Home
Deal of the day

ரூ.6,500 டிஸ்கவுண்ட்! சர்ர்னு விலை குறைந்த Lava 5ஜி போன்.. 16GB ரேம், 64MP EIS கேமரா, 3 ஆண்டுகளுக்கு அப்டேட்!

5ஜி சப்போர்ட் (5G Support) இருந்தால், அம்சங்கள் (Specifications) கொஞ்சம் 'வீக்' ஆக இருக்கிறது; கொஞ்சம் 'ஸ்ட்ராங்' ஆன அம்சங்களை கொண்டிருக்கும் 5ஜி போன்களின் விலை அதிகமாக இருக்கிறது. இதற்கு நடுவே சிக்கிக்கொண்டு எதை வாங்குவது என்கிற குழப்பத்தில் தேடலில் உள்ளீர்கள் என்றால்.. நீங்கள் நேராக செல்ல வேண்டியது அமேசான் இந்தியா (Amazon India) வளைத்தளத்திற்கு தான்!

ஏனென்றால் அங்கு தான் - 5ஜி சப்போர்ட் உடன் சேர்த்து "வெயிட்டான" அம்சங்களை பேக் செய்யும் ஒரு லாவா 5ஜி ஸ்மார்ட்போன் மீது ரூ.6500 நேரடி தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. அது லாவா பிளேஸ் கர்வ் 5ஜி (Lava Blaze Curve 5G) ஸ்மார்ட்போனாகும். இந்த ஸ்மார்ட்போனின் அசல் விலை என்ன? டிஸ்கவுண்ட் விலை என்ன? இது என்னென்ன அம்சங்களை பேக் செய்கிறது? இதோ விவரங்கள்:

ரூ.6,500 டிஸ்கவுண்ட்.. சர்ர்னு விலை குறைந்த Lava 5ஜி போன்!

தற்போது அமேசான் இந்தியாவில் லாவா பிளேஸ் கர்வ் 5ஜி ஸ்மார்ட்போனின் பேஸிக் 8ஜிபி ரேம் + 128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன், அதன் அசல் விலையான ரூ.20,999 க்கு பதிலாக 31% தள்ளுபடியை பெற்று ரூ.14,499 க்கு வாங்க கிடைக்கிறது.

இதுபோல 8ஜிபி ரேம் + 256ஜிபி ஆப்ஷன் அசல் விலையான ரூ.21,999 க்கு பதிலாக 30% தள்ளுபடியை பெற்று ரூ.15,499 க்கு வாங்க கிடைக்கிறது. இதோடு சேர்த்து எச்டிஎப்சி பேங்க் கிரெடிட் கார்டு வழியிலான இஎம்ஐ பரிவர்த்தனைக்கு (6 மாதங்கள் அல்லது அத்தகு மேலாக) 10% உடனடி தள்ளுபடி (ரூ.1000 வரை தள்ளுபடி) கிடைக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

லாவா பிளேஸ் கர்வ் 5ஜி ஸ்மார்ட்போனின் என்னென்ன அம்சங்கள் உள்ளன? டிஸ்பிளேவை பொறுத்தவரை இது 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (120Hz Refresh Rate) உடனான 6.67-இன்ச் கர்வ்டு அமோஎல்இடி டிஸ்பிளேவை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் மீடியாடெக் டைமன்சிட்டி 7050 சிப்செட் (MediaTek Dimensity 7050 Chipset) கொண்டு இயக்கப்படுகிறது,

ரேம் மற்றும் ஸ்டோரேஜை பொறுத்தவரை, முன்னரே குறிப்பிட்டபடி இது 8ஜிபி LPDDR5 ரேம் மற்றும் 256ஜிபி வரையிலான UFS 3.1 ஸ்டோரேஜுடன் வருகிறது. சுவாரசியமாக இந்த ஸ்மார்ட்போனில் விர்ச்சுவல் ரேம் தொழில்நுட்பமும் (Virtual RAM Technology) உள்ளது. இதன்கீழ் இன்டர்னல் ஸ்டோஜில் இருந்து 8ஜிபி மெய்நிகர் ரேம்-ஐ பெற்று, லாவா பிளேஸ் கர்வ் 5ஜி ஸ்மார்ட்போனின் மொத்த ரேம்-ஐ 16ஜிபி ஆக அதிகரிக்க முடியும்.

கேமராக்களை பொறுத்தவரை, லாவா பிளேஸ் கர்வ் 5ஜி ஸ்மார்ட்போனின் பேக் பேனலில் ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் (Triple Rear Camera Setup) உள்ளது. அதில் இஐஎஸ் (EIS) என்று சுருக்கமாக அழைக்கப்படும் எலெக்ட்ரானிக் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (Electronic Image Stabilization) ஆதரவு கொண்ட 64எம்பி மெயின் கேமரா உள்ளது.

கூடவே 8எம்பி அல்ட்ரா-வைட் ஆங்கிள் லென்ஸ் + 2எம்பி மேக்ரோ சென்சார்களும் உள்ளன. செல்பீக்கள் மற்றும் வீடியோ கால்களுக்காக 32எம்பி செல்பீ கேமரா உள்ளது. பேட்டரியை பொறுத்தவரை, இது 33W ஃபாஸ்ட் சார்ஜிங்கிற்கான ஆதரவு (33W Fast Charging Support) உடன் 5,000mAh பேட்டரியை கொண்டுள்ளது. லாவாவின் கூற்றுப்படி , இதை ஒருமுறை சார்ஜ் செய்தால் ஒரு நாள் முழுவதுமான பேட்டரி லைஃப் கிடைக்கும்.

இதுதவித்து மேம்பட்ட ஆடியோ அனுபவத்தை வழங்க லாவா பிளேஸ் கர்வ் 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது ஸ்டீரியோ ஸ்பீக்கர்களை கொண்டுள்ளது. மேலும் 5ஜி (5G), வைஃபை (Wi-Fi), ப்ளூடூத் (Bluetooth) மற்றும் யூஎஸ்பி டைப்-சி போர்ட் (USB Type-C Port) போன்ற கனெக்டிவிட்டி விருப்பங்களையும் கொண்டுள்ளது. லாவாவின் இந்த புதிய 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13) உடன் வருகிறது. இதற்கு ஆண்ட்ராய்டு 14 (Android 14) மற்றும் ஆண்ட்ராய்டு 15 (Android 15) அப்டேட்கள் கிடைக்கும் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

English summary
Lava Blaze Curve 5G Phone gets Rs 6500 Discount Selling At Price Rs 14499 in Amazon India
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X