Home
Deal of the day

இனி ரூ.6,499 போதும்.. 5000mAh பேட்டரி.. IP54 ரேட்டிங்.. ஆஃபரில் Lava 5ஜி போன்.. எந்த மாடல்?

அமேசான் தளத்தில் லாவா போல்டு என்1 5ஜி (Lava Bold N1 5G) ஸ்மார்ட்போன் ஆனது சலுகை விலையில் வாங்க கிடைக்கிறது. குறிப்பாக இந்த லாவா ஸ்மார்ட்போன் அசத்தலான வடிவமைப்பு மற்றும் மேம்பட்ட அம்சங்களுடன் வெளிவந்துள்ளது. இப்போது இந்த போனுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் மற்றும் இதன் சிறப்பு அம்சங்களைப் பார்க்கலாம்.

அமேசான் தளத்தில் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட லாவா போல்டு என்1 5ஜி ஸ்மார்ட்போனுக்கு 25 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.7,499 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் ரூ.1000 தள்ளுபடியும் உள்ளது. எனவே இந்த ஸ்மார்ட்போனை ரூ.6,499 விலையில் வாங்கிவிட முடியும்.

இனி ரூ.6,499 போதும்.. ஆஃபரில் Lava 5ஜி போன்.. எந்த மாடல்?

லாவா போல்டு என்1 5ஜி அம்சங்கள் (Lava Bold N1 5G Specifications): 6.75 இன்ச் எச்டிபிளஸ் (HD+) எல்சிடி (LCD) டிஸ்பிளே வசதியுடன் லாவா போல்டு என்1 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 1612 x 720 பிக்சல்கள், 90Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது. பெரிய டிஸ்பிளே உடன் இந்த போன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

ஆக்டா கோர் யுனிசோக் டி765 6என்எம் (Octa core UNISOC T765 6nm) சிப்செட் உடன் லாவா போல்டு என்1 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. குறிப்பாக இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். அதுவும் இந்த போனில் அனைத்து ஆப்களையும் தடையின்றி பயன்படுத்த முடியும்.

அதுவும் ஆண்ட்ராய்டு 15 (Android 15) இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த லாவா போல்டு என்1 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்தது. ஆனாலும் இந்த ஸ்மார்ட்போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்பு மிகவும் அருமையாக உள்ளது.

அதேபோல் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்டுள்ளது இந்த லாவா போல்டு என்1 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இந்த லாவா போனில் உள்ளது. அதாவது நீங்கள் 1டிபி வரை மெமரி கார்டை பயன்படுத்த ஒரு மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் ஆதரவு இதில் உள்ளது.

குறிப்பாக 13 எம்பி ரியர் கேமரா வசதியுடன் வெளிவந்துள்ளது லாவா போல்டு என்1 5ஜி ஸ்மார்ட்போன். குறிப்பாக இது 4K வீடியோ பதிவு செய்ய அனுமதிக்கிறது. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 5எம்பி கேமராவும் இதில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல்வேறு கேமரா அம்சங்களும் இந்த போனில் உள்ளன.

லாவா போல்டு என்1 5ஜி ஸ்மார்ட்போன் 5000mAh பேட்டரி உடன் வெளிவந்துள்ளது. ஆகவே இந்த போன் நாள் முழுவதும் பேட்டரி பேக்கப் வழங்கும். பின்பு இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 18W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. மேலும் சைடு-மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Side mounted Fingerprint Sensor) ஆதரவும் உள்ளது.

இந்த லாவா போல்டு என்1 5ஜி போனில் IP54 ரேட்டிங் கொண்ட டஸ்ட் மற்றும் ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ட் கிடைக்கிறது. ஷாம்பெயின் கோல்டு (Champagne Gold) மற்றும் ராயல் ப்ளூ (Royal Blue) நிறங்களில் இந்த போனை வாங்க முடியும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Lava Bold N1 5G with 13MP camera is available at discounted price on Amazon
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X