SALE-க்கு மேல SALE.. வெறும் ரூ.5,939 பட்ஜெட்ல 5000mAh பேட்டரி.. 50MP கேமரா.. 18W பாஸ்ட் சார்ஜிங்.. எந்த மாடல்?
அமேசான் தளத்தில் லாவா நிறுவனத்தின் லாவா போல்டு என்1 ப்ரோ (Lava Bold N1 Pro) ஸ்மார்ட்போனுக்கு தள்ளுபடி கிடைக்கிறது. அடிமட்ட பட்ஜெட்டில் பிரீமியம் லுக் மட்டுமல்லாமல், 5000mAh பேட்டரி, 50 எம்பி கேமரா, 18W ஃபாஸ்ட் சார்ஜிங், 8 ஜிபி ரேம், 256 ஜிபிக்கான மெமரி சப்போர்ட் போன்ற பீச்சர்களை கொடுக்கிறது. இந்த லாவா போல்டு என்1 ப்ரோ ஸ்மார்ட்போனின் விலை, தள்ளுபடி மற்றும் பீச்சர்கள் குறித்த முழு விவரங்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
4 ஜிபி ரேம் (4 ஜிபி விர்ச்சுவல்) + 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டின் மார்கெட் விலை ரூ.6,799 ஆக இருக்கிறது. இந்த விலையில் ரூ.200 விலை குறைப்பு போக ரூ.6,599 பட்ஜெட்டில் ஆர்டர் செய்ய கிடைக்கிறது. இப்போது, அமேசான் தளத்தில் ரூ.659.90 உடனடி பேங்க் தள்ளுபடி கிடைக்கிறது. ஆகவே ரூ.5,939.10 விலைக்கு இந்த லாவா போல்டு என்1 ப்ரோ போனை வாங்கி கொள்ளலாம்.

இந்த டிஸ்கவுண்ட் எஸ்பிஐ கிரெடிட் கார்டு மற்றும் எஸ்பிஐ டெபிட் கார்டு ஆகியவற்றுக்கு கிடைக்கிறது. மேலும், ரூ.6,250 மதிப்பில் எக்ஸ்சேஞ்ச் சலுகை கொடுக்கப்படுகிறது. இந்த அடிமட்ட விலைக்கும் பிரீமியம் லுக் கொடுக்கும்படி டைட்டானியம் கோல்டு (Titanium Gold) மற்றும் ஸ்டெல்த் பிளாக் (Stealth Black) ஆகிய கலர்களில் இந்த லாவா ஸ்மார்ட்போன் கிடைக்கிறது.
லாவா போல்டு என்1 ப்ரோ அம்சங்கள் (Lava Bold N1 Pro Specifications): இந்த லாவா ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) கொண்ட ஆக்டா கோர் யுனிசோக் டி606 (Octa core UNISOC T606) சிப்செட் கிடைக்கிறது. இதுவொரு 4ஜி வோஎல்டிஇ (4G VoLTE) கனெக்டிவிட்டி பேண்ட்களை கொண்ட வெர்ஷனாகும். பஞ்ச் ஹோல் (Punch Hole) டிஸ்பிளே கிடைக்கிறது.
6.67 இன்ச் (720 x 1612 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளே கிடைக்கிறது. இந்த டிஸ்பிளேவில் 269 பிபிஐ பிக்சல் டென்சிட்டி மற்றும் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் கிடைக்கிறது. மேலும், 16.7 மில்லியன் கலர் டெப்த் மற்றும் 2.5D கர்வ்ட் டிசைன் கொடுக்கிறது. எச்டிபிளஸ் (HD+) ரெசொலூஷன் கொடுக்கிறது. ஆகவே, பட்ஜெட்டிலும் பக்கா டிஸ்பிளே அவுட்புட் கிடைக்கும்.

அதேபோல இந்த லாவா போல்டு என்1 ப்ரோ ஸ்மார்ட்போனில் 50 எம்பி மெயின் கேமரா கிடைக்கிறது. இந்த பட்ஜெட்டில் 32 எம்பி ரியல் கேமராவே அதிகம் கொடுக்கப்படும். ஆனால், இதில் 50 எம்பி கேமரா கிடைக்கிறது. அதேபோல 5 எம்பி செல்பீ ஷூட்டர் எதிர்பார்க்கும் பட்ஜெட்டில் 8 எம்பி செல்பீ கேமரா கொடுக்கிறது. எச்டி வீடியோ ரெக்கார்டிங் கிடைக்கிறது.
லாவா ஸ்மார்ட்போன்களின் வழக்கமாக கிடைக்கும் எச்டிஆர், பியூட்டி, டைம்லேப்ஸ், ஸ்லோவ் மோஷன், போர்ட்ராய்டு, வீடியோ மோட், ப்ரோ மோட், ஷார்ட் வீடியோ, நைட் மோட் போன்ற கேமரா பீச்சர்களை இந்த போல்டு மாடலும் கொடுத்து இருக்கிறது. 128 ஜிபி மெமரிக்கு கூடுதல் சப்போர்ட் கொடுக்க 256 ஜிபிக்கான மைக்ரோஎஸ்டி (microSD) சப்போர்ட் கிடைக்கிறது.
5000mAh பேட்டரி மற்றும் 18W ஃபாஸ்ட் சார்ஜிங் கிடைக்கிறது. இந்த பட்ஜெட்டிலும் 10W ஃபாஸ்ட் சார்ஜர் கொடுக்கிறது. 158 நிமிடங்களில் ஃபுல் சார்ஜ் செய்து கொள்ளலாம். இந்த லாவா போல்டு என்1 ப்ரோ போனில் IP54 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ட் உள்ளது. சைடு-பிங்கர்பிரிண்ட் டென்சார், பேஸ் அன்லாக் மற்றும் 3.5 எம்எம் ஆடியோ ஜாக் உள்ளது.


Click it and Unblock the Notifications