அமேசான் மிரளுது.. ரூ.6,569 போதும்.. 16GB ரேம்.. 5000mAh பேட்டரி.. 45W ஃபாஸ்ட் சார்ஜிங்.. எந்த மாடல்?
அமேசான் விற்பனையில் (Amazon Sale) அடிமட்ட விலையில் 16 ஜிபி ரேம், எச்டிபிளஸ் டிஸ்பிளே, 5000mAh பேட்டரி, 45W ஃபாஸ்ட் சார்ஜிங் போன்ற பீச்சர்கள் மட்டுமல்லாம், பிரீமியம் லுக் கொண்ட ஐடெல் பி55 பிளஸ் (itel P55 Plus) போன் கிடைக்கிறது. இந்த ஐடெல் மாடலின் விலை எப்படி? முழு பீச்சர்கள் என்ன? டிஸ்கவுண்ட் எவ்வளவு? உள்ளிட்ட முழு விவரங்களையும் இப்போது தெரிந்து கொள்ளலாம்.
தீபாவளி பண்டிகை நெருங்கிவிட்டதால், அமேசான் தளத்தில் டிஸ்கவுண்ட் விலையில் கிடைக்கும் போன்களின் விற்பனை பட்டையை கிளப்பி வருகிறது. இந்த விற்பனையில் ரூ.7000 பட்ஜெட்டைவிட மாலிவான விலைக்கு கிடைக்கும் போன்களில் ஐடெல் பி55 பிளஸ் பக்கா ஆப்ஷனாக இருக்கிறது. லெதர் பேனலும் இந்த மாடலில் கிடைக்கிறது.

ஐடெல் பி55 பிளஸ் அமேசான் விற்பனை (itel P55 Plus Amazon Sale): இந்த ஐடெல்லின் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட்டின் விலை ரூ.9,499ஆக இருந்தது. இப்போது, அமேசான் விற்பனையில் வெறும் ரூ.7,299 பட்ஜெட்டில் ஆர்டருக்கு கிடைக்கிறது. இந்த பட்ஜெட்டிலும் ஐசிஐசிஐ கிரெடிட் கார்டுக்கு ரூ.729 உடனடி டிஸ்கவுண்ட் கிடைக்கிறது.
இந்த டிஸ்கவுண்ட் மட்டுமல்லாமல், ரூ.6,900 மதிப்பில் எக்ஸ்சேஞ்ச் சலுகை கிடைக்கிறது. ஆகவே, இந்த ஐடெல் பி55 பிளஸ் போனை வெறும் ரூ.6,569 பட்ஜெட்டில் ஆர்டர் செய்து கொள்ளலாம். ராயல் கிரீன் (Royal Green) மற்றும் மெட்டீயர் பிளாக் (Meteor Black) ஆகிய கலர்களில் ஆர்டர் செய்யலாம். இந்த ஐடெல்லில் என்னென்ன பீச்சர்கள் கிடைக்கின்றன.
ஐடெல் பி55 பிளஸ் அம்சங்கள் (itel P55 Plus Specifications): இந்த ஐடெல்லில் ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் (Android 13 OS) மற்றும் மாலி ஜி57 ஜிபியு (Mali MP1 GPU) கிராபிக்ஸ் கார்டு கொண்ட ஆக்டா கோர் யுனிசோக் டி606 எஸ்ஓசி (Octa Core Unisoc T606 SoC) சிப்செட் பேக் செய்யப்பட்டுள்ளது. இந்த சிப்செட்டில் மீடியம் பர்ஃபாமென்ஸ் எதிர்பார்க்கலாம்.
இந்த ஐடெல் போனில் டைனாமிக் பார் (Dynamic Bar) பீச்சர் கொண்ட 6.6 இன்ச் (720 x 1600 பிக்சல்கள்) எல்சிடி (LCD) டிஸ்பிளே வருகிறது. இதுவொரு 90Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் எச்டிபிளஸ் (HD+) ரெசொலூஷன் கொண்ட பஞ்ச் ஹோல் டிஸ்பிளே (Punch Hole Display) டிஸ்பிளே மாடலாகும். டைனாமிக் பார் பீச்சர் மூலம் நோட்டிபிகேஷன்களை பார்க்கலாம்.
ஆகவே, கால் நோட்டிபிகேஷன்கள் மற்றும் பேட்டரி நோட்டிபிகேஷன்களை தெரிந்து கொள்ளலாம். இதுபோக பேஸ் அன்லாக் நோட்டிபிகேஷன் கிடைக்கிறது. இந்த ஐடெல்லில் 8 ஜிபி ரேம் + 8 ஜிபி டைனாமிக் ரேம் (Dyanamic RAM ) கிடைக்கிறது. 256 ஜிபி மெமரி மட்டுமல்லாமல், மைக்ரோஎஸ்டி கார்டு சிலாட் (microSD Card Slot) பேக் செய்யப்பட்டுள்ளது.
இந்த ரூ.7000 பட்ஜெட்டிலும் 45W ஃபாஸ்ட் சார்ஜிங் (Fast Charging) கொண்ட 5000mAh பேட்டரி வருகிறது. இந்த பேட்டரிக்கு லோவ் டெம்ப் சார்ஜிங் (Low Temp Charging) சப்போர்ட் உள்ளது. அதேபோல ஸ்மார்ட் சார்ஜிங் (Smart Charging) மற்றும் டைப்-சி சார்ஜிங் (Type-C Charging) கிடைக்கிறது. இந்த ஐடெல் போனில் டூயல் ரியர் கேமரா சிஸ்டம் கிடைக்கிறது.
ஆகவே, 50 எம்பி மெயின் கேமரா + ஏஐ லென்ஸ் கொண்ட கேமரா சிஸ்டம் இருக்கிறது. இந்த டூயல் கேமராவில் ஏஐ கிளியர் போர்ட்ராய்டு (AI Clear Portrait), நைட் மோட் (Super Night Mode) மற்றும் பனோரமா மோட் (Panorama Mode) போன்ற பீச்சர்கள் கிடைக்கின்றன. இந்த போனில் 8 எம்பி செல்பீ ஷூட்டர் உள்ளது. பட்ஜெட்டுக்கு பக்கா ஆப்ஷனாகும்.


Click it and Unblock the Notifications