Home
Deal of the day

லாஸ்ட் சான்ஸ்.. காலி பண்ணி விடுங்க.. இந்த OnePlus போன் மீது ரூ.10,000 தள்ளுபடி.. Amazon-ல் அலைமோதும் கூட்டம்!

அனைவருடைய கவனமும் அக்.31 ஆம் தேதியன்று அறிமுகமாகும் ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போன் மீது மட்டுமே இருக்கிறது என்று கூறினால் அது தவறு. இன்னொரு ஒன்பிளஸ் மாடல் மீதும் பலருடைய கவனம் திரும்பி உள்ளது. ஏனென்றால் அது, அமேசான் வலைதளத்தில் ரூ.10,000 தள்ளுபடி விலையின் கீழ் வாங்க கிடைக்கிறது.

அது ஒன்பிளஸ் 12 (OnePlus 12) ஸ்மார்ட்போன் ஆகும். இன்னும் சில தினங்களில் ஒன்பிளஸ் நிறுவனத்தின் புதிய பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட உள்ள நிலையில், இந்தாண்டு தொடக்கத்தில் இந்தியாவில் அறிமுகமான ஒன்பிளஸ் 12-ஐ நம்பி வாங்கலாமா? அதற்கான பதில்களும்.. ஒன்பிளஸ் 12 இப்போது என்ன விலைக்கு வாங்க கிடைக்கிறது என்கிற விவரங்களும் இதோ:

இந்த OnePlus போன் மீது ரூ.10,000 தள்ளுபடி!

ஒன்பிளஸ் 12 மீதான அமேசான் ஆபர்: அமேசான் இந்தியா வலைத்தளத்தில் நடக்கும் தீபாவளி சிறப்பு விற்பனையின் ஒரு பகுதியாக ஒன்பிளஸ் 12 மீது ரூ.10,000 தள்ளுபடி கிடைக்கிறது. இந்த ஆபர் நாளைய மறுதினம் கிடைக்காமல் போகலாம். ஏனென்றால் அக்.29 ஆம் தேதியோடு அமேசான் தீபாவளி விற்பனை முடிவடைகிறது. ஆக ஒன்பிளஸ் 12-ஐ மிகவும் 'சீப்' ஆன விலைக்கு வாங்க இதுவே லாஸ்ட் சான்ஸ் ஆகும்!

அமேசானில் தற்போது ஒன்பிளஸ் 12 ஆனது எந்த வங்கி தள்ளுபடியும் இல்லாமல் நேரடியாக ரூ.61,999 க்கு வாங்க கிடைக்கிறது. ஒருவேளை நீங்கள் பேங்க் ஆபரையும் பயன்படுத்தினால், அதாவது ஐசிஐசிஐ வங்கி கிரெடிட் கார்ட்டை கொண்டு வாங்கினால் ரூ.7000 உடனடி தள்ளுபடி கிடைக்கும். ஆக ஒன்பிளஸ் 12 ஸ்மார்ட்போனை ரூ.54,999 க்கு வாங்கலாம். அதாவது ஒன்பிளஸ் 12-ன் எம்ஆர்பி விலையான ரூ.64,000 இல் இருந்து ரூ.10,000 குறைவான விலைக்கு வாங்கலாம்!

இந்த OnePlus போன் மீது ரூ.10,000 தள்ளுபடி!

ஒன்பிளஸ் 12-ஐ இப்போது நம்பி வாங்கலாமா? சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால்.. இரண்டையும் ஒப்பிடவே முடியாது. ஏனென்றால் ஒன்பிளஸ் 13 ஆனது முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு சில மிகப்பெரிய அப்கிரேட்களை பெறவுள்ளது. அதுமட்டுமின்றி இது ரூ.77,000 க்கு அறிமுகமாகும் என்றும் கூறப்படுகிறது. ஆகையால் பட்ஜெட்டை பொறுத்து உங்களுக்கான மாடலை நீங்கள் தேர்வு செய்துகொள்ளலாம்.

ஒன்பிளஸ் 12 ஸ்மார்ட்போன் ஆனது ஒன்பிளஸ் 11 உடன் ஒப்பிடும் போது முற்றிலும் புதிய வடிவமைப்பை பெறவில்லை என்றாலும் கூட சில நுட்பமான மாற்றங்களை பெற்று, அழகியலை மேம்படுத்தியுள்ளது. அதே வட்ட வடிவிலான கேமரா மாட்யூலை கொண்டுள்ளது; சென்சார்களுக்கு மேல் உள்ள கிளாஸ் பிளேட் நேர்த்தியை சேர்க்கிறது. பேக் பேனலின் மேட் பினிஷ், குறிப்பாக ஃப்ளோவி எமரால்டு கலர் சூப்பராக உள்ளது.

ஒன்பிளஸ் 13 மாடலில் பிஓஇ-யின் லேட்டஸ்ட் டிஸ்பிளே (அதாவது மார்க்கெட்டின் பெஸ்ட் டிஸ்பிளே) இடம்பெறவுள்ளது. அதேபோல தான் ஒன்பிளஸ் 12 ஸ்மார்ட்போனும் அறிமுகத்தின் போது பெஸ்ட் டிஸ்பிளேவை பேக் செய்தது. இது ப்ரோஎக்ஸ்டிஆர் (ProXDR) மற்றும் டால்பி விஷன் (Dolby Vision) ஆதரவு உடனான 6.82-இன்ச் எல்டிபிஓ டிஸ்பிளேவை கொண்டுள்ளது.

ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போன் ஆனது ஸ்னாப்டிராகன் 8 எலைட் சிப்செட்டை பேக் செய்ய உள்ள நிலையில், ஒன்பிளஸ் 12 ஆனது அதன் முன்னோடியான குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 சிப்செட்டை பேக் செய்கிறது. பெர்ஃபார்மென்ஸை பொறுத்தவரை குறையே சொல்ல முடியாது. ஹீட்டிங் சிக்கல் இல்லாமல் கூல் ஆக இருக்கிறது மற்றும் குறைந்த அளவிலான பேட்டரியை மட்டுமே உபயோகிக்கிறது.

பேட்டரியை பொறுத்தவரை ஒன்பிளஸ் 12 ஆனது அந்த நேரத்தில் "பெரிய" 5400mAh பேட்டரியை பேக் செய்தது. ஒன்பிளஸ் 13 ஆனது இதுவரை எந்த ஒன்பிளஸ் போனிலும் இடம்பெறாத 6000mAh பேட்டரியை கொண்டிருக்கும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் பாஸ்ட் சார்ஜிங் திறன்களில் வேறுபாடு இருக்காது. இரண்டுமே 100W சார்ஜிங் மற்றும் 50W வயர்லெஸ் சார்ஜிங்கை ஆதரிக்கும்

ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போனில் மூன்று 50எம்பி கேமராக்கள் இடம்பெற உள்ளது. ஆனால் ஒன்பிளஸ் 12 ஸ்மார்ட்போனில் 50எம்பி மெயின் கேமரா + 48எம்பி வைட் ஆங்கிள் லென்ஸ் கேமரா + 3எக்ஸ் பெரிஸ்கோப் அல்லது ஆப்டிகல் ஜூம் கொண்ட 64எம்பி டெலிஃபோட்டோ லென்ஸ் கேமரா உள்ளது. முன்பக்கத்தில் உள்ள 32எம்பி செல்பீ கேமராவை கொண்டுள்ளது.

English summary
Last chance to buy OnePlus 12 for Rs 54999 in Amazon 2024 Diwali Sale Which ends October 29
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X