Home
Deal of the day

அமேசான்: வாங்கச் சிறந்த ரெட்மி ஸ்மார்ட்போன்கள்.! இதோ பட்டியல்.!

ரெட்மி நிறுவனம் தொடர்ந்து அதிநவீன ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்து வருகிறது. குறிப்பாக இந்நிறுவனம் அறிமுகம் செய்யும் ஸ்மார்ட்போன்கள் தனித்துவமான அம்சங்களுடன் வெளிவருகின்றன. எனவே இந்நிறுவனத்தின் ஸ்மார்ட்பொன் அதிகளவில் விற்பனை செய்யப்படுகின்றன.

அமேசான்: வாங்கச் சிறந்த ரெட்மி ஸ்மார்ட்போன்கள்.! இதோ பட்டியல்.!

குறிப்பாக ரெட்மி நிறுவனம் இந்த ஆண்டு பல அதிநவீன ஸ்மார்ட்போன்களை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. மேலும் இப்போது அமேசான் தளத்தில் வாங்கச் சிறந்த ரெட்மி ஸ்மார்ட்போன்களின் அம்சங்களை சற்று விரிவாகப் பார்ப்போம்.

ரெட்மி 10 பிரைம்

4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட ரெட்மி 10 பிரைம் ஸ்மார்ட்போனை அமேசான் தளத்தில் ரூ.12,499-விலையில் வாங்க முடியும். ரெட்மி 10 பிரைம் ஸ்மார்ட்போன் மாடல் 6.5-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்புடன் வெளிவந்துள்ளது. பெரிய டிஸ்பிளே என்பதால் வீடியோ கேம் உள்ளிட்ட பல்வேறு வசதிகளுக்கு மிக அருமையாக பயன்படுத்தலாம். மேலும் 1,080x2,400 பிக்சல் தீர்மானம், 20:9 என்ற திரைவிகிதம், கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு, 90 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த புதிய சாதனம். ரெட்மி 10 பிரைம் ஸ்மார்ட்போனின் கேமரா அமைப்பு மிகவும் அருமையாக இருக்கிறது என்றே கூறலாம். அதாவது இந்த சாதனத்தின் பின்புறம் 50எம்பி பிரைமரி சென்சார் + 8எம்பி அல்ட்ரா வைடு கேமரா + 2எம்பி டெப்த் சென்சார் + 2எம்பி மேக்ரோ சென்சார் என மொத்தம் நான்கு கேமராக்கள் உள்ளன. ரெட்மி 10 பிரைம் ஸ்மார்ட்போனில் 8எம்பி செல்பீ கேமரா வசதி கொடுக்கப்பட்டுள்ளது. அதேபோல் ரெட்மி 10 பிரைம் சாதனத்தில் ஆக்டோ-கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி88 சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது. மேலும் MIUI 12.5 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை கொண்டுள்ளது ரெட்மி 10 பிரைம் ஸ்மார்ட்போன். ஆக்ஸிலரோமீட்டர், ஆம்பியண்ட் லைட், மேக்னடோமீட்டர் மற்றும் ப்ராக்ஸிமிட்டி போன்ற சென்சார்களை கொண்டுள்ளது இந்த ரெட்மி 10 பிரைம். 4ஜி எல்டிஇ, வைஃபை 802.11, ப்ளூடூத் வி5.1,ஜிபிஎஸ்/ஏ-ஜிபிஎஸ், ஐஆர் பிளாஸ்டர், எஃப்எம் ரேடியோ, யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5 மிமீ ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த ரெட்மி 10 பிரைம்..

ரெட்மி நோட் 10எஸ்

6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட ரெட்மி நோட் 10எஸ் ஸ்மார்ட்போன் மாடலை அமேசான் தளத்தில் ரூ.14,999-விலையில் வாங்க முடியும். ரெட்மி நோட் 10எஸ் ஸ்மார்ட்போனானது கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்புடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் 6.43 இன்ச் அமோலெட் டிஸ்ப்ளே வசதியோடு வருகிறது. இது 2400 x 1080 பிக்சல்கள் முழு எச்டி ப்ளஸ் தீர்மானத்துடன் வருகிறது. அதேபோல் ஹூட்டின் கீழ் இந்த ஸ்மார்ட்போன் ஆக்டோ கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி95 சிப்செட் உடன் வருகிறது. இமேஜிங் ஆதரவுக்கு என ரெட்மி நோட் 10 எஸ் ஸ்மார்ட்போனில் 64 மெகாபிக்சல் முதன்மை கேமரா, 8 மெகாபிக்சல் இரண்டாம் நிலை கேமரா மற்றும்
2 மெகாபிக்சல் டெப்த் சென்சார் ஆகிய குவாட் கேமரா அமைப்பைக் கொண்டிருக்கிறது. ஸ்மார்ட்போனின் முன்பக்கத்தில் 13 மெகாபிக்சல் செல்பி கேமரா இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனானது 5000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 33 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பத்துடன் வருகிறது. இணைப்பு விருப்பங்களில் 4 ஜி, வைஃபை, ஜிபிஎஸ், ப்ளூடூத், ஐஆர் பிளாஸ்டர், என்எப்சி, 3.5 மிமீ ஆடியோ ஜாக், யூஎஸ்பி டைப்-சி போர்ட் ஆதரவுகளை கொண்டுள்ளது.

