Home
Deal of the day

அமேசான்: தரமான அம்சங்களுடன் கிடைக்கும் ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்கள்.!

ஒன்பிளஸ் நிறுவனத்தின் அனைத்து ஸ்மார்ட்போன்களுக்கும் இந்தியாவில் நல்ல வரவேற்பு உள்ளது. குறிப்பாக இந்நிறுவனம் அறிமுகம் செய்யும் ஸ்மார்ட்போன்கள் தனித்துவமான சிப்செட் மற்றும் கேமரா வசதிகளுடன் வெளிவருவதால் நல்ல வரவேற்பு உள்ளது என்றுதான் கூறவேண்டும்.

அமேசான்: தரமான அம்சங்களுடன் கிடைக்கும் ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்கள்.!

அதேபோல் இந்நிறுவனம் விரைவில் பல புதிய ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இப்போது அமேசான் தளத்தில் கிடைக்கும் அசத்தலான ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன்களின் பட்டியலைப் பார்ப்போம்.

ஒன்பிளஸ் 9ஆர் 5ஜி

8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ஒன்பிளஸ் 9ஆர் 5ஜி ஸ்மார்ட்போனை அமேசான் தளத்தில் ரூ.36,999-விலையில் வாங்க முடியும். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் 6.55-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் Fluid AMOLED டிஸ்ப்ளே வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது. மேலும் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், குவால்காம் ஸ்னாப்டிராகன் 870 எஸ்ஒசி சிப்செட், ஆண்ட்ராய்டு 11 அடிப்படையிலான ஆக்சிஜன்ஓஎஸ் 11, 4500 எம்ஏஎச் பேட்டரி, 65 வாட் வார்ப் சார்ஜிங் ஆதரவு வைஃபை 6, ப்ளூடூத் 5.1, ஜிபிஎஸ், என்எப்சி உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன். மேலும் ஒன்பிளஸ் 9ஆர் 5ஜி ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி பிரைமரி சென்சார் +
16எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ் + 5எம்பி மேக்ரோ லென்ஸ் + 2எம்பி மோனோக்ரோம் சென்சார் என மொத்தம் நான்கு கேமராக்கள் உள்ளன. அதேபோல் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன். குறிப்பாக தனித்துவமான அம்சங்களுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
.

ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 5ஜி

8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 5ஜி ஸ்மார்ட்போன் மாடலை அமேசான் தளத்தில் ரூ.24,999-விலையில்
வாங்க முடியும். குறிப்பாக ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 6.43-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. மேலும் 2400 x 1080 பிக்சல் தீர்மானம், 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், குவால்காம் ஸ்னாப்டிராகன் 750 5ஜி பிராசஸர் வசதி, OxygenOS 11 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளம், 4500 எம்ஏஎச் பேட்டரி, 30டி பிளஸ் வார்ப் சார்ஜிங் ஆதரவு உள்ளிட்ட
பல சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். அதேபோல்5 ஜி, டூயல் 4ஜி வோல்டிஇ, வைஃபை 802.11, டூயல் பேண்ட், வைஃபை டைரக்ட், ஹாட்ஸ்பாட், ப்ளூடூத் 5.1, ஜிபிஎஸ், க்ளோனாஸ், டூயல் சிம் மற்றும் யூ.எஸ்.பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 5ஜி. குறிப்பாக ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 5ஜி ஸ்மார்ட்போனின் பின்புறம் 64எம்பி பிரைமரி லென்ஸ் + 8எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 2எம்பி மேக்ரோ கேமரா என மொத்தம் மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. குறிப்பாக 16எம்பி செல்பீ கேமராவைக் கொண்டுள்ளது இந்த ஒன்பிளஸ் நோர்ட் சிஇ 5ஜி மாடல்.

ஒன்பிளஸ் 9 5ஜி

8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ஒன்பிளஸ் 9 5ஜி மாடலை அமேசான் தளத ரூ.46,999-வாங்க முடியும். குறிப்பாக 6.55-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் Fluid OLED டிஸ்பிளே வசதியுடன் வெளிவந்துள்ளது ஒன்பிளஸ் 9 5ஜி மாடல். மேலும்
இந்த சாதனம் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 20: 9 என்ற திரைவிகிதம், கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு, ஆண்ட்ராய்டு 11 அடிப்படையிலான ஆக்சிஜன்ஓஎஸ் 11 இயங்குதளம், ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 888 எஸ்ஒசி சிப்செட், ஒன்பிளஸ் கூல் ப்ளே என்று கூறப்படும் மல்டி லேயர் கூலிங் சிஸ்டம் ஆதரவு, 4500 எம்ஏஎச் பேட்டரி, டால்பி அட்மோஸ் அம்சம் கொண்ட டூயல் ஸ்டீரியோ ஸ்பீக்கர்ஸ், வார்ப் சார்ஜ் 65டி பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன். ஒன்பிளஸ் 9 5ஜி ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி பிரைமரி சென்சார் + 50எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் லென்ஸ் + 2எம்பி மோனோக்ரோம் சென்சார் என மொத்தம் மூன்று கேமராக்கள் உள்ளன. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன்.

ஒன்பிளஸ் 8டி 5ஜி

8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ஒன்பிளஸ் 8டி 5ஜி மாடலை அமேசான் தளத்தில் ரூ.38,999-விலையில் வாங்க முடியும். 6.55-இன்ச் டிஸ்பிளே வசதியைக் கொண்டு வெளிவந்துள்ளது இந்த ஒன்பிளஸ் 8டி 5ஜி ஸ்மார்ட்போன் மாடல். மேலும் 2400 X 1080 பிக்சல் தீர்மானம், குவால்காம் ஸ்னாப்டிராகன் 865 ஆக்டோ-கோர் சிப்செட், அட்ரினோ 650 ஜிபியு, ஆண்ட்ராய்டு 11 இயங்குதளம், 4500 எம்ஏஎச் பேட்டரி, 65 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன். குறிப்பாக ஒன்பிளஸ் 8டி 5ஜி ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி மெயின் கேமரா + 16எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 5எம்பி மேக்ரோ லென்ஸ் + 2எம்பி மோனோக்ரோம் சென்சார் என மொத்தம் நான்கு கேமராக்கள் உள்ளன. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்.

English summary
List of OnePlus smartphones available at budget prices on Amazon site : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X