Home
Deal of the day

அமேசான்: பட்ஜெட் விலையில் கிடைக்கும் சாம்சங், ரெட்மி ஸ்மார்ட்போன்கள்.! இதோ பட்டியல்.!

சாம்சங், ரெட்மி ஸ்மார்ட்போன்களுக்கு இந்தியாவில் நல்ல வரவேற்பு உள்ளது என்றுதான் கூறவேண்டும். குறிப்பாக இந்நிறுவனங்களின் ஸ்மார்ட்போன்கள் தனித்துவமான சிப்செட், அசத்தலான கேமராக்கள் எனப் பல சிறப்பு அம்சங்களுடன் வெளிவருவதால் நல்ல வரவேற்பை பெருகின்றன என்றுதான் கூறவேண்டும்.

அமேசான்: பட்ஜெட் விலையில் கிடைக்கும் சாம்சங், ரெட்மி ஸ்மார்ட்போன்கள்.!

மேலும் இந்நிறுவனம் 5ஜி ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்வதில் அதிக கவனம் செலுத்துகின்றன என்றுதான் கூறவேண்டும். இப்போது அமேசான் தளத்தில் பட்ஜெட் விலையில் கிடைக்கும் சாம்சங், ரெட்மி ஸ்மார்ட்போன்களின் பட்டியலை சற்று விரிவாகப் பார்ப்போம்.

ரெட்மி நோட் 11டி 5ஜி

6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட ரெட்மி நோட் 11டி 5ஜி ஸ்மார்ட்போனை அமேசான் தளத்தில் ரூ.16,999-விலையில் வாங்க முடியும். ரெட்மி நோட் 11டி 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 6.6-இன்ச் ஃபுல் எச்டி எல்சிடி டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது. பின்பு90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், கார்னிங் கொரில்லா கிளாஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். ரெட்மி நோட் 11டி 5ஜி ஸ்மார்ட்போனில் மிகவும் எதிர்பார்த்த மீடியாடெக் Dimensity 810 சிப்செட் வசதி உள்ளது. மேலும் MIUI 12.5 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். எனவே இந்த ஸ்மார்ட்போன் மாடல் இயக்கத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும். ரெட்மி நோட் 11டி 5ஜி ஸ்மார்ட்போனின் பின்புறம் 50எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி வைடு ஆங்கிள் சென்சார் என மொத்தம் இரண்டு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி செல்பீ கேமராவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். ரெட்மி நோட் 11டி 5ஜி சாதனத்தில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. பின்பு 33 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி, கைரேகை ஸ்கேனர், இரட்டை ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இவற்றுள் அடக்கம். 5ஜி, வைஃபை 6, புளூடூத் 5.1, யுஎஸ்பி டைப்-சி போர்ட், ஜிபிஎஸ், 3.5மிமீ ஹெட்ஃபோன் ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

சாம்சங் கேலக்ஸி எம்12

6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட கேலக்ஸி எம்12 ஸ்மார்ட்போனை அமேசான் தளத்தில் ரூ.13,499-விலையில் வாங்க முடியும். மேலும் சாம்சங் கேலக்ஸி எம்12 ஸ்மார்ட்போன் ஆனது 6.5-இன்ச் எச்டி பிளஸ் டிஎப்டி இன்பினிட்டி வி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 720x1,600 பிக்சல் தீர்மானம், 20:9 என்ற திரைவிகிதம், ஆக்டோ-கோர் எக்ஸிநோஸ் 850 எஸ்ஒசி சிப்செட், ஆண்ட்ராய்டு 11 (One UI Core) இயங்குதளம், 6000 எம்ஏஎச் பேட்டரி, பாஸ்ட் சார்ஜிங் வசதி எனப் பல்வேறு சிறப்பான அம்சங்களுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. கேலக்ஸி எம்12 ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி பிரைமரி சென்சார் + 5எம்பி செகன்டரி சென்சார் + 2எம்பி மேக்ரோ சென்சார் + 2எம்பி டெப்த் சென்சார் என மொத்தம் நான்கு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் 8எம்பி செல்பீ கேமரா ஆதரவுடன் வெளிவந்துள்ளது இந்த கேலக்ஸி எம்12 ஸ்மார்ட்போன். அதேபோல் டூயல் சிம், புளூடூத் 5.0, வைஃபை, ஜி.பி.எஸ், யூ.எஸ்.பி டைப்-சி மற்றும் 3.5 மிமீ ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த சாம்சங் கேலக்ஸி எம்12 ஸ்மார்ட்போன்.

