அமேசான்: பட்ஜெட் விலையில் கிடைக்கும் அசத்தலான ரெட்மி ஸ்மார்ட்போன்கள்.!
சியோமி நிறுவனத்தின் துணை நிறுவனமான ரெட்மி நிறுவனம் தொடர்ந்து பட்ஜெட் விலையில் பல அசத்தலான ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது. குறிப்பாக இந்நிறுவனம் அறிமுகம் செய்யும் ஸ்மார்ட்போன்களுக்கு இந்தியாவில் நல்ல வரவேற்பு உள்ளது என்றுதான் கூறவேண்டும். அதேபோல் இந்நிறுவனம் ரெட்மி நோட் 11டி 5ஜி ஸ்மார்ட்போனை விரைவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.

குறிப்பாக இந்தியாவில் 5ஜி ஸ்மார்ட்போன்களுக்கு இந்தியாவில் நல்ல வரவேற்பு உள்ளது என்றுதான் கூறவேண்டும். எனவே ரெட்மி நிறுவனமும் தொடர்ந்து 5ஜி ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. மேலும் இப்போது அமேசான் தளத்தில் பட்ஜெட் விலையில் கிடைக்கும் ஸ்மார்ட்போன்களின் பட்டியலைப் பார்ப்போம்.
ரெட்மி 9
4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட ரெட்மி 9 ஸ்மார்ட்போனை அமேசான் தளத்தில் ரூ.9,299-விலையில் வாங்க முடியும். குறிப்பாக இந்த ஸ்ஸ்மார்ட்போன் 6.53' இன்ச் அளவு கொண்ட எச்டி பிளஸ் 720 x 1,600 பிக்சல்கள் உடைய டாட் டிராப் டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. மீடியாடெக் ஹீலியோ G35 சிப்செட், 5000 எம்ஏஎச் பேட்டரி,பாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளிட்ட
பல்வேறு அம்சங்கள் இவற்றுள் அடக்கம். இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் 13எம்பி மெயின் கேமரா + 2எம்பி டெப்த் சென்சார் என மொத்தம் இரண்டு கேமராக்கள் உள்ளன. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 5எம்பி செல்பீ கேமராவைக்
கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன். இதுதவிர பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன் மாடல்.
ரெட்மி நோட் 10 லைட்
4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி கொண்ட ரெட்மி நோட் 10 லைட் ஸ்மார்ட்போனை அமேசான் தளத்தில் ரூ.14,999-விலையில் வாங்க முடியும். இந்த ஸ்மார்ட்போன் 6.67' இன்ச் கொண்ட முழு எச்டி பிளஸ் DotDisplay உடன் வருகிறது. டிஸ்பிளேவைப் பத்திரமாக பாதுகாக்க இதன் மேலே கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பது வழங்கப்பட்டுள்ளது. ரெட்மி நோட் 10 லைட் சாதனம் குவால்காம் ஸ்னாப்டிராகன் 720 ஜி சிப்செட் மூலம் இயங்குகிறது. ரெட்மி நோட் 10 லைட் ஸ்மார்ட்போனின் பின்புறத்தில் ஒரு குவாட்-கேமரா அமைப்பு கொடுக்கப்பட்டுள்ளது, இதில் 48 எம்பி முதன்மை சென்சார், 8 எம்பி அல்ட்ரா-வைட்-ஆங்கிள் சென்சார், 2 எம்பி மேக்ரோ சென்சார் மற்றும் 2 எம்பி டெப்த் சென்சார் போன்றவை வழங்கப்பட்டுள்ளது. இது 4K தரத்தில் 30fps இல் வீடியோ ரெகார்டிங் ஆதரவை ஆதரிக்கிறது. ஸ்மார்ட்போனின் முன்பக்க கேமரா சென்சார் 16 எம்பி லென்ஸ் உடன் வருகிறது. இது 120 எஃப்.பி.எஸ் ஸ்லோ-செல்ஃபி மோடை ஆதரிக்கிறது என்று நிறுவனம் கூறியுள்ளது. இந்த ரெட்மி நோட் 10 லைட் சாதனம் 5,020 எம்ஏஎச் பேட்டரி உடன் வருகிறது. இது மீண்டும் நோட் 9 ப்ரோவைப் போன்றது மற்றும் 18W வேகமான சார்ஜிங் ஆதரவைக் கொண்டுள்ளது. இது ஆடியோவுக்கு 3.5 மிமீ ஆடியோ ஜாக் மற்றும் சார்ஜ் செய்வதற்கு யூஎஸ்பி டைப்-சி போர்ட்டை கொண்டுள்ளது. இந்த சாதனம் ஆண்ட்ராய்டு 11 உடன் அதன் மேல் MIUI 12 இல் இயங்கக்கூடியது என்பது குறிப்பிடத்தக்கது.
