Home
Deal of the day

லேப்டாப், ஸ்மார்ட்போன்கள் சேர்த்தே இந்த விலையில் வாங்கலாம்- அமேசான் அதிரடி தள்ளுபடி!

தற்போதைய காலக்கட்டத்தில் பிரதான சாதனமாக ஸ்மார்ட்போன் மற்றும் லேப்டாப்கள் உருவெடுத்து உள்ளது என்றால் அது மிகையல்ல. கொரோனா பரவல் தொடங்கிய காலக்கட்டம் முதல் பல்வேறு தேவைகளுக்கும் மொபைல், லேப்டாப் பிரதானமாக இருக்கிறது. வீட்டில் இருந்தே வேலை பார்ப்பது, ஆன்லைன் வகுப்பு, பொழுதுபோக்கு தேவை என பலவகைகளுக்கும் லேப்டாப், மொபைல் அத்தியாவசியம். லேப்டாப், மொபைல் வாங்க திட்டமிட்டிருந்தால் அதற்கு இது சரியான நேரமாகும். காரணம், அமேசானில் லேப்டாப், மொபைல் உள்ளிட்ட பல்வேறு சாதனங்களுக்கும் சிறந்த சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

லேப்டாப், ஸ்மார்ட்போன்கள் சேர்த்தே இந்த விலைதான்- அமேசான் அதிரடி!

ரெட்மி 9 ஆக்டிவ் ஸ்மார்ட்போன்

ரெட்மி 9 ஆக்டிவ் சாதனத்தை சிறந்த தள்ளுபடி விலையுடன் வாங்கலாம். இந்த ஸ்மார்ட்போன் ஆனது ரூ.9,499 ஆக இருந்த நிலையில் தற்போது அமேசானில் சிறந்த தள்ளுபடி வழங்கப்படுகிறது. பட்ஜெட் விலையில் விற்கப்பட்ட இந்த சாதனம் தற்போது தள்ளுபடி விலையுடன் ரூ.8799 என கிடைக்கிறது. கூடுதலாக இந்த சாதனத்துக்கு வங்கி சலுகைகளும் வழங்கப்படுகிறது. 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி உள்சேமிப்பு என்ற வேரியண்டில் இந்த ஸ்மார்ட்போன் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போனானது ஆக்டோ கோர் ஹீலியோ ஜி35 மூலம் இயக்கப்படுகிறது. 13 மெகாபிக்சல் பிரதான கேமரா மற்றும் 2 மெகாபிக்சல் இரண்டாம் நிலை கேமரா உடன் வருகிறது. இது ஏஐ போர்ட்ரெய்ட் வசதியோடு வருகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் முன்புறத்தில் 5 மெகாபிக்சல் செல்பி கேமரா இருக்கிறது. 6.53 இன் எச்டி ப்ளஸ் டிஸ்ப்ளே, 5000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 10 வாட்ஸ் சார்ஜிங் ஆதரவுடன் கிடைக்கிறது. இரட்டை நானோ சிம் கார்ட் ஆதரவையும் இது கொண்டிருக்கிறது.

சாம்சங் கேலக்ஸி எம்32 ஸ்மார்ட்போன்

சாம்சங் கேலக்ஸி எம்32 சாதனமும் சிறந்த தள்ளுபடி விலையுடன் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் ஆனது லைட் ப்ளூ வண்ண விருப்பத்தில் வருகிறது. மேலும் இது 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி உள்சேமிப்பு வசதியோடு வருகிறது. பிரைம் வாடிக்கையாளர்களுக்கு 6 மாதம் இலவச ஸ்க்ரீன் மாற்றும் வசதி இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் விலை ஆனது ரூ.16,999 ஆக இருந்த நிலையில் தற்போது அமேசான் தளத்தில் சிறந்த தள்ளுபடியுடன் கிடைக்கிறது. அமேசானில் இந்த ஸ்மார்ட்போனை ரூ.12,999 என்ற விலையில் வாங்கலாம். கூடுதலாக நோ காஸ்ட் இஎம்ஐ விருப்பம் மற்றும் வங்கி சலுகைகள் வழங்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட், 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் உடன் வருகிறது. 6.4 இன்ச் சூப்பர் அமோலெட் டிஸ்ப்ளே உடன் வருகிறது. முழு எச்டி ப்ளஸ் ரெசல்யூஷன் 90 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்தோடு வருகிறது. 64 மெகாபிக்சல் பிரதான கேமரா, 8 மெகாபிக்சல் இரண்டாம் நிலை கேமரா, 2 மெகாபிக்சல் மூன்றாம் நிலை கேமரா, 2 மெகாபிக்சல் நான்காம் நிலை கேமரா என குவாட் ரியர் கேமரா அமைப்போடு வருகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் 6000 எம்ஏஎச் பேட்டரி, ஆண்ட்ராய்டு 11 ஓஎஸ் உடன் வருகிறது.

