி 10 பிரைம் ஸ்மார்ட்போனின் கேமரா அமைப்பு மிகவும் அருமையாக இருக்கிறது என்றே கூறலாம். அதாவது இந்த சாதனத்தின் பின்புறம் 50எம்பி பிரைமரி சென்சார் + 8எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 2எம்பி டெப்த் சென்சார் + 2எம்பி மேக்ரோ சென்சார் என மொத்தம் நான்கு கேமராக்கள் உள்ளன. ரெட்மி 10 பிரைம் ஸ்மார்ட்போனில் 8எம்பி செல்பீ கேமரா வசதி கொடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் ரெட்மி 10 பிரைம் சாதனத்தில் ஆக்டோ-கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி88 சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது. மேலும் MIUI 12.5 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை கொண்டுள்ளது ரெட்மி 10 பிரைம் ஸ்மார்ட்போன். ஆக்ஸிலரோமீட்டர், ஆம்பியண்ட் லைட், மேக்னடோமீட்டர் மற்றும் ப்ராக்ஸிமிட்டி போன்ற சென்சார்களை கொண்டுள்ளது இந்த ரெட்மி 10 பிரைம். 4ஜி எல்டிஇ, வைஃபை 802.11, ப்ளூடூத் வி5.1,ஜிபிஎஸ்/ஏ-ஜிபிஎஸ், ஐஆர் பிளாஸ்டர், எஃப்எம் ரேடியோ, யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5 மிமீ ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த ரெட்மி 10 பிரைம்..
சாம்சங் கேலக்ஸி எம்12
4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட சாம்சங் கேலக்ஸி எம்12 ஸ்மார்ட்போனை அமேசான் தளத்தில் ரூ.10,499-விலையில் வாங்க முடியும். சாம்சங் கேலக்ஸி எம்12 ஸ்மார்ட்போன் ஆனது 6.5-இன்ச் எச்டி பிளஸ் டிஎப்டி இன்பினிட்டி வி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 720x1,600 பிக்சல் தீர்மானம், 20:9 என்ற திரைவிகிதம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். அதேபோல் இந்த சாதனம் வாட்டர் டிராப்-ஸ்டைல் டிஸ்ப்ளே உள்ளிட்ட பல
அம்சங்களை கொண்டுள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். சாம்சங் கேலக்ஸி எம்12 ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி பிரைமரி சென்சார் + 5எம்பி செகன்டரி சென்சார் +2எம்பி மேக்ரோ சென்சார் + 2எம்பி டெப்த் சென்சார் என மொத்தம் நான்கு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் 8எம்பி செல்பீ கேமரா ஆதரவுடன் வெளிவந்துள்ளது இந்த கேலக்ஸி எம்12 ஸ்மார்ட்போன். சாம்சங் கேலக்ஸி எம்12 மாடலில் ஆக்டோ-கோர் எக்ஸிநோஸ் 850 எஸ்ஒசி சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் ஆண்ட்ராய்டு 11 (One UI Core) இயங்குதளத்தைஅடிப்படையாகக் கொண்டு வெளிவந்துள்ளது இந்த சாம்சங் கேலக்ஸி எம்12 ஸ்மார்ட்போன். சாம்சங் கேலக்ஸி எம்12 ஸ்மார்ட்போனில் 6000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது.
மேலும் பாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த அசத்தலான சாம்சங் கேலக்ஸி எம்12 ஸ்மார்ட்போன். டூயல் சிம், புளூடூத் 5.0, வைஃபை, ஜி.பி.எஸ், யூ.எஸ்.பி டைப்-சி மற்றும் 3.5 மிமீ ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த சாம்சங் கேலக்ஸி எம்12 ஸ்மார்ட்போன்.
ரியல்மி நார்சோ 50ஏ
ரியல்மி நார்சோ 50ஏ ஸ்மார்ட்போனை அமேசான் தளத்தில் ரூ.11,499-விலையில் வாங்க முடியும். ரியல்மி நார்சோ 50ஏ ஸ்மார்ட்போன் மாடல் 6.5-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. மேலும் 720x1,600 பிக்சல் தீர்மானம், 20:9 எனற திரைவிகிதம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது. அதேபோல் ரியல்மி நர்சோ 50ஏ ஸ்மார்ட்போனில் மீடியாடெக் ஹீலியோ ஜி85 சிப்செட் உடன் ஏஆர்எம் Mali-G52 GPU ஆதரவு உள்ளது. எனவே கேமிங் உள்ளிட்ட பல்வேறு வசதிகளுக்கு இந்த சிப்செட் மிக அருமையாக பயன்படும். மேலும் Realme UI 2.0 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த சாதனம் வெளிவந்துள்ளது. ரியல்மி நார்சோ 50ஏ ஸ்மார்ட்போனின் பின்புறம் 50எம்பி மெயின் கேமரா + 2எம்பி மேக்ரோ லென்ஸ் + black and white portrait லென்ஸ் என மொத்தம் மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. எனவே துல்லியமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி செல்பீ கேமராவைக் கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன். மேலும் சூப்பர் நைட்ஸ்கேப், நைட் ஃபில்டர்கள், பியூட்டி மோட், எச்டிஆர், பனோரமிக் வியூ, போர்ட்ரெய்ட் மோட், டைம்லாப்ஸ், ஸ்லோ மோஷன் போன்ற கேமரா அம்சங்களை கொண்டுள்ளது இந்த ரியல்மி நார்சோ 50ஏ. ரியல்மி நார்சோ 50ஏ சாதனத்தில் 6000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. மேலும் 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, கைரேகை சென்சார் உட்பட பல தரமான அம்சங்களை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்.
ஒப்போ ஏ31
6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி கொண்ட ஒப்போ ஏ31 ஸ்மார்ட்போனை அமேசான் தளத்தில் ரூ.12,990-விலையில் வாங்க முடியும். ஒப்போ ஏ31 ஸ்மார்ட்போன் மாடலில் 6.5-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பு இடம்பெற்றுள்ளது. பின்பு 720x1,600 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் வெளிவந்துள்ளது. மேலும் இந்தசாதனத்தில் கைரேகை சென்சார் வசதி இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் 12எம்பி main சென்சார் + 2எம்பி மேக்ரோ சென்சார் +2எம்பி டெப்த் சென்சார் என மூன்றுகேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளன, மேலும் 8எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம்என பல்வேறு வசதிகள் இவற்றுள் அடக்கம். இந்த ஒப்போ ஸ்மார்ட்போனில் 2.3ஜிகாஹெர்ட்ஸ் மீடியாடெக் 6765 ஆக்டோ-கோர் பிராசஸர் வசதியைக் கொண்டுள்ளது. ஒப்போ ஏ31 சாதனத்தில் 4230எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது, மேலும் 4ஜி எல்டிஇ, வைஃபை, புளூடூத் 5.0, மைக்ரோ யுஎஸ்பி போர்ட் மற்றும் 3.5எம்எம் ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.


Click it and Unblock the Notifications