Home
Deal of the day

அமேசான்: ரூ.16,000-க்குள் கிடைக்கும் அட்டகாசமான ரெட்மி ஸ்மார்ட்போன்கள்.!

ரெட்மி நிறுவனம் தொடர்ந்து அதிநவீன ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்து வருகிறது என்றுதான் கூறவேண்டும். குறிப்பாக இந்நிறுவனம் அறிமுகம் செய்யும் ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் அதிகளவில் விற்பனை செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அமேசான்: ரூ.16,000-க்குள் கிடைக்கும் அட்டகாசமான ரெட்மி ஸ்மார்ட்போன்கள்

அதேபோல் இந்நிறுவனம் 5ஜி ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்வதில் அதிக ஆர்வம் காட்டுகிறது என்றுதான் கூறவேண்டும். மேலும் இப்போது அமேசான் தளத்தில் ரூ.16,000-க்குள் கிடைக்கும் ரெட்மி ஸ்மார்ட்போன்களின் பட்டியலை சற்று விரிவாகப் பார்ப்போம்.

ரெட்மி நோட் 10 லைட்

4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட ரெட்மி நோட் 10 லைட் ஸ்மார்ட்போனை அமேசான் தளத்தில் ரூ.12,990-விலையில் வாங்க முடியும். ரெட்மி நோட் 10 லைட் ஸ்மார்ட்போன் அதன் மலிவு விலையில் உங்களுக்கு 6.67' இன்ச் கொண்ட முழு எச்டி பிளஸ் DotDisplay உடன் வருகிறது. டிஸ்பிளேவைப் பத்திரமாக பாதுகாக்க இதன் மேலே கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பது வழங்கப்பட்டுள்ளது. ரெட்மி நோட் 10 லைட் சாதனம் குவால்காம் ஸ்னாப்டிராகன் 720 ஜி சிப்செட் மூலம் இயங்குகிறது. ரெட்மி நோட் 10 லைட் ஸ்மார்ட்போனின் பின்புறத்தில் ஒரு குவாட்-கேமரா அமைப்பு கொடுக்கப்பட்டுள்ளது, இதில் 48 எம்பி முதன்மை சென்சார், 8 எம்பி அல்ட்ரா-வைட்-ஆங்கிள் சென்சார், 2 எம்பி மேக்ரோ சென்சார் மற்றும் 2 எம்பி டெப்த் சென்சார் போன்றவை வழங்கப்பட்டுள்ளது. இது 4K தரத்தில் 30fps இல் வீடியோ ரெகார்டிங் ஆதரவை ஆதரிக்கிறது. ஸ்மார்ட்போனின் முன்பக்க கேமரா சென்சார் 16 எம்பி லென்ஸ் உடன் வருகிறது. இது 120 எஃப்.பி.எஸ் ஸ்லோ-செல்ஃபி மோடை ஆதரிக்கிறது என்று நிறுவனம் கூறியுள்ளது. இது சேமிப்பு விரிவாக்கத்திற்கான மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட்டுடன் வருகிறது. இந்த ரெட்மி நோட் 10 லைட் ஸ்மார்ட்போன் சாதனம் 5,020 எம்ஏஎச் பேட்டரி உடன் வருகிறது. இது ஆடியோவுக்கு 3.5 மிமீ ஆடியோ ஜாக் மற்றும் சார்ஜ் செய்வதற்கு
யூஎஸ்பி டைப்-சி போர்ட்டை கொண்டுள்ளது. இந்த சாதனம் ஆண்ட்ராய்டு 11 உடன் அதன் மேல் MIUI 12 இல் இயங்கக்கூடியது. கைரேகை சென்சார் ஆற்றல் பட்டனின் மேல் பக்கத்தில் உள்ளது.

ரெட்மி 10 பிரைம்

4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட ரெட்மி 10 பிரைம் ஸ்மார்ட்போனை அமேசான் தளத்தில் ரூ.12,499-விலையில் வாங்க முடியும். ரெட்மி 10 பிரைம் ஸ்மார்ட்போன் ஆனது 6.5-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 1,080x2,400பிக்சல் தீர்மானம், 20:9 என்ற திரைவிகிதம், கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு, 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ரெட்மி 10 பிரைம் ஸ்மார்ட்போன். ரெட்மி 10 பிரைம் ஸ்மார்ட்போனின்பின்புறம் 50எம்பி பிரைமரி சென்சார் + 8எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 2எம்பி டெப்த் சென்சார் + 2எம்பி மேக்ரோ சென்சார் என மொத்தம் நான்கு கேமராக்கள் உள்ளன. எனவே இந்த கேமராக்கள் உதவியுடன் துல்லியமாக புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். அதேபோல் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி செல்பீ கேமரா ஆதரவுடன் வெளிவந்துள்ளது இந்த ரெட்மி 10 பிரைம் ஸ்மார்ட்போன். அதேபோல் ஆக்டோ-கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி88 சிப்செட் வசதியுடன் இந்த ரெட்மி 10 பிரைம் ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் MIUI 12.5 சார்ந்த ஆண்ட்ராய்டு 11இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த புத்தம் புதிய ஸ்மார்ட்போன். ரெட்மி 10 பிரைம் ஸ்மார்ட்போனில் 6000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது.மேலும் 10 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு மற்றும்9W reverse சார்ஜிங் ஆதரவுடன் இந்த சாதனம் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக 4ஜி எல்டிஇ, வைஃபை 802.11, ப்ளூடூத் வி5.1,ஜிபிஎஸ்/ஏ-ஜிபிஎஸ், ஐஆர் பிளாஸ்டர், எஃப்எம் ரேடியோ,
யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5 மிமீ ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த ரெட்மி 10 பிரைம்.

