Home
Deal of the day

வந்து 2 மாசம் ஆகல.. அதுக்குள்ள ரூ.7910 நேரடி தள்ளுபடி.. Apple-ன் புது MacBook-ஐ அள்ளும் Amazon கஸ்டமர்கள்!

அமேசான் இந்தியா வலைத்தளத்தில் நடக்கும் கிரேட் சம்மர் சேல் 2026-ல் ஸ்மார்ட்போன்கள் மட்டுமின்றி லேப்டாப்கள் மீதும் நல்ல-நல்ல டிஸ்கவுண்ட்கள் கிடைக்கிறது. அவைகளில் ஆப்பிளின் லேட்டஸ்ட் மாடல் ஆக அறிமுகமான மேக்புக் நியோ (Apple MacBook Neo) மீதான டிஸ்கவுண்ட் கவனிக்கத்தக்க ஆபர் ஆக உள்ளது

அமேசான் இந்தியா வலைத்தளம் ஆனது கடந்த மார்ச் 2026-ல் அறிமுகமான ஆப்பிள் மேக்புக் நியோவின் 256ஜிபி மற்றும் 512ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட்களை தள்ளுபடி விலையில் விற்பனை செய்கிறது. இவ்விரு வேரியண்ட்களின் அசல் விலை என்ன? ஆபர் விலை என்ன? என்னென்ன அம்சங்கள்? நம்பி வாங்கலாமா? இதோ விவரங்கள்:

ரூ.7910 தள்ளுபடி.. Apple-ன் புது MacBook-ஐ அள்ளும் Amazon கஸ்டமர்கள்!

ரூ.69,900 க்கு அறிமுகமான 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் தற்போது அமேசான் இந்தியா வலைத்தளத்தில் ரூ.61,990 க்கு வாங்க கிடைக்கிறது. அதாவது எந்த வங்கி சலுகை அல்லது கூப்பன் ஆபரும் இல்லாமல் ரூ.7910 நேரடி தள்ளுபடி விலையின் கீழ் விற்பனை செய்யப்படுகிறது.

இதேபோல ரூ.79,900 க்கு அறிமுகமான 512ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன் தற்போது அமேசான் இந்தியா கிரேட் சம்மர் சேலின் கீழ் ரூ.71,990 க்கு வாங்க கிடைக்கிறது. அதாவது இதுவும் எந்த வங்கி சலுகை அல்லது கூப்பன் ஆபரும் இல்லாமல் ரூ.7910 நேரடி தள்ளுபடி விலையின் கீழ் விற்பனை செய்யப்படுகிறது.

கூடுதலாக ரூ.1750 வரையிலான பேங்க் கிரெடிட் கார்டு டிஸ்கவுண்ட்டும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அமேசான் பே வழியிலான கேஷ்பேக் ஆபரும் கிடைக்கும். இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்றாலும், அமேசான் கிரேட் சம்மர் சேல் 2026 ஆனது மே 13 ஆம் தேதி வரை நேரலையில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆப்பிள் மேக்புக் நியோ முக்கிய அம்சங்கள்:
- 2408 × 1506 ரெசல்யூஷன்
- 500 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ்
- 13-இன்ச் லிக்விட் ரெட்டினா டிஸ்பிளே
- ஆப்பிளின் ஏ18 ப்ரோ சிப்
- 6-கோர் சிபியு மற்றும் 5-கோர் ஜிபியு
- 8ஜிபி ரேம்
- 256ஜிபி/ 512ஜிபி எஸ்எஸ்டி ஸ்டோரேஜ்
- 16 மணிநேரம் வரை பேட்டரி லைஃப்
- இரண்டு யுஎஸ்பி-சி போர்ட்கள்

- ஒரு மேஜிக் கீபோர்டு லேஅவுட்
- ஒரு பெரிய கிளாஸ் டிராக்பேட்
- ஒரு 1080p வெப்கேம்
- டூயல் ஸ்பீக்கர்கள்
- டூயல் மைக்ரோஃபோன்கள்
- எடை குறைந்த அலுமினிய யூனிபாடி டிசைன்
- சில்வர், பிளஷ், சிட்ரஸ் மற்றும் இண்டிகோ ஆகிய 4 கலர் ஆப்ஷன்கள்

OPINION - நம்பி வாங்கலாமா? மேக்ஓஎஸ் (macOS) கொண்டு இயங்கும் மேக்புக் நியோவானது, முதன்மையாக மாணவர்கள், சாதாரண பயனர்கள் மற்றும் அன்றாட உற்பத்தித்திறன், பிரவுஸிங், ஸ்ட்ரீமிங் மற்றும் லேசான கிரியேட்டிவ் வேலைகளுக்கு நம்பகமான லேப்டாப்பை தேடும்.. முதல் முறையாக மேக்புக்கை வாங்குபவர்களை இலக்காக கொண்டுள்ளது.

சமீபத்திய ஆண்டுகளில் ஆப்பிளின் மிகவும் நம்பிக்கைக்குரிய வெளியீடுகளில் ஒன்றாக மேக்புக் நியோ பார்க்கப்படுகிறது. ஆப்பிள் நிறுவனத்தின் மிகவும் மலிவு விலை லேப்டாப் ஆக இது அறிமுகம் செய்யப்பட்டதில் இருந்து இது நல்ல வரவேற்பை பெற்று வருகிறது

இது போதுமான விநியோகத்தை பராமரிக்க புதிய வழிகளை ஆராய ஆப்பிளை தூண்டியதாக கூறப்படுகிறது. அதாவது அழுத்தத்தை குறைக்க, பேஸிக் 256ஜிபி மேக்புக் நியோ நிறுத்தப்படலாம் என்று கூறப்படுகிறது. ஆக மாணவர்கள் மற்றும் அன்றாட பயன்பாட்டிற்கு நம்பகமான லேப்டாப்பை தேடும் பயனர்கள் அமேசான் இந்தியா வலைத்தளத்தில் கிடைக்கும் இந்த ஆபரை முடிந்த வேகத்தில் பயன்படுத்தி கொள்வது நல்லது.

இதே விலைக்கு இன்னும் சக்திவாய்ந்த ஹார்ட்வேர்-ஐ வழங்கும்விண்டோஸ் லேப்டாப்களுடன் ஒப்பிடும்போது, ஆப்பிளின் இந்த மேக்புக் மாடல் கொஞ்சம் விலை உயர்ந்ததாக இருந்தாலும், ஆப்பிள் ஈகோசிஸ்டமிற்குள் நுழைய.. இதுவொரு எளிமையான நுழைவாயில் ஆகும். அப்பிளின் மேக்புக்குகள் அவற்றின் நீண்ட மென்பொருள் ஆதரவு சுழற்சி, நம்பகமான பேட்டரி ஆயுள் மற்றும் சீரான நீண்ட கால செயல்திறன் ஆகியவற்றிற்காக அறியப்படுகின்றன.

Best Mobiles in India

English summary
Just Launched Before 2 Months Apple MacBook Neo Got Rs 7910 Discount Now in Amazon Summer Sale 2026
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X