Home
Deal of the day

அமேசான்: பட்ஜெட் விலையில் கிடைக்கும் நோக்கியா ஸ்மார்ட்போன்கள்.!

இந்தியாவில் நோக்கியா ஸ்மார்ட்போன்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. குறிப்பாக தனித்துவமான சிப்செட் வசதி மற்றும் தரமான கேமரா என பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் நோக்கியா ஸ்மார்ட்போன்கள் வெளிவருவதால் நல்ல வரவேற்பு உள்ளது என்றுதான்
கூறவேண்டும்.

அமேசான்: பட்ஜெட் விலையில் கிடைக்கும் நோக்கியா ஸ்மார்ட்போன்கள்.!

அதேபோல் எச்எம்டி குளோபல் நிறுவனம் 5ஜி வசதி கொண்ட நோக்கியா ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய அதிக ஆர்வம் காட்டுகிறது என்றுதான் கூறவேண்டும். மேலும் இப்போது அமேசான் தளத்தில் பட்ஜெட் விலையில் கிடைக்கும் நோக்கியா ஸ்மார்ட்போன்களின் பட்டியலைப் பார்ப்போம்.

நோக்கியா ஜி20 ஸ்மார்ட்போன்

4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட நோக்கியா ஜி20 ஸ்மார்ட்போனை அமேசான் தளத்தில் ரூ.13,490-விலையில் வாங்க முடியும். குறிப்பாக நோக்கியா ஜி20 ஸ்மார்ட்போன் ஆனது 6.5-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. மேலும் 1600x720 பிக்சல் தீர்மானம், 20: 9 திரை விகிதம், 60 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், ஆக்டோ-கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி35 எஸ்ஒசி சிப்செட் வசதி, ஆண்ட்ராய்டு 11 இயங்குதளம், 5050 எம்ஏஎச் பேட்டரி ஆதரவு, 10 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, கைரேகை சென்சார், கூகுள் அசிஸ்டென்ட் பட்டன் என பல்வேறு அசத்தலான அம்சங்களை கொண்டுள்ளது இந்த நோக்கியா ஜி20 ஸ்மார்ட்போன் மாடல். அதேபோல் இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் 48 மெகாபிக்சல் முதன்மை சென்சார் + 5 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் ஷூட்டர் + 2 மெகாபிக்சல் மேக்ரோ ஷூட்டர் + 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார் என மொத்தம் நான்கு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி செல்பீ கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன் மாடல்.
மேலும் 4ஜி எல்டிஇ, வைஃபை 802.11 பி /ஜி/ என், ப்ளூடூத் வி 5.0, ஜிபிஎஸ்/ஏ-ஜிபிஎஸ், என்எப்சி, எஃப்எம் ரேடியோ, யூ.எஸ்.பி டைப்-சி, 3.5 மிமீ ஹெட்ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது நோக்கியா ஜி20

நோக்கியா 5.4

6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட நோக்கியா 5.4 ஸ்மார்ட்போனை அமேசான் தளத்தில் ரூ.14,499-விலையில் வாங்க முடியும். குறிப்பாக நோக்கியா 5.4 ஸ்மார்ட்போன் ஆனது 6.39-இன்ச் எச்டி பிளஸ் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது.
மேலும் 1520 x 720 பிக்சல்கள் தீர்மானம், குவால்காம் ஸ்னாப்டிராகன் 662 சிப்செட் வசதி, ஆண்ட்ராய்டு 11 இயங்குதளம், 4000 எம்ஏஎச் பேட்டரி, 10 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, கைரேகை சென்சார் வசதி உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த நோக்கியா 5.4 ஸ்மார்ட்போன் மாடல். அதேபோல் இந்த சாதனத்தின் பின்புறம் 48எம்பி பிரைமரி சென்சார் + 5எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 2எம்பி மேக்ரோ லென்ஸ் + 2எம்பி டெப்த் சென்சார் என மொத்தம் நான்கு கேமராக்கள் உள்ளன. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி செல்பீ கேமரா வசதியைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். இதுதவிர பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த நோக்கியா 5.4 ஸ்மார்ட்போன் மாடல்.