ரெட்மி நோட் 10 ப்ரோ

6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ரெட்மி நோட் 10 ப்ரோ ஸ்மார்ட்போனை அமேசான் தளத்தில் ரூ.17,999-விலையில் வாங்க முடியும். ரெட்மி நோட் 10 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 6.67-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. மேலும் 2,400x1,080 பிக்சல் தீர்மானம், 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 450 நிட்ஸ் ப்ரைட்னஸ், 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட், கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளது இந்த புத்தம் புதிய ஸ்மார்ட்போன். அதேபோல் ரெட்மி நோட் 10 ப்ரோ ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 732ஜி சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. ரெட்மி நோட் 10 ப்ரோ ஸ்மார்ட்போனானது நான்கு பின்புற கேமராக்களுடன் வருகிறது. குவாட் கேமரா அமைப்போடு இந்த
ஸ்மார்ட்போன் 64 மெகாபிக்சல் முதன்மை கேமரா, 8 எம்பி அல்ட்ரா வைட் ஆங்கிள் கேமரா, 5 எம்பி சூப்பர் மேக்ரோ ஷூட்டர் கேமரா மற்றும் 2 எம்பி ஆழ சென்சார் உடன் வருகிறது. அதேபோல் ஸ்மார்ட்போனின் முன்புறத்தில் 16 எம்பி செல்பி கேமரா பொருத்தப்பட்டுள்ளது. ரெட்மி நோட் 10 ப்ரோ ஸ்மார்ட்போனானது 5020 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 33 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவோடு வருகிறது.

சாம்சங் கேலக்ஸி எம்21 2021

4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட சாம்சங் கேலக்ஸி எம்21 2021 ஸ்மார்ட்போனை அமேசான் தளத்தில் ரூ.12,999-விலையில் வாங்க முடியும். மேலும் சாம்சங் கேலக்ஸி எம்21 2021 எடிஷன் ஸ்மார்ட்போன் ஆனது 6.4-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் Super AMOLED இன்பினிட்டி-யு டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 1,080x2,340 பிக்சல் தீர்மானம், 19.5:9 என்ற திரைவிகிதம், கார்னிங் கொரில்லா கிளாஸ் ஆதரவு, ஆண்ட்ராய்டு 11 இயங்குதளம், 6000 எம்ஏஎச் பேட்டரி, ஆக்டோ-கோர் எக்ஸிநோஸ் 9611 எஸ்ஒசி சிப்செட் வசதி உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளன. குறிப்பாக இந்த சாதனத்தின் பின்புறம் 48எம்பி பிரைமரி சென்சார் + 8எம்பி வைடு லென்ஸ் + 5எம்பி டெப்த் சென்சார் என மொத்தம் மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால்
அழைப்புகளுக்கும் என்றே 20எம்பி செல்பீ கேமரா ஆதரவு கொண்டுள்ளது கேலக்ஸி எம்21 2021. 4 ஜி வோல்டிஇ, வைஃபை, புளூடூத், ஜிபிஎஸ் / ஏ-ஜிபிஎஸ், யூ.எஸ்.பி டைப்-சி, மற்றும் 3.5 மிமீ ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த சாம்சங் கேலக்ஸி எம்21 2021 எடிஷன் ஸ்மார்ட்போன்.

English summary
List of budget priced Samsung and Redmi smartphones available on Amazon: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X