Home
Deal of the day

அமேசான்: வாங்கச் சிறந்த விவோ ஸ்மார்ட்போன்கள்.! இதோ பட்டியல்.!

விவோ நிறுவனம் தொடர்ந்து அசத்தலான ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்து வருகிறது. மேலும் விவோ நிறுவனம் இந்த ஆண்டு பல 5ஜி ஸ்மார்ட்போன் மாடல்களை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.

அமேசான்: வாங்கச் சிறந்த விவோ ஸ்மார்ட்போன்கள்.! இதோ பட்டியல்.!

அதேபோல் இந்நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்களுக்கு இந்தியாவில் அதிக வரவேற்பு உள்ளது என்றுதான் கூறவேண்டும். மேலும் இப்போது அமேசான் தளத்தில் வாங்கச் சிறந்த பட்ஜெட் விலை விவோ ஸ்மார்ட்போன்களின் பட்டியலைப் பார்ப்போம்.

விவோ Y21

4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட விவோ Y21 ஸ்மார்ட்போன் மாடலை அமேசான் தளத்தில் ரூ.13,990-விலையில் வாங்க முடியும். விவோY21 ஸ்மார்ட்போன் ஆனது 6.51-இன்ச் எச்டி பிளஸ் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 720x1,600 பிக்சல் தீர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது. மேலும் இந்த சாதனத்தின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது. விவோ Y21 ஸ்மார்ட்போனின் பின்புறம் 13எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி secondary சென்சார் என மொத்தம் இரண்டுகேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே
8எம்பி செல்பீ கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். இந்த புதிய ஸ்மார்ட்போனில் எப்போதும் போல மீடியாடெக் ஹீலியோ பி35 சிப்செட் வசதி உள்ளது. மேலும் FunTouch OS 11.1 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது விவோ Y21 ஸ்மார்ட்போன். விவோ Y21 ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. நீண்ட நேரம் கேம் விளையாட முடியும். பின்பு 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, கைரேகை சென்சார் என பல்வேறு புதிய அம்சங்களுடன் இந்த சாதனம் வெளிவந்துள்ளது. பின்பு யூஎஸ்பி டைப்-சி போர்ட், டூயல் சிம் ஸ்லாட்டுகள், 4ஜி உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான சாதனம்.

விவோ Y20T

6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட விவோ Y20T ஸ்மார்ட்போன் மாடலை அமேசான் தளத்தில் ரூ.15,489-விலையில் வாங்க முடியும். விவோ ஒய் 20 டி ஆனது ஆண்ட்ராய்டு 11 அடிப்படையிலான ஃபன்டச் ஓஎஸ் 11.1 உடன் இயக்குகிறது. இது 6.51' இன்ச் எச்டி+ கொண்ட 720 x 1,600 பிக்சல்கள் உடைய டிஸ்பிளேவை ஹாலோ ஃபுல்வியூ அம்சத்துடன் கொண்டுள்ளது. ஹூட்டின் கீழ், இந்த ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 662 சிப்செட் மூலம் இயங்குகிறது. இது 6 ஜிபி ரேம் மற்றும் 1 ஜிபி நீட்டிக்கப்பட்ட ரேம் மூலம் இயக்கப்படுகிறது. இது 64 ஜிபி உள்ளமைக்கப்பட்ட சேமிப்பகத்துடன் வருகிறது. இது மைக்ரோ எஸ்டி கார்டு வழியாக (1 டிபி வரை) ஆதரிக்கிறது. கேமிங் ஆர்வலர்களுக்கு, விவோ ஒய் 20 டி அல்ட்ரா கேம் மோட், எஸ்போர்ட்ஸ் மோட், 4 டி கேம் வைப்ரேஷன் மற்றும் கேம் பிக்சர்-இன்-பிக்சர் ஆகியவற்றுடன் மல்டி டர்போ 5.0 உடன் வருகிறது. புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களுக்கு, இந்த சாதனம் 13 மெகாபிக்சல் முதன்மை சென்சார், 2 மெகாபிக்சல் கொண்ட மேக்ரோ ஷூட்டர் மற்றும் மற்றொரு 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார் ஆகிய மூன்று பின்புற கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. முன்பக்கத்தில், Vivo Y20T இல் உள்ள நாட்சில் 8 மெகாபிக்சல் செல்ஃபி ஷூட்டர் உள்ளது, அதில் f/1.8 துளை உள்ளது. முன் கேமரா ஆரா ஸ்கிரீன் லைட் மற்றும் போர்ட்ரேட் மோட் உடன் வருகிறது. இணைப்பு விருப்பங்களில் டூயல் பேண்ட் வைஃபை, 4 ஜி, ப்ளூடூத் வி 5 மற்றும் மைக்ரோ-யூஎஸ்பி போர்ட் ஆகியவை அடங்கும். போர்டில் உள்ள சென்சார்களில் ஆக்ஸிலரோமீட்டர், ஆம்பியண்ட் லைட் சென்சார், இ-காம்பஸ், கைரோஸ்கோப் மற்றும் ப்ராக்ஸிமிட்டி சென்சார் ஆகியவை அடங்கும். பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை ஸ்கேனர் உள்ளது. இந்த போன் 5,000 எம்ஏஎச் பேட்டரி மூலம் ஆதரிக்கப்படுகிறது. இது 18W வேகமான சார்ஜிங்கை ஆதரிக்கிறது.

