Home
Deal of the day

அமேசான்: பட்ஜெட் விலையில் கிடைக்கும் அட்டகாசமான ரியல்மி ஸ்மார்ட்போன்கள்.!

இந்தியாவில் ரியல்மி ஸ்மார்ட்போன்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. அதாவது மற்ற நிறுவனங்களை விட தனித்துவமான அம்சங்களுடன் பட்ஜெட் விலையில் அருமையான ஸ்மார்ட்பேன்களை அறிமுகம் செய்கிறது இந்நிறுவனம். மேலும் இந்நிறுவனம் 5ஜி ஸ்மார்ட்போன்களையும் அறிமுகம் செய்வதில் அதிக ஆர்வம் காட்டுகிறது என்றுதான் கூறவேண்டும்.

அமேசான்: பட்ஜெட் விலையில் கிடைக்கும் ரியல்மி ஸ்மார்ட்போன்கள்.!

அதாவது இந்தியாவில் 5ஜி ஸ்மார்ட்போன்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளதால் பல நிறுவனங்கள் தொடர்ந்து 5ஜி ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகின்றன. மேலும் இப்போது அமேசான் தளத்தில் பட்ஜெட் விலையில் ரியல்மி ஸ்மார்ட்போன்களின் பட்டியலைப்
பார்ப்போம்.

ரியல்மி நார்சோ 50ஏ

4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ரியல்மி நார்சோ 50ஏ ஸ்மார்ட்போனை அமேசான் தளத்தில் ரூ.12,499- விலையில் வாங்க முடியும். மேலும் ரியல்மி நார்சோ 50ஏ ஸ்மார்ட்போன் மாடல் 6.5-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 720x1,600 பிக்சல் தீர்மானம், 20:9 எனற திரைவிகிதம், மீடியாடெக் ஹீலியோ ஜி85 சிப்செட் உடன் ஏஆர்எம் Mali-G52 GPU ஆதரவு, Realme UI 2.0 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளம், 6000 எம்ஏஎச் பேட்டரி, 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, கைரேகை சென்சார்
உட்பட பல தரமான அம்சங்களை கொண்டுள்ளது ரியல்மி நார்சோ 50ஏ. அதேபோல் இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் 50எம்பி மெயின் கேமரா + 2எம்பி மேக்ரோ லென்ஸ் +
black and white portrait லென்ஸ் என மொத்தம் மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. எனவே துல்லியமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுக்க முடியும். மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி செல்பீ கேமராவைக் கொண்டுள்ளது இந்த ரியல்மி நார்சோ 50ஏ ஸ்மார்ட்போன். குறிப்பாக யூஎஸ்பி டைப்-சி போர்ட், டூயல்-பேண்ட் வைஃபை 802.11 ஏசி, ஜிபிஎஸ், ப்ளூடூத் வி5 உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த ரியல்மி நார்சோ 50ஏ சாதனம்.

ரியல்மி நார்சோ 50ஐ

4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட ரியல்மி நார்சோ 50ஐ ஸ்மார்ட்போன் மாடலை அமேசான் தளத்தில் ரூ.8,799-விலையில் வாங்க முடியும். மேலும் 6.5-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதியை அடிப்படையாக கொண்டு இந்த அசத்தலான ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் 8எம்பி ரியர் கேமரா, 5எம்பி செல்பீ கேமரா, 5000 எம்ஏஎச் பேட்டரி, ஆக்டோ-கோர் ப்ரசாஸர் என பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த ரியல்மி நார்சோ 50ஐ ஸ்மார்ட்போன் மாடல். மேலும் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு,கைரேகை சென்சார் உட்பட பல்வேறு அமசங்களை கொண்டுள்ளது இந்த ரியல்மி நார்சோ 50ஐ சாதனம். குறிப்பாக யூஎஸ்பி டைப்-சி போர்ட், வைஃபை 802.11 ஏசி, ஜிபிஎஸ்,ப்ளூடூத் வி4.2 உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த ரியல்மி நார்சோ 50ஐ சாதனம்.