ரெட்மி 9 பவர்
4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட ரெட்மி 9 பவர் ஸ்மார்ட்போனை அமேசான தளத்தில் ரூ.11,499-விலையில் வாங்க முடியும். அதேபோல் ரெட்மி 9 பவர் சிறப்பம்சங்கள் குறித்து பார்க்கையில் இதில் 6.53 இன்ச் முழு எச்டி ப்ளஸ் டிஸ்ப்ளே, 2340x1080 பிக்சல்கள்
தீர்மானத்துடன் வருகிறது. அதேபோல் பாதுகாப்பு வசதிக்கு கார்னிங் கொரில்லா கிளாஸ் 3, ஸ்னாப்டிராகன் 662 செயலி, 6000 எம்ஏஎச் பேட்டரி,18 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இவற்றுள் அடக்கம். ரெட்மி 9 பவர் ஸ்மார்ட்போனை பொருத்தவரை இதன் பின்புறத்தில் நான்கு கேமராக்கள் இருக்கிறது. இதில் 48 மெகாபிக்சல் பிரதான கேமரா, 8 மெகாபிக்சல் இரண்டாம் நிலை கேமரா, 2 மெகாபிக்சல் மூன்றாம் நிலை கேமரா, 2 மெகாபிக்சல் டெப்த் கேமரா இருக்கிறது. முன்பக்கத்தில் 8 மெகாபிக்சல் செல்பி கேமரா இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதுதவிர பல்வேறு இணைப்பு ஆதரவுகளை
கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன் மாடல்.
ரெட்மி நோட் 10எஸ்
4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட ரெட்மி நோட் 10எஸ் ஸ்மார்ட்போனை அமேசான் தளத்தில ரூ.14,999-விலையில் வாங்க முடியும். குறிப்பாக 6.43 இன்ச் FHD + AMOLED பஞ்ச்-ஹோல் டிஸ்பிளே, மீடியா டெக் ஹீலியோ ஜி 95 ஆக்டோ-கோர் சிப்செட், 5,000 எம்ஏஎச் பேட்டரி, 33W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அமசங்களை கொண்டுள்ளது இந்த ரெட்மி நோட் 10எஸ் ஸ்மார்ட்போன். இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் 64 மெகாபிக்சல் பிரைமரி கேமரா + 8 மெகாபிக்சல் அல்ட்ராவைடு லென்ஸ் + 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார் + 2 மெகாபிக்சல் மேக்ரோ கேமரா என மொத்தம் நான்கு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் செல்பீகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 13எம்பி கேமரா ஆதரவைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்.மேலும்
பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த அசத்தலான ஸ்மார்ட்போன் மாடல்.
ரெட்மி நோட் 9
4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி கொண்ட ரெட்மி நோட் 9 ஸ்மார்ட்போனை அமேசான் தளத்தில் ரூ.15,999-விலையில் வாங்க முடியும். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் 6.53-இன்ச் டிஸ்பிளே, 2340 x 1080 பிக்சல் தீர்மானம், மீடியாடெக் ஹீலியோ
ஜி85 ஆக்டோ-கோர் பிராசஸர், 5020 எம்ஏஎச் பேட்டரி, 22.5 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளிட்ட பல அம்சங்களை கொண்டுள்ளது. அதேபோல் இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி கேமராவுடன் மொத்தம் நான்கு கேமராக்கள் உள்ளன. மேலும் செல்பீகளுக்கும்
வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 13எம்பி கேமராவைக் கொண்டுள்ளது இந்த அசத்தலான சாதனம்.


Click it and Unblock the Notifications