அமேசான்: பட்ஜெட் விலையில் கிடைக்கும் அசத்தலான ரியல்மி ஸ்மார்ட்போன்கள்.!
ரியல்மி நிறுவனம் தொடர்ந்து பட்ஜெட் விலையில் பல அசத்தலான ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது. பின்பு இந்த நிறுவனத்தின் அனைத்து ஸ்மார்ட்போன் மாடல்களுக்கும் இந்தியாவில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது என்றுதான் கூறவேண்டும்.

அதேபோல் இந்நிறுவனம் 5ஜி ஸ்மார்ட்போன்களையும் பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. மேலும் இப்போது அமேசான் தளத்தில் பட்ஜெட் விலையில் கிடைக்கும் அசத்தலான ஸ்மார்ட்போன்களின் பட்டியலைப் பார்ப்போம்
ரியல்மி சி11 (2021)
4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட ரியல்மி சி11 ஸ்மார்ட்போனை அமேசான் தளத்தில் ரூ.8,799-விலையில் வாங்க முடியும். மேலும் ரியல்மி சி11 (2021) விவரக்குறிப்புகள் குறித்து பார்க்கையில், இந்த ஸ்மார்ட்போன் 6.5 இன்ச் மினி டிராப் டிஸ்ப்ளேவுடன் வருகிறது. எச்டி ப்ளஸ் தீர்மானத்துடன் 1600 x 720 பிக்சல்களோடு வருகிறது. அதேபோல் ஆக்டா கோர் யுனிசோக் எஸ்சி 9863ஏ செயலி மூலம் இந்த ஸ்மார்ட்போன் இயக்கப்படுகிறது. ரியல்மி சி 11 (2021) பின்புறத்தில் எல்இடி ஃபிளாஷ் உட்பட ஒற்றை 8 எம்பி பின்புற கேமரா அமைப்போடு வருகிறது. அதேபோல் செல்பீகளுக்கும்,வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 5எம்பி செல்பீ கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன். மேலும் இந்த ஸ்மார்ட்போன் 5000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 10 வாட்ஸ் சார்ஜிங் ஆதரவுடன் வருகிறது.
ரியல்மி C21Y
3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி மெமரி கொண்ட ரியல்மி C21Y ஸ்மார்ட்போனை அமேசான் தளத்தில் ரூ.8,750 விலையில் வாங்க முடியும். மேலும் ரியல்மி C21Y ஸ்மார்ட்போன் ஆனது 6.5-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்புடன் வெளிவந்துள்ளது. பின்பு 720x1,600 பிக்சல் தீர்மானம், 20:9 என்ற திரைவிகிதம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி கொண்டுள்ளது இந்த ஸமார்ட்போன்.
ரியல்மி C21Y ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் Unisoc T610 SoC சிப்செட் வசதி உள்ளது. மேலும் Realme UI சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த ஸ்மார்ட்போன். ரியல்மி C21Y ஸ்மார்ட்போனின் பின்புறம் 13எம்பி பிரைமரி சென்சார் + 2எம்பி மேக்ரோ சென்சார் + 2எம்பி monochrome சென்சார் என மொத்தம் மூன்று கேமராக்கள் உள்ளன. பின்பு செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 5எம்பி செல்பீ கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது இந்த ரியல்மி C21Y ஸ்மார்ட்போன் மாடல். ரியல்மி C21Y ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் கைரேகை சென்சார் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டு
வெளிவந்துள்ளது இந்த ரியல்மி C21Y ஸ்மார்ட்போன்.
ரியல்மி நார்சோ 50ஏ
4ஜிபி ரேம் மறறும் 64ஜிபி மெமரி கொண்ட ரியல்மி நார்சோ 50ஏ ஸ்மார்ட்போனை அமேசான் தளத்தில் ரூ.11,499-விலையில் வாங்க முடியும். ரியல்மி நார்சோ 50ஏ ஸ்மார்ட்போன் மாடல் 6.5-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. மேலும் 720x1,600 பிக்சல் தீர்மானம், 20:9 எனற திரைவிகிதம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல்வெளிவந்துள்ளது. அதேபோல் இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் 50எம்பி மெயின் கேமரா + 2எம்பி மேக்ரோ லென்ஸ் + black and white portrait லென்ஸ் என மொத்தம் மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. பின்பு செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி செல்பீ கேமராவைக் கொண்டுள்ளது இந்த ரியல்மி நார்சோ 50ஏ ஸ்மார்ட்போன். மேலும் ரியல்மி நர்சோ 50ஏ ஸ்மார்ட்போனில் மீடியாடெக் ஹீலியோ ஜி85 சிப்செட் உடன் ஏஆர்எம் Mali-G52 GPU ஆதரவு உள்ளது.
குறிப்பாக 6000 எம்ஏஎச் பேட்டரி, 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, கைரேகை சென்சார் உட்பட பல தரமான அம்சங்கள் இவற்றுள் அடக்கம்.
ரியல்மி நார்சோ 30
6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ரியல்மி நார்சோ 30 ஸ்மார்ட்போனை அமேசான் தளத்தில் ரூ.15,499-விலையில் வாங்க முடியும். இந்த ரியல்மி நார்சோ 30 ஸ்மார்ட்போன் ஆனது 6.5-இன்ச் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டு வெளிவந்துள்ளது. மேலும் 1080 x2400 பிக்சல்கள், 90 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதம், 90.5 சதவிகிதம் ஸ்கிரீன்-டு-பாடி விகிதம், 405 பிபிஐ பிக்சல் அடர்த்தி மற்றும் 580 நிட்ஸ் பிரைட்நஸ், மீடியாடெக் ஹீலியோ ஜி95 சிப்செட் வசதி, 5000 எம்ஏஎச் பேட்டரி, 30 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, கைரேகை ஸ்கேனர் வசதி உள்ளிட்ட பல்வேறு ஆதரவுகள் உள்ளன. அதேபோல் இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி பிரைமரி சென்சார் + 2எம்பி மேக்ரோ சென்சார் + 2எம்பி டெப்த் சென்சார் என மொத்தம் மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த ரியல்மி நார்சோ 30. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.
ரியல்மி நார்சோ 50ஐ
2ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி மெமரி கொண்ட ரியல்மி நார்சோ 50ஐ ஸ்மார்ட்போன் மாடலை அமேசான் தளத்தில் ரூ.7,499-விலையில் வாங்க முடியும். மேலும் 6.5-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதியை அடிப்படையாக கொண்டு இந்த அசத்தலான ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் 8எம்பி ரியர் கேமரா, 5எம்பி செல்பீ கேமரா, 5000 எம்ஏஎச் பேட்டரி, ஆக்டோ-கோர் ப்ரசாஸர் என பல்வேறு
சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த ரியல்மி நார்சோ 50ஐ ஸ்மார்ட்போன் மாடல்.


Click it and Unblock the Notifications