அமேசான்: தரமான அம்சங்களுடன் கிடைக்கும் நோக்கியா ஸ்மார்ட்போன்கள்.! இதோ பட்டியல்.!
எச்எம்டி குளோபல் நிறுவனம் தொடர்ந்து அதிநவீன ஸ்மார்ட்போன்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து வருகிறது என்று தான் கூறவேண்டும். குறிப்பாக இந்நிறுவனத்தின் ஸ்மார்ட்போன்கள் தரமான சிப்செட் மற்றும் சிறந்த கேமரா அம்சங்களுடன் வெளிவருவதால் அதிகளவில் விற்பனை செய்யப்படுகின்றன.

மேலும் எச்எம்டி குளோபல் நிறுவனம் இந்த ஆண்டு பல 5ஜி ஸ்மார்ட்போன் மாடல்களை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. இப்போது அமேசான் தளத்தில் தரமான அம்சங்களுடன் கிடைக்கும் நோக்கியா ஸ்மார்ட்போன்களின் பட்டியலைப் பார்ப்போம்.
நோக்கியா 3.2
3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி மெமரி கொண்ட நோக்கியா 3.2 ஸ்மார்ட்போன் மாடலை அமேசான் தளத்தில் ரூ.11,393-விலையில் வாங்க முடியும். நோக்கியா 3.2 ஸ்மார்ட்போன் மாடல் பொதுவாக 6.26-இன்ச் எச்டி பிளஸ் டிஎப்டி எல்சிடி டிஸ்பிளே வசதியைக் கொண்டுள்ளது. பின்பு 720x1520 பிக்சல் தீர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு அம்சங்களுடன் வெளிவந்துள்ளது நோக்கியா 3.2. குவால்காம் ஸ்னாப்டிராகன் 429 சிப்செட் வசதி, அட்ரினோ 504 ஜிபியு வசதி மற்றும் ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளம் கொண்டுள்ளது
இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். நோக்கியா 3.2 ஸ்மார்ட்போனில் 13எம்பி ரியர் கேமரா மற்றும் 5எம்பி செல்பீ கேமரா இடம்பெற்றுள்ளது. பின்பு எல்இடி பிளாஸ் ஆதரவு, செயற்கை நுண்ணறிவு அம்சம், பிரத்யேக கூகுள் அசிஸ்டண்ட் பட்டன், ஃபேஸ் அன்லாக் போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.இந்த ஸ்மார்ட்போனில் 4000எம்ஏஎச் பேட்டரி மற்றும் வோ-வைபை, ப்ளூடூத் 4.2, வைபை
போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் அடக்கம்.
நோக்கியா 5.4
6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட நோக்கியா 5.4 ஸ்மார்ட்போன் மாடலை அமேசான் தளத்தில் ரூ.12,298-விலையில் வாங்க முடியும். நோக்கியா 5.4 ஸ்மார்ட்போன் ஆனது எச்டி பிளஸ் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. மேலும் 1520 x 720 பிக்சல்கள் தீர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு இந்த அசத்தலான நோக்கியா 5.4 ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் இதன் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம். இந்த
நோக்கியா 5.4 ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 662 சிப்செட் வசதி உள்ளதாக கூறப்படுகிறது. எனவே இந்த சாதனத்தை இயக்குவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். நோக்கியா 5.4 ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி பிரைமரி சென்சார் + 5எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 2எம்பி மேக்ரோ லென்ஸ் + 2எம்பி டெப்த் சென்சார் என மொத்தம் நான்கு கேமராக்கள் உள்ளன. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 16எம்பி செல்பீ கேமரா வசதியைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான
ஸ்மார்ட்போன் மாடல். நோக்கியா 5.4 ஸ்மார்ட்போனில் 4000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் 10 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, கைரேகை சென்சார் வசதி என பல்வேறு சிறப்பான அம்சங்களுடன் இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.