ரெட்மி நோட் 10 எஸ்

6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட ரெட்மி நோட் 10 எஸ் ஸ்மார்ட்போனை அமேசான் தளத்தில் ரூ.14,999-விலையில் வாங்க முடியும். ரெட்மி நோட் 10 எஸ் ஆண்ட்ராய்டு 11 ஐ MIUI 12.5 உடன் இயங்குகிறது. இது 6.43' இன்ச் முழு எச்டி பிளஸ் 1,080 x 2,400 பிக்சல்கள் AMOLED டிஸ்ப்ளே, 1100 நைட்ஸ் பீக் பிரைட்னெஸ், 4,500,000: 1 கான்ட்ராஸ்ட் ரேஷியோ, SGS லோ ப்ளூ லைட் சான்றிதழ் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு கொண்டுள்ளது. ரெட்மி நோட் 10 எஸ் ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ G95 சிப்செட் ஆல்இயக்கப்படுகிறது. ரெட்மி நோட் 10 எஸ் ஒரு குவாட் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. இதில் 64 மெகாபிக்சல் முதன்மை சென்சார், 8 மெகாபிக்சல் சென்சார் அல்ட்ரா-வைட்-ஆங்கிள் லென்ஸ், 2 மெகாபிக்சல் மேக்ரோ, 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார். ரெட்மி நோட் 10 எஸ் போன் 13 மெகாபிக்சல் செல்ஃபி ஷூட்டருடன் பஞ்ச் கட்அவுட்டில் அமைந்துள்ளது. இணைப்பு விருப்பங்களில் 4 ஜி, வைஃபை, ஜிபிஎஸ், ப்ளூடூத், ஐஆர் பிளாஸ்டர், என்எப்சி, 3.5 மிமீ ஆடியோ ஜாக், யூஎஸ்பி போர்ட், 5,000 எம்ஏஎச் பேட்டரி உடன் கூடிய 33W வேகமான சார்ஜிங்கை ஆதரிக்கிறது.

ரெட்மி 9 ஆக்டிவ்

6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ரெட்மி 9 ஆக்டிவ் ஸ்மார்ட்போனை அமேசான் தளத்தில் ரூ.11,499-விலையில் வாங்க முடியும். ரெட்மி 9 ஆக்டிவ் ஸ்மார்ட்போன் 6.53' இன்ச் அளவு கொண்ட எச்டி பிளஸ் 720 x 1,600 பிக்சல்கள் உடைய டாட் டிராப் டிஸ்ப்ளேவை
கொண்டுள்ளது. இந்த டிஸ்பிளே 20: 9 விகித விகிதம் மற்றும் 400 நிட்ஸ் உச்ச பிரகாசத்தைக் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் மீடியாடெக் ஹீலியோ G35 சிப்செட் மூலம் 6 ஜிபி வரையிலான LPDDR4X ரேம் மூலம் இயக்கப்படுகிறது. ரெட்மி 9 ஆக்டிவ் ஸ்மார்ட்போன் டூயல் நானா சிம் அம்சத்துடன் செயல்படுகிறது. இது ரெட்மி 9 ஆக்டிவ் ஆண்ட்ராய்டு அடிப்படையிலான MIUI 12 இல் இயங்குகிறது. இது டூயல் பின்புற கேமரா அமைப்புடன் வருகிறது. இதில் 13 மெகாபிக்சல் முதன்மை சென்சார் f/2.2 லென்ஸ் மற்றும் 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார் f/2.4 லென்ஸுடன் வருகிறது. பின்புற கேமரா அமைப்பு ஒரு ஒற்றை LED ஃப்ளாஷ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. இதில் AI பியூட்டிஃபை 5.0 மற்றும் AI சீன் டிடெக்ஷன் உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது. செல்ஃபி மற்றும் வீடியோ அழைப்புகளுக்காக ரெட்மி 9 ஆக்டிவ் ஸ்மார்ட்போனின் முன்புறத்தில் 5 மெகாபிக்சல் செல்ஃபி கேமரா, f/2.2 லென்ஸ் மூலம் வழங்கப்பட்டுள்ளது. Redmi 9 Activ ஸ்மார்ட்போன் ஆனது 128 ஜிபி வரை eMMC 5.1 சேமிப்பகத்தை உள்ளடக்கியது. இந்த சாதனம் பிரத்யேக ஸ்லாட் வழியாக மைக்ரோ SD அட்டை மூலம் விரிவாக்கத்தை ஆதரிக்கிறது. இணைப்பு விருப்பங்களில் 4G VoLTE, Wi-Fi 802.11 b/g/n, ப்ளூடூத் v5, ஜிபிஎஸ், ஏ-ஜிபிஎஸ், FM ரேடியோ மற்றும் மைக்ரோ யஎஸ்பி போர்ட் ஆகியவற்றை வழங்குகிறது. Redmi 9 Activ ஒரு 5,000mAh பேட்டரியை வழங்கியுள்ளது. இந்த
ஸ்மார்ட்போன் 164.9x77.07x9.0 மிமீ மற்றும் 194 கிராம் எடை கொண்டது.

English summary
List of Redmi smartphones available for less than Rs 16,000 on the Amazon: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X