Home
Deal of the day

அசரவைக்கும் பிளிப்கார்ட்.. 50எம்பி சோனி கேமரா.. IP64 ரேட்டிங்.. ஆஃபரில் LAVA 5ஜி போன்.. எந்த மாடல்?

பிளிப்கார்ட் தளத்தில் லாவா பிளேஸ் டூயோ 3 5ஜி (Lava Blaze Duo 3 5G) ஸ்மார்ட்போன் சலுகை விலையில் வாங்க கிடைக்கிறது. இந்த போன் தனித்துவமான வடிவமைப்பு மற்றும் தரமான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது. இப்போது லாவா பிளேஸ் டூயோ 3 5ஜி போனுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் மற்றும் இதன் சிறப்பு அம்சங்களை இங்கே பார்க்கலாம்.

தற்போது பிளிப்கார்ட்டில் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட லாவா பிளேஸ் டூயோ 3 5ஜி மாடலுக்கு தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.18,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை வாங்கினால் கூடுதல் சலுகைகளும் உள்ளது. ஆகவே இந்த போனை கம்மி விலையில் வாங்கிவிட முடியும்.

அசரவைக்கும் பிளிப்கார்ட்.. ஆஃபரில் LAVA 5ஜி போன்.. எந்த மாடல்?

லாவா பிளேஸ் டூயோ 3 5ஜி அம்சங்கள் (Lava Blaze Duo 3 5G Specifications): தரமான மீடியாடெக் டைமன்சிட்டி 7060 சிப்செட்(MediaTek Dimensity 7060 chipset) உடன் இந்த புதிய லாவா பிளேஸ் டூயோ 3 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த சிப்செட் மேம்பட்ட ஜிபியு மற்றும் சிபியு வேகத்தை வழங்கும்.

6.6-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளே வசதியுடன் இந்த புதிய லாவா பிளேஸ் டூயோ 3 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz refresh rate) மற்றும் 1000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் வசதி உள்ளது. அதேபோல் இந்த போனில் சிறிய 1.6-இன்ச் செகண்டரி AMOLED டிஸ்பிளேவும் உள்ளது.

இந்த சிறிய டிஸ்பிளே குவிக் நோட்டிஃபிகேஷன், விட்ஜெட்டுகள், மியூசிக் கண்ட்ரோல் மற்றும் மெயின் கேமராவுடன் செல்ஃபி ஃப்ரேமிங் செய்வதற்கும் கூட வடிவமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இரண்டு டிஸ்பிளே இந்த ஸ்மார்ட்போனில் உள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

லாவா பிளேஸ் டூயோ 3 5ஜி போனின் பின்புறம் 50எம்பி சோனி ஐஎம்எக்ஸ்752 பிரைமரி கேமரா உள்ளது. இதன் மூலம் 2கே வீடியோ பதிவு செய்ய முடியும். மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமரா உள்ளது. இதுதவிர பல்வேறு கேமரா அம்சங்கள் மற்றும் ஏஐ அம்சங்கள் இந்த ஸ்மார்ட்போனில் உள்ளன.

இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor), ஐஆர் பிளாஸ்டர் (IR Blaster), ஸ்டீரியோ ஸ்பீக்கர் (Stereo Speaker) உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இந்த லாவப ஸ்மார்ட்போனில் உள்ளன. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது லாவா நிறுவனம்.

5000mAh பேட்டரி உடன் லாவா பிளேஸ் டூயோ 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 33W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது. ஆகவே இந்த போனை வேகமாக சார்ஜ் செய்துவிட முடியும். 5ஜி, புளூடூத் 5.2, ஜிபிஎஸ், வைஃபை, யுஎஸ்பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன.

IP64 தர டஸ்ட் மற்றும் ப்ளாஷ் ரெசிஸ்டன்ட் (Dust and splash resistant) லாவா பிளேஸ் டூயோ 3 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது. மேலும் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி வசதி இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது. ஆண்ட்ராய்டு 15 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த லாவா ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. ஆனாலும் இந்த ஸ்மார்ட்போனுக்கு ஆண்ட்ராய்டு அப்டேட் மற்றும் பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும்.

Best Mobiles in India

English summary
LAVA Blaze Duo 3 with 6000mAh available at a discounted price on Flipkart
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X