Amazon-ல் ஆர்டர் மழை.. ரூ.1400 டிஸ்கவுண்ட்டில் Jio 4ஜி போன்.. UPI ஆதரவு, 2000mAh பேட்டரி, செல்பீ கேமரா!
புது ஸ்மார்ட்போன் வாங்க பட்ஜெட் இல்லை.. ஆனாலும் ரூ.3000 க்குள் என்கிற பட்ஜெட்டில் ஆன்லைன் பேமண்ட்களுக்கான யுபிஐ ஆதரவு, வீடியோ கால்களுக்கான செல்பீ கேமரா, நாள் முழுவதும் நீடிக்கும் நல்ல பேட்டரி லைஃப் ஆகிய முக்கிய அம்சங்களை கொண்ட ஒரு 4ஜி போன் வேண்டுமா?
ஆம் என்றால் நீங்கள் நேராக செல்ல வேண்டியது. அமேசான் இந்தியா வலைத்தளத்திற்கு தான். அங்கே ஜியோபோன் ப்ரைமா 2 4ஜி (JioPhone Prima 2 4G) மாடல் ரூ.3000 க்குள் வாங்க கிடைக்கிறது. இது எம்ஆர்பி விலையான ரூ.4,199 க்கு பதிலாக ரூ.1,400 டிஸ்கவுண்ட் பெற்று ரூ.2,799 க்கு வாங்க கிடைக்கிறது.

ஜியோபோன் ப்ரைமா 2 4ஜி மொபைல் போனின் முக்கிய அம்சங்கள்: ஜியோபோன் ப்ரைமா 2 4ஜி மொபைல் ஆனது 2.4-இன்ச் கர்வ்டு ஸ்க்ரீன் மற்றும் கீபேடை கொண்டுள்ளது. இந்த போன், குறிப்பிடப்படாத குவால்காம் சிப்செட் மற்றும் கைஓஎஸ் 2.5.3 (KaiOS 2.5.3) கொண்டு இயங்குகிறது. இது 4ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜையும், மைக்ரோ எஸ்டி கார்டு வழியாக விரிவாக்கக்கூடிய 128ஜிபி மெமரியையும் ஆதரிக்கிறது.
கேமராக்களை பொறுத்தவரை, ஜியோபோன் ப்ரைமா 2 4ஜி மாடலில் முன்பக்க கேமரா மற்றும் பின்பக்க கேமரா ஆகியவைகள் உள்ளன. எக்ஸ்டர்னல் வீடியோ சாட் ஆப்பின் பயன்பாடு இல்லாமல், இந்த போன் நேரடி வீடியோ காலிங்கையும் ஆதரிக்கிறது. இதில் எல்இடி டார்ச் யூனிட்டும் பொருத்தப்பட்டுள்ளது.
ஜியோவின் இந்த 4ஜி ஃபீச்சர் போன் ஆனது, பயனர்கள் ஸ்கேன் செய்து யுபிஐ மூலம் பணம் செலுத்த அனுமதிக்கும் ஜியோபே-வை ஆதரிக்கிறது.மேலும் இது பொழுதுபோக்கிற்காக ஜியோடிவி, ஜியோசினிமா மற்றும் ஜியோசாவன் போன்ற ஆப்களுடன் வருகிறது.
கூடவே பயனர்கள் ஃபேஸ்புக், யூடியூப் மற்றும் கூகுள் அசிஸ்டன்ட் போன்ற தகவல் தொடர்பு மற்றும் சமூக ஊடக டூல்களையும் அணுகலாம். இந்த போன் 23 மொழிகளுக்கான ஆதரவுடனும் வருகிறது. ஜியோபோன் ப்ரைமா 2 4ஜி மொபைல் அணை 2,000mAh பேட்டரியால் இயக்கப்படுகிறது.
இந்த மொபைல் போன் ஒரு நானோ சிம் மூலம் 4ஜி இணைப்பை ஆதரிக்கிறது. பயனர்கள் இந்த போன் மூலம் எப்எம் ரேடியோவை கேட்கலாம். மேலும், இதில் 3.5மிமீ ஆடியோ ஜாக்கும் உள்ளது. லெதர் போன்ற பினிஷ் உடன் வரும் இந்த மொபைல் போன் அளவீட்டில் 123.4 x 55.5 x 15.1 மிமீ உள்ளது மற்றும் 120 கிராம் எடையை கொண்டுள்ளது.
சமீபத்தில் ஐடெல் (Itel) நிறுவனம் தனது 4ஜி ஃபீச்சர் போன் (4G Feature Phone) பயனர்கள் இப்போது ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.123 மாதாந்திர திட்டத்தை (Reliance Jio Rs.123 monthly plan) ரீசார்ஜ் செய்வதற்கு தகுதி பெற்று உள்ளனர் என்று அறிவித்தும் இங்கே குறிப்பிடத்தக்கது.
இதன் மூலம் இந்தியா முழுவதும் உள்ள பட்ஜெட்-விலை ஐடெல் போன் பயனர்களுக்கு மொபைல் கனெக்டிவிட்டி வசதிகள் கிடைப்பது இன்னும் எளிமைப்படுத்தப்பட்டுள்ளது. ஜியோ நிறுவனத்தின் இந்த நடவடிக்கை ஜியோ பிராண்டட் ஃபீச்சர் போன்களை தாண்டி, தனது ரூ.123 ரீசார்ஜ் ஆனது மற்ற 4ஜி ஃபீச்சர் போன்களுக்கும் கிடைக்க வேண்டும் என்கிற செயல்பாட்டின் முதல்படியை குறிக்கிறது.
ரூ.123 ரீசார்ஜ் திட்டத்துடன், ஐடெல் பயனர்கள் ஜியோவின் மற்ற ப்ரீபெய்ட் திட்டங்களையும் அணுகலாம். இதில் 56 நாட்கள் வேலிடிட்டி வழங்கும் ரூ.234 பிளான், 84 நாட்களுக்கு வேலிடிட்டி வழங்கும் ரூ.369 பிளான் மற்றும் 336 நாட்களுக்கு வேலிடிட்டி வழங்கும் ரூ.1234 பிளான் ஆகியவைகளையும் ரீசார்ஜ் செய்யலாம், இவை ஒவ்வொன்றும் தினசரி 0.5 ஜிபி டேட்டா உடன் வருகின்றன


Click it and Unblock the Notifications