ரெட்மி நோட் 10 லைட்

6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ரெட்மி நோட் 10 லைட் ஸ்மார்ட்போனை அமேசான் தளத்தில் ரூ.15,999-விலையில் வாங்க முடியும். ரெட்மி நோட் 10 லைட் ஸ்மார்ட்போன் 6.67' இன்ச் கொண்ட முழு எச்டி பிளஸ் DotDisplay உடன் வருகிறது. டிஸ்பிளேவைப் பத்திரமாக பாதுகாக்க இதன் மேலே கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பது வழங்கப்பட்டுள்ளது. ரெட்மி நோட் 10 லைட் சாதனம் குவால்காம் ஸ்னாப்டிராகன் 720 ஜி சிப்செட் மூலம் இயங்குகிறது. இந்த சாதனம் 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி கொண்ட இன்டெர்னல் ஸ்டோரேஜ் உடன் இயக்கப்படுகிறது. ரெட்மி நோட் 10 லைட் ஸ்மார்ட்போனின் பின்புறத்தில் ஒரு குவாட்-கேமரா அமைப்பு கொடுக்கப்பட்டுள்ளது, இதில் 48 எம்பி முதன்மை சென்சார், 8 எம்பி அல்ட்ரா-வைட்-ஆங்கிள் சென்சார், 2 எம்பி மேக்ரோ சென்சார் மற்றும் 2 எம்பி டெப்த் சென்சார் போன்றவை வழங்கப்பட்டுள்ளது. இது 4K தரத்தில் 30fps இல் வீடியோ ரெகார்டிங் ஆதரவை ஆதரிக்கிறது. ஸ்மார்ட்போனின் முன்பக்க கேமரா சென்சார் 16 எம்பி லென்ஸ் உடன் வருகிறது. இது 120 எஃப்.பி.எஸ் ஸ்லோ-செல்ஃபி மோடை ஆதரிக்கிறது என்று நிறுவனம் கூறியுள்ளது.இந்த புதிய ஸ்மார்ட்போன் சாதனம் 5,020 எம்ஏஎச் பேட்டரி உடன் வருகிறது. இது ஆடியோவுக்கு 3.5 மிமீ ஆடியோ ஜாக் மற்றும் சார்ஜ் செய்வதற்கு யூஎஸ்பி டைப்-சி போர்ட்டை கொண்டுள்ளது. இந்த சாதனம் ஆண்ட்ராய்டு 11 உடன் அதன் மேல் MIUI 12 இல் இயங்கக்கூடியது. கைரேகை சென்சார் ஆற்றல் பட்டனின் மேல் பக்கத்தில் உள்ளது.

ரெட்மி நோட் 10 ப்ரோ

6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ரெட்மி நோட் 10 ப்ரோ ஸ்மார்ட்போனை அமேசான் தளத்தில் ரூ.17,999-விலையில் வாங்க முடியும். ரெட்மி நோட் 10 ப்ரோ ஸ்மார்ட்போன் 6.67 இன்ச் சூப்பர் அமோலெட் முழு எச்டி ப்ளஸ் டிஸ்ப்ளேவுடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீத டிஸப்ளே எச்டிஆர் 10 ஆதரவை கொண்டிருக்கிறது. ரெட்மி நோட் 10 ப்ரோ ஸ்மார்ட்போனானது நான்கு பின்புற கேமராக்களுடன் வருகிறது. குவாட் கேமரா அமைப்போடு இந்த ஸ்மார்ட்போன் 64 மெகாபிக்சல் முதன்மை கேமரா, 8 எம்பி அல்ட்ரா வைட் ஆங்கிள் கேமரா, 5 எம்பி சூப்பர் மேக்ரோ ஷூட்டர் கேமரா மற்றும் 2 எம்பி ஆழ சென்சார் உடன் வருகிறது. ரெட்மி நோட் 10 ப்ரோ ஸ்மார்ட்போனின் முன்புறத்தில் 16 எம்பி செல்பி கேமரா பொருத்தப்பட்டுள்ளது. ரெட்மி நோட் 10 ப்ரோ ஸ்மார்ட்போனானது 5020 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 33 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவோடு வருகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 11 ஆதரவோடு வருகிறது. 4 ஜி, வைஃபை, ஜிபிஎஸ், ப்ளூடூத், ஐஆர் பிளாஸ்டர், என்எப்சி, 3.5 மிமீ ஆடியோ ஜாக், யூஎஸ்பி டைப்-சி போர்ட் ஆதரவுகளை கொண்டுள்ளது ரெட்மி நோட் 10 ப்ரோ.

English summary
List of best Redmi smartphones to buy on Amazon : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X