நோக்கியா ஜி20
4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட நோக்கியா ஜி20 ஸ்மார்ட்போன் மாடலை அமேசான் தளத்தில் ரூ.10,616-விலையில் வாங்க முடியும். நோக்கியா ஜி20 ஸ்மார்ட்போன் ஆனது 6.5-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. மேலும் 20: 9 திரை விகிதம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன் மாடல். நோக்கியா ஜி20 ஸ்மார்ட்போனில்
ஆக்டோ-கோர் மீடியாடெக் ஹீலியோ ஜி35 எஸ்ஒசி சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை கொண்டு வெளிவந்துள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடல். நோக்கியா ஜி20 ஸ்மார்ட்போனின் பின்புறம் 48 மெகாபிக்சல் முதன்மை சென்சார் + 5 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் ஷூட்டர் + 2 மெகாபிக்சல் மேக்ரோ ஷூட்டர் +2 மெகாபிக்சல் டெப்த் சென்சார் என மொத்தம் நான்கு
கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி செல்பீ கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன் மாடல். இதுதவிர வீடியோக்களை பதிவு செய்யும் போது சிறந்த ஒலி அனுபவத்திற்காக OZO ஆடியோ ஆதரவு இதில் உள்ளது. நோக்கியா ஜி20 ஸ்மார்ட்போனில் 5050 எம்ஏஎச் பேட்டரி ஆதரவு உள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் 10 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, கைரேகை சென்சார், கூகுள் அசிஸ்டென்ட் பட்டன்
உட்பட பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன். 4ஜி எல்டிஇ, வைஃபை 802.11 பி / ஜி/ என், ப்ளூடூத் வி 5.0, ஜிபிஎஸ்/ஏ-ஜிபிஎஸ், என்எப்சி, எஃப்எம் ரேடியோ, யூ.எஸ்.பி டைப்-சி, 3.5 மிமீ ஹெட்ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது நோக்கியா ஜி20 ஸ்மார்ட்போன்.
நோக்கியா சி30
3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி மெமரி கொண்ட நோக்கியா சி30 ஸ்மார்ட்போன் மாடலை அமேசான் தளத்தில் ரூ.9,999-விலையில் வாங்க முடியும். நோக்கியா சி30 ஸ்மார்ட்போனில் 6.82-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வசதி உள்ளது. மேலும் 1600x720 பிக்சல் தீர்மானம், 400 நிட்ஸ் ப்ரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த புதிய நோக்கியா சி30ஸ்மார்ட்போன்.
நோக்கியா சி30 ஸ்மார்ட்போனில் 1.6 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் யுனிசாக்எஸ்.சி.9863ஏ பிராசஸர் வசதி உள்ளது. எனவே பயன்படுத்துவதற்கு அருமையாக இருக்கும். மேலும் ஆண்ட்ராய்டு 11 (Go edition) இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த புதிய நோக்கியா சி30 ஸ்மார்ட்போன். குறிப்பாக இதன் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது இந்நிறுவனம். புதிய நோக்கியா சி30
ஸ்மார்ட்போனின் பின்புறம் 13எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி டெப்த் சென்சார் என மொத்தம் இரண்டு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 5எம்பி செல்பீ கேமராவைக் கொண்டுள்ளது இந்த புதிய நோக்கியா சி30 ஸ்மார்ட்போன். இந்த புதிய நோக்கியா ஸ்மார்ட்போனில் 6000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 10 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி இடம்பெற்றள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் கிரீன் மற்றும் வைட் நிறங்களில் கிடைக்கிறது இந்த
அட்டகாசமான நோக்கியா சி30 ஸ்மார்ட்போன். கைரேகை சென்சார், 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், எப்.எம். ரேடியோ, 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 4.2 உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த நோக்கியா சி30 ஸ்மார்ட்போன். அதேபோல் இந்த சாதனத்திற்கு இரண்டு ஆண்டுகளுக்கு செக்யூரிட்டி அப்டேட்கள் வழங்கப்பட்டுள்ளது


Click it and Unblock the Notifications