Home
Deal of the day

மஜா.. மஜா.. SALE மஜா.. ரூ.15,990 க்கு இப்படிவொரு போனா.. SONY கேமரா.. 5000mAh பேட்டரி வருது LAVA 5G போன்!

இப்படிவொரு டிசைன் மற்றும் பட்ஜெட்டில் ஸ்மார்ட்போன் கிடைத்தால், விற்பனை சக்கைப்போடு போடாமல் என்ன செய்யும் என்று சொல்லும்படி லாவா ஸ்டார்ம் பிளே 5ஜி (Lava Storm Play 5G) விற்பனைக்கு கிடைக்கிறது. இப்போது தள்ளுபடி விலையில் கிடைப்பதால், கூடுதல் வரவேற்பை பெற்றுள்ளது.

லாவா ஸ்டார்ம் சீரிஸ் (Lava Storm Series) மாடல்களில் பிரீமியம் லுக் கொடுக்கும் ஸ்மார்ட்போனாக களமிறங்கிய லாவா ஸ்டார்ம் பிளே 5ஜி மாடலுக்கு பிளிப்கார்ட் தளத்தில் 11 சதவீத தள்ளுபடி கிடைத்து ரூ.16,990 விலைக்கு கிடைக்கிறது. ரூ.1,000 பேங்க் டிஸ்கவுண்ட்டை தேர்ந்தெடுக்கப்பட்ட கிரெடிட் கார்டுகளுக்கு பெற்று, ரூ.15,990 விலைக்கு வாங்கி கொள்ளலாம்.

மஜா.. மஜா.. SALE மஜா.. ரூ.15,990 க்கு இப்படிவொரு போனா.. SONY கேமரா!

லாவா ஸ்டார்ம் பிளே 5ஜி அம்சங்கள் (Lava Storm Play 5G Specifications): 6.75 இன்ச் (720 x 1600 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளே கொண்டுள்ளது. 2.5D டிசைன் கொண்ட இந்த டிஸ்பிளேவில் எச்டிபிளஸ் (HD+) ரெசொலூஷன் மற்றும் 600 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் வருகிறது. மேலும், 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 260 பிபிஐ பிக்சல் டென்சிட்டி மற்றும் 16.7 மில்லியன் கலர் டெப்த் உள்ளது.

வைடுவைன் எல்3 (Widevine L3) சப்போர்ட் கொண்ட டிஸ்பிளேவாக இது இருக்கிறது. தரமான பர்ஃபாமென்ஸ் கொடுக்கும்படி ஐஎம்ஜி பிஎக்ஸ்எம் 8 256 ஜிபியு (IMG BXM 8 256 GPU) கிராபிக்ஸ் கார்டு கொண்ட ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7060 6என்எம் (Octa Core MediaTek Dimensity 7060 6nm) சிப்செட்டை பேக் செய்துள்ளது. ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) உள்ளது.

1 ஜெனரேஷன் ஓஎஸ் அப்டேட்டை இந்த லாவா ஸ்டார்ம் பிளே 5ஜி ஸ்மார்ட்போன் கொடுக்கிறது. ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) அப்டேட்டை பெற்று கொள்ளலாம். சோனி ஐஎம்எக்ஸ்752 (Sony IMX752) சென்சார் கொண்ட 50 எம்பி மெயின் கேமராவை கொண்டுள்ளது. மேலும், 2 எம்பி டெப்த் கேமராவுடன் டூயல் ரியர் கேமரா சிஸ்டம் (Dual Rear Camera System) கிடைக்கிறது.

மெயின் கேமராவில் 4K வீடியோ ரெக்கார்டிங் சப்போர்ட் கிடைக்கிறது. நைட் மோட் (Night Mode), போர்ட்ராய்டு மோட் (Portrait Mode), ப்ரோ மோட் (Pro-Mode) உள்ளிட்ட பீச்சர்களை கொடுத்துள்ளது. மேலும், எச்டிஆர் மோட் (HDR Mode), ஃபிலிம் மோட் (Film Mode) மற்றும் டூயல் வியூ வீடியோ (Dual View Video) உள்ளிட்ட பீச்சர்கள் கொடுக்கப்பட்டு இருக்கின்றன.

8 எம்பி செல்பீ கேமராவை இந்த லாவா ஸ்டார்ம் பிளே 5ஜி ஸ்மார்ட்போன் கொடுத்து இருக்கிறது. 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி மெமரி கொண்டுள்ளது. 18W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 5000mAh பேட்டரி கிடைக்கிறது. பாட்டம் போர்டெட் ஸ்பீக்கர் (Bottom Ported Speaker) மற்றும் சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரின்ட் சென்சார் (Side-mounted Fingerprint Sensor) உள்ளது.

மேலும், IP64 ரேட்டிங் டஸ்ட் & ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ட் (Dust & Splash Resistant) இந்த லாவா ஸ்டார்ம் பிளே 5ஜி மாடலில் கிடைக்கிறது. 5ஜி எஸ்ஏ / என்எஸ்ஏ (5G SA / NSA), 4ஜி வோஎல்டிஇ (4G VoLTE), ப்ளூடூத் 5.3 (Bluetooth 5.3) & ஜிபிஎஸ் (GPS) உள்ளது. ப்ரோஸ்டி ப்ளூ (Frosty Blue), டியூன் டைட்டானியம் (Dune Titanium) ஆகிய 2 பிரீமியம் கலர்களில் கிடைக்கிறது.

Best Mobiles in India

English summary
Lava Storm Play 5G 11 Percent Offer on Flipkart Check Budget Storm Series Phone Details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X