அமேசான் அதிர போகுது.. ஆஃபரில் லாவா 5ஜி போன்.. 50எம்பி கேமரா.. IP64 ரேட்டிங்.. எந்த மாடல்?
லாவா நிறுவனத்தின் லாவா அக்னி 4 5ஜி (Lava Agni 4 5G) ஸ்மார்ட்போன் ஆனது தற்போது அமேசான் தளத்தில் சலுகை விலையில் வாங்க கிடைக்கிறது. குறிப்பாக AMOLED டிஸ்பிளே, 50எம்பி கேமரா, ஃபாஸ்ட் சார்ஜிங் போன்ற பல சிறப்பான அம்சங்களுடன் இந்த போன் வெளிவந்தது. இப்போது இந்த போனுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் மற்றும் இதன் சிறப்பு அம்சங்களைப் பார்க்கலாம்.
அமேசான் தளத்தில் 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி கொண்ட லாவா அக்னி 4 5ஜி 5ஜி போனுக்கு 14 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.24,999 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தி இந்த போனை இஎம்ஐ முறையில் வாங்கினால் ரூ.2500 வரை தள்ளுபடியும் உள்ளது. ஆகவே இந்த போனை குறைந்த விலையில் வாங்கிவிட முடியும்.

லாவா அக்னி 4 5ஜி 5ஜி அம்சங்கள் (Lava Agni 4 Specifications): சக்திவாய்ந்த மீடியாடெக் டைமன்சிட்டி 8350 சிப்செட் (MediaTek Dimensity 8350 chipset) உடன் இந்த புதிய லாவா அக்னி 4 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த சிப்செட் ஆனது மேம்பட்ட வேகம் மற்றும் செயல்திறன் வழங்கும். அதேபோல் இந்த போனில் அனைத்து ஆப்களையும் தடையின்றி பயன்படுத்த முடியும்.
குறிப்பாக 6.67-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளே வசதியுடன் லாவா அக்னி 4 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் எச்டிஆர் சப்போர்ட், 1.07 பில்லியன் கலர்ஸ், 1.5கே ரெசல்யூஷன் (1.5K Resolution), 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 2400 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதி உள்ளது.
அதேபோல் ஆண்ட்ராய்டு 15 (Android 15) இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த லாவா அக்னி 4 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆனாலும் இந்த ஸ்மார்ட்போனுக்கு 3 ஓஎஸ் அப்டேட் மற்றும் நான்கு வருட பாதுகாப்பு அப்டேட்கள் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதுவும் 50எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா செட்டப் உடன் இந்த புதிய லாவா அக்னி 4 5ஜி ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 50எம்பி கேமராவும் இதில் உள்ளது. குறிப்பாக இந்த போனின் ரியர் மற்றும் செல்பி கேமராக்களில் 4கே வீடியோ பதிவு செய்ய முடியும்.
இன்பிராரெட் சென்சார் (Infrared Sensor), இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor), யூ.எஸ்.பி டைப்-சி ஆடியோ (USB Type-C Audio), ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo speakers) உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்கள் இந்த போனில் உள்ளன.
இந்த லாவா அக்னி 4 5ஜி ஸ்மார்ட்போன் IP64 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ஸ் (Dust & Splash Resistance)வசதியுடன்
வெளிவந்துள்ளது. அதேபோல் 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி ஆதரவும் இந்த லாவா அக்னி 4 5ஜி ஸ்மார்ட்போனில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் 5000mAh பேட்டரி மற்றும் 66W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி இந்த புதிய லாவா ஸ்மார்ட்போனில் உள்ளது. 5ஜி, 4ஜி வோல்ட்இ, புளூடூத் 5.4, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, குளோனாஸ் (GLONASS), கலிலியோ (Galileo) உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன. பாண்டம் பிளாக் (Phantom Black) மற்றும் லூனார் மிஸ்ட் (Lunar Mist) நிறங்களில் இந்த போனை வாங்க முடியும்.


Click it and Unblock the Notifications