விவோ Y20G

4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட விவோ Y20G ஸ்மார்ட்போன் மாடலை அமேசான் தளத்தில் ரூ.12,190-விலையில் வாங்க முடியும். விவோ Y20G ஸ்மார்ட்போன் ஆனது 6.51-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதியுடன் வெளிவந்துள்ளது. பின்பு 1600 x 720 பிக்சல் தீர்மானம், ஆண்ட்ராய்டு 11 இயங்குதளம், மீடியாடெக் ஹீலியோ ஜி80 ஆக்டோ-கோர் பிராசஸர் வசதி, 5000 எம்ஏஎச் பேட்டரி, 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். மேலும் இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் 13எம்பி + 2எம்பி + 2எம்பி என மொத்தம் மூன்று கேமராக்கள் உள்ளன. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி செல்பீ கேமரா வசதியைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது இந்நிறுவனம். 4ஜி வோல்ட்இ, வைஃபை 802.11 பி / ஜி / என், புளூடூத் 4.2, ஜிபிஎஸ் மற்றும் மைக்ரோ யூ.எஸ்.பி போர்ட் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

விவோ Y20

4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட விவோ Y20 ஸ்மார்ட்போன் மாடலை அமேசான் தளத்தில் ரூ.11,490-விலையில் வாங்க முடியும். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் தனித்துவமான அம்சங்களுடன் பட்ஜெட் விலையில் வெளவந்துள்ளது. அதாவது 6.51-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே மற்றும்720 x 1600 பிக்சல் தீர்மானம் அடிப்படையில் இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் இந்த சாதனத்தில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 460 ஆக்டோ-கோர் சிப்செட் வசதி உள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்டையாக கொண்டு இந்த விவோ ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. விவோ Y20 ஸ்மார்ட்போனின் பின்புறம் 13எம்பி மெயின் கேமரா + 2எம்பி டெப்த் கேமரா + 2எம்பி மேக்ரோ கேமரா என மொத்தம் மூன்று கேமராக்கள் உள்ளன. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். இந்த விவோ ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டி பொருத்தப்பட்டுள்ளது. பின்பு 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதியைக் கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடல்.. 4ஜி வோல்ட்இ, வைஃபை 802.11 பி / ஜி / என், புளூடூத் 4.2, ஜிபிஎஸ் மற்றும் மைக்ரோ யூ.எஸ்.பி போர்ட் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

English summary
List of best Vivo smartphones to buy on Amazon : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X