அமேசான் தளத்தில் பட்ஜெட் விலையில் கிடைக்கும் தரமான சாம்சங் ஸ்மார்ட்போன்கள்.!
சாம்சங் நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்களுக்கு இந்தியாவில் நல்ல வரவேற்பு உள்ளது என்றுதான் கூறவேண்டும். அதாவது இந்நிறுவனத்தின ஸ்மார்ட்போன்கள் தனித்துவமான அம்சங்களுடன் சிறந்த பாதுகாப்பு வசதியை கொண்டுள்ளதால் நல்ல வரவேற்பு உள்ளது.

அதேபோல் இந்நிறுவனம் தற்போது 5ஜி ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்வதில் அதிக ஆர்வம் காட்டுகிறது என்றுதான் கூறவேண்டும். மேலும் இப்போது அமேசான் தளத்தில் பட்ஜெட் விலையில் கிடைக்கும் அசத்தலான ஸ்மார்ட்போன்களின் பட்டியலைப் பார்ப்போம்.
சாம்சங் கேலக்ஸி எம்32
4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட சாம்சங் கேலக்ஸி எம்32 ஸ்மார்ட்போனை அமேசான் தளத்தில் ரூ.14,999-விலையில் வாங்க முடியும். குறிப்பாக சாம்சங் கேலக்ஸி எம்32 ஸ்மார்ட்போன் ஆனது 6.4-இன்ச் எப்எச்டி பிளஸ் சூப்பர் AMOLED Infinity-U டிஸ்பிளே
வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 800 நிட்ஸ் ப்ரைட்னஸ், மீடியாடெக் ஹீலியோ ஜி80 சிப்செட் வசதி, ஆண்ட்ராய்டு 11 இயங்குதளம், 6000 எம்ஏஎச் பேட்டரி, 15 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, கைரேகை சென்சார், ஆடியோவில் டால்பி அட்மோஸ் ஆதரவு உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். அதேபோல் இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் ஸ்மார்ட்போனின் பின்புறம் 64எம்பி பிரைமரி (Samsung ISOCELL GW3) சென்சார் + 8எம்பி அல்ட்ராவைடு லென்ஸ் + 2எம்பி டெப்த் சென்சார் + 2எம்பி மேக்ரோ சென்சார் என மொத்தம் நான்கு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 20எம்பி கேமராவைக் கொண்டுள்ளது சாம்சங் கேலக்ஸி எம்32 மாடல்.
சாம்சங் கேலக்ஸி எம்21 2021 எடிஷன்
4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட சாம்சங் கேலக்ஸி எம்21 2021 எடிஷன் ஸ்மார்ட்போனை அமேசான் தளத்தில் ரூ.12,999-விலையில் வாங்க முடியும். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் 6.4-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் Super AMOLED இன்பினிட்டி-யுடிஸ்பிளே
வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 1,080x2,340 பிக்சல் தீர்மானம், 19.5:9 என்ற திரைவிகிதம், ஆக்டோ-கோர் எக்ஸிநோஸ் 9611 எஸ்ஒசி சிப்செட் வசதி, Mali-G72 MP3 GPU ஆதரவு, ஆண்ட்ராய்டு 11 இயங்குதளம், 6000 எம்ஏஎச் பேட்டரி, 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, கைரேகை சென்சார் என பல்வேறு சாம்சங் கேலக்ஸி எம்21 2021 எடிஷன். அதேபோல் ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி பிரைமரி சென்சார் + 8எம்பி வைடு லென்ஸ் + 5எம்பி டெப்த் சென்சார் என மொத்தம் மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 20எம்பி செல்பீ கேமரா கொண்டுள்ளது இந்த சாம்சங் கேலக்ஸி எம்21 2021 எடிஷன்.