நோக்கியா சி20 பிளஸ்

2ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி மெமரி கொண்ட நோக்கியா சி20 பிளஸ் ஸ்மார்ட்போன் மாடலை அமேசான் தளத்தில் ரூ.8,699-விலையில் வாங்க முடியும். அதேபோல் இந்த ஸ்மார்ட்போன் 6.5-இன்ச் டிஸ்பிளே வசதியுடன் வெளிவந்துள்ளது. மேலும் ஆக்டோ-கோர் Unisoc SC9863a சிப்செட் வசதி, ஆண்ட்ராய்டு 11 (Go edition) இயங்குதளம், 5000 எம்ஏஎச் பேட்டரி உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த நோக்கியா சி20 பிளஸ் ஸ்மார்ட்போன். நோக்கியா சி20 பிளஸ் ஸ்மார்ட்போனின் பின்புறம் 8எம்பி பிரைமரி சென்சார் + 2எம்பி டெப்த் சென்சார் என மொத்தம் இரண்டு கேமராக்கள் இடம்பெற்றுள்ளன. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 5எம்பி செல்பீ கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன். மேலும் 4ஜி எல்டிஇ, வைஃபை 802.11, ப்ளூடூத் வி4.1, ஜிபிஎஸ்/ஏஜிபிஎஸ், எஃப்எம் ரேடியோ, மைக்ரோ-யுஎஸ்பி, 3.5 மிமீ ஹெட்போன் ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த நோக்கியா சி20 பிளஸ்
சாதனம்.

நோக்கியா 3.2

3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி மெமரி கொண்ட நோக்கியா 3.2 ஸ்மார்ட்போனை அமேசான் தளத்தில் ரூ.9,879-விலையில் வாங்க முடியும். மேலும் இந்த ஸ்மார்ட்போன் 6.26-இன்ச் எச்டி பிளஸ் டிஎப்டி எல்சிடி டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது. பின்பு 720x1520 பிக்சல் தீர்மானம், குவால்காம் ஸ்னாப்டிராகன் 429 சிப்செட் வசதி, அட்ரினோ 504 ஜிபியு வசதி என
பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த அசத்தலான நோக்கியா ஸ்மார்ட்போன். அதேபோல் நோக்கியா 3.2 ஸ்மார்ட்போனில் 13எம்பி ரியர் கேமரா மற்றும் 5எம்பி செல்பீ கேமரா இடம்பெற்றுள்ளது. மேலும் எல்இடி பிளாஸ் ஆதரவு,
செயற்கை நுண்ணறிவு அம்சம், பிரத்யேக கூகுள் அசிஸ்டண்ட் பட்டன், ஃபேஸ் அன்லாக், 4000எம்ஏஎச் பேட்டரி மற்றும் ப்ளூடூத் 4.2, வைபை போன்ற பல சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது இந்த நோக்கியா 3.2 ஸ்மார்ட்போன்.

நோக்கியா ஜி10

4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட நோக்கியா ஜி10 ஸ்மார்ட்போனை அமேசான் தளத்தில் ரூ.12,005-விலையில் வாங்க முடியும். மேலும் 6.5-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே, மீடியாடெக் ஹீலியோ ஜி25 ஆக்டோ-கோர் சிபசெட்,5050 எம்ஏஎச் பேட்டரி என பல்வேறு
சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன். மேலும் இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் 13எம்பி மெயின் கேமரா + 2எம்பி மேக்ரோ கேமரா + 2எம்பி டெப்த் கேமரா என மொத்தம் மூன்று கேமராக்கள் உள்ளன. பின்பு செல்பீகளுக்கும்,
வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன். இதுதவிர பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

English summary
List of Nokia smartphones available at budget prices on the Amazon site : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X