லெனோவா ஐடியல்பேட் டூயல் க்ரோம்புக் டேப்லெட்

லெனோவா ஐடியல்பேட் டூயல் க்ரோம்புக் டேப்லெட் ஆனது 10.1 இன்ச் டிஸ்ப்ளே வசதியோடு வருகிறது. இந்த லேப்டாப் ஆனது 4 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வசதியோடு வருகிறது. இந்த லேப்டாப் விலை ரூ,36,000 ஆக இருந்த நிலையில் அமேசானில் சிறந்த தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது அமேசானில் இந்த சாதனத்தை ரூ.25,999 என்ற விலையில் கிடைக்கிறது. இந்த சலுகையானது இன்னும் 13 மணிநேரத்துக்கு மட்டுமே கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. லெனோவா ஐடியல் டூயல் க்ரோம்புக் ஆனது க்ரோம் ஓஎஸ் ஆதரவோடு வருகிறது. இது 128 ஜிபி உள்சேமிப்பு வசதியோடு வருகிறது. 400 நிட்ஸ் பிரகாசத்துடன் 10.1 இன்ச் முழு எச்டி ஐபிஎஸ் டிஸ்ப்ளே ஆதரவை கொண்டுள்ளது. 7.35 எம்எம் தடிமன் உடன் வருகிறது. 7000 எம்ஏஎச் பேட்டரி ஆதரவோடு வருகிறது. இது 10 மணிநேர நீடித்த பேட்டரி ஆயுளை கொண்டுள்ளது.

லெனோவா ஐடியாபேட் ஸ்லிம் 3 10-வது ஜென் லேப்டாப்

லெனோவா ஐடியாபேட் ஸ்லிம் 3 10-வது ஜென் இன்டெல் கோர் ஐ3 சாதனமானது சிறந்த தள்ளுபடி விலையில் கிடைக்கிறது. இந்த லேப்டாப் ரூ.55,890 ஆக இருந்த நிலையில் தற்போது சிறந்த சலுகை விலையில் கிடைக்கிறது. இந்த லேப்டாப்பை அமேசானில் ரூ.39490 என்ற விலையில் தற்போது வாங்கலாம். கூடுதலாக நோ காஸ்ட் இஎம்ஐ சலுகைகளும் வழங்கப்படுகிறது. மேலும் இந்த சலுகை 13 மணிநேரத்துக்கு முடிவடைகிறது. 29% சலுகைகளுடன் இந்த லேப்டாப் கிடைக்கிறது. லெனோவா ஐடியல்பேட் ஸ்லிம் 3 லேப்டாப் ஆனது எச்டி மிதமான தடிமனுடன் கிடைக்கும் லேப்டாப் ஆக இருக்கிறது. 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி உள்சேமிப்பு வசதியோடு வருகிறது. விண்டோஸ் 10 ஆதரவு எம்எஸ் ஆஃபிஸ் வசதியோடு வருகிறது. 2 வருட வாரண்டியோடு இந்த லேப்டாப் கிடைக்கிறது. பிளாட்டினம் க்ரே வண்ண விருப்பத்தோடு 1.85 கிலோ எடையை கொண்டுள்ளது.

English summary
Laptops and Smartphones Available at Best discount Price in Amazon
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X