சாம்சங் கேலக்ஸி எம்12
4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி வசதி கொண்ட சாம்சங் கேலக்ஸி எம்12 மாடலை அமேசான் தளத்தில் ரூ.11,499-விலையில் வாங்க முடியும். சாம்சங் கேலக்ஸி எம்12 ஸ்மார்ட்போன் மாடல் 6.5-இன்ச் எச்டி பிளஸ் டிஎப்டி இன்பினிட்டி வி டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. பின்பு 720x1,600 பிக்சல் தீர்மானம்,20:9 என்ற திரைவிகிதம், ஆக்டோ-கோர் எக்ஸிநோஸ் 850 எஸ்ஒசி சிப்செட் வசதி, ஆண்ட்ராய்டு 11 இயங்குதளம், 6000 எம்ஏஎச் பேட்டரி உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது இந்த சாதனம். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி பிரைமரி சென்சார் + 5எம்பி செகன்டரி சென்சார் + 2எம்பி மேக்ரோ சென்சார் + 2எம்பி டெப்த் சென்சார் என மொத்தம் நான்கு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் 8எம்பி கேமரா ஆதரவு கொண்டுள்ளது இந்த சாம்சங் கேலக்ஸி எம்12 மாடல்.
சாம்சங் கேலக்ஸி எம்11
4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட சாம்சங் கேலக்ஸி எம்11 ஸ்மார்ட்போன் மாடலை அமேசான் தளத்தில் ரூ.12,990-விலையில் வாங்க முடியும். மேலும் சாம்சங் கேலக்ஸி எம் 11 மாடல் ஆனது 6.4 இன்ச் எச்டி + இன்ஃபினிட்டி-ஓஎல்சிடி டிஸ்பிளே வசதியைக் கொண்டு
இந்த சாதனம் வெளிவந்துள்ளது. மேலும் 1560 x 720 பிக்சல் தீர்மானம்,1.8GHz ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 450 சிப்செட், 5,000 எம்ஏஎச் பேட்டரி, 15 வாட்ஸ் சார்ஜிங் வசதி உள்ளிட்ட பலவேறு சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன்.
அதேபோல் கேலக்ஸி எம் 11 மாடல் டிரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது, இதில் 13 மெகாபிக்சல் முதன்மை சென்சார் எஃப் / 1.8 துளை, 5 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட்-ஆங்கிள் லென்ஸ் மற்றும் 2எம்பி டெப்த் கேமரா ஆகிய வசதி உள்ளது. குறிப்பாக பின்புற கேமராக்கள் 1080p வரை வீடியோபதிவை ஆதரிக்கின்றன. முன்பக்கத்தில் 8 மெகாபிக்சல் சென்சார் கேமரா வசதியும் உள்ளது.
சாம்சங் கேலக்ஸி எம்02
4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட சாம்சங் கேலக்ஸி எம்02 மாடலை ரூ.10,499-விலையில் வாங்க முடியும். குறிப்பாக 6.5' இன்ச் 720x1,560 பிக்சல்கள் கொண்ட எச்டி பிளஸ் வாட்டர் டிராப் நாட்ச் டிஎஃப்டி எல்சிடி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. மேலும் அட்ரினோ 506 ஜி.பீ.யு, ஸ்னாப்டிராகன் 450 ஆக்டா கோர் சிப்செட், மைக்ரோ எஸ்.டி மூலம் 1TB வரை ஸ்டோரேஜ், ஆண்ட்ராய்டு 10 அடிப்படையிலான சாம்சங் ஒன் யுஐ இயங்குதளம், 13 மெகாபிக்சல் பிரைமரி கேமரா, 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார், 2 மெகாபிக்சல் மேக்ரோ லென்ஸ், 5 மெகாபிக்சல் செல்பி கேமரா, ஆட்டோ ஃபிளாஷ் டிஜிட்டல் ஜூம், எச்டிஆர், 15W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, 5000mAh பேட்டரிஉள்ளிட்ட பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளது இந்த சாம்சங் கேலக்ஸி எம்02 ஸ்மார்ட்போன். அதேபோல் இந்த சாதனத்தின் வடிவமைப்பு மிகவும் அருமையாக இருக்கும் என்றுதான் கூறவேண்டும்.


Click it and Unblock the Notifications