ரியல்மி சி11 (2021)

4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட ரியல்மி சி11 (2021) ஸ்மார்ட்போனை அமேசான் தளத்தில் ரூ.8,799-விலையில் வாங்க முடியும். குறிப்பாக இந்த சாதனம் 6.5 இன்ச் மினி டிராப் டிஸ்ப்ளேவுடன் வருகிறது. எச்டி ப்ளஸ் தீர்மானத்துடன் 1600 x 720 பிக்சல்களோடு வருகிறது.
அதேபோல் ஆக்டா கோர் யுனிசோக் எஸ்சி 9863ஏ செயலி மூலம் இந்த ஸ்மார்ட்போன் இயக்கப்படுகிறது. ரியல்மி சி 11 (2021) பின்புறத்தில் எல்இடி ஃபிளாஷ் உட்பட ஒற்றை 8 எம்பி பின்புற கேமரா அமைப்போடு வருகிறது. அதேபோல் செல்பீகளுக்கும்,வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 5எம்பி செல்பீ கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். மேலும் இந்த ஸ்மார்ட்போன் 5000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 10 வாட்ஸ் சார்ஜிங் ஆதரவுடன் வருகிறது. இத்துடன் 3.5 மிமீ ஆடியோ ஜாக் மற்றும் மைக் உள்ளது. இணைப்பு விருப்பங்களில் வைஃபை, புளூடூத், 4 ஜி, ஜி.பி.எஸ் மற்றும் பல அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது. ரியல்மி யுஐ 2.0 அடிப்படையிலான தொலைபேசி ஆண்ட்ராய்டு 11 இல் இயங்குகிறது ரியல்மி சி11 (2021) மாடல்.

ரியல்மி நார்சோ 30

6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ரியல்மி நார்சோ 30 ஸ்மார்ட்போனை அமேசான் தளத்தில் ரூ.15,499-விலையில் வாங்க முடியும். ரியல்மி நார்சோ 30 ஸ்மார்ட்போன் ஆனது 6.5-இன்ச் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டு வெளிவந்துள்ளது. மேலும் 1080 x2400 பிக்சல்கள், 90 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதம், 90.5 சதவிகிதம் ஸ்கிரீன்-டு-பாடி விகிதம், 405 பிபிஐ பிக்சல் அடர்த்தி மற்றும் 580 நிட்ஸ் பிரைட்நஸ், மீடியாடெக் ஹீலியோ ஜி95 சிப்செட் வசதி, ஆண்ட்ராய்டு 11 இயங்குதளம், 5000 எம்ஏஎச் பேட்டரி, 30 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, கைரேகை ஸ்கேனர் வசதி என பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த ரியல்மி நார்சோ 30 மாடல். ரியல்மி நார்சோ 30 ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி பிரைமரி சென்சார் + 2எம்பி மேக்ரோ சென்சார் + 2எம்பி டெப்த் சென்சார் என மொத்தம் மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி செல்பீ கேமரா ஆதரவுடன் வெளிவந்துள்ளது ரியல்மி நார்சோ 30 மாடல்.
அதேபோல் 3.5மிமீ ஆடியோ ஜாக், டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 801.11, ப்ளூடூத் 5.0, என்எப்சி, ஜிபிஎஸ்/ஏ-ஜிபிஎஸ் என பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது ரியல்மி நார்சோ 30.

ரியல்மி 5 ப்ரோ

8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி கொண்ட ரியல்மி 5 ப்ரோ ஸ்மார்ட்போனை அமேசான் தளத்தில் ரூ.16,999-விலையில் வாங்க முடியும். குறிப்பாக 6.3' இன்ச் முழு எச்.டி பிளஸ் டிஸ்பிளே, கார்னிங் கொரில்லா க்ளாஸ் 3 ஸ்னாப்டிராகன் 712 பிராசஸர், ஆண்ட்ராய்டு 9.0 பை இயங்குதளம், 48 மெகா பிக்சல் கொண்ட பிரைமரி கேமரா, 8 மெகா பிக்சல் கொண்ட அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா, 2 மெகா பிக்சல் கொண்ட மேக்ரோ லென்ஸ் கேமரா, 2 மெகா பிக்சல் கொண்ட டெப்த் சென்சார், 16 மெகா பிக்சல் கொண்ட
செல்ஃபி கேமரா, VOOC 3.0 ஃபாஸ்ட் சார்ஜிங், 4,035 எம்.ஏ.எச் பேட்டரி என பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த ரியல்மி 5 ப்ரோ மாடல்.

English summary
List of Realme smartphones available at budget prices on the Amazon site: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X