விட்டா கிடைக்காது.. வெறும் ரூ.12,249-க்கு வந்த 6000mAh பேட்டரி.. 50MP கேமரா.. 44W சார்ஜிங்.. எந்த மாடல்?
அமேசான் லிமிடெட் டீல் (Amazon Limited Deal) விற்பனையில் 6000mAh பேட்டரி, 44W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட ஐக்யூ இசட்9எக்ஸ் 5ஜி (iQOO Z9x 5G) போன் இதுவரையில் கிடைக்காத டிஸ்கவுண்ட்டுடன் ஆர்டருக்கு வந்துள்ளது. பேட்டரி சிஸ்டம் மட்டுமல்லாமல், ஃபுல்எச்டிபிளஸ் டிஸ்பிளே, 50 எம்பி மெயின் கேமரா, ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் மற்றும் அட்ரினோ கிராபிக்ஸ் கார்டு போன்ற மிட்-ரேஞ்ச் பீச்சர்களையும் கொடுக்கிறது. இந்த ஐக்யூ போனுக்கு கிடைக்கும் பேங்க் டிஸ்கவுண்ட் மற்றும் முழு பீச்சர்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
ஐக்யூ இசட்9எக்ஸ் 5ஜி அம்சங்கள் (iQOO Z9x 5G Specifications): இந்த பட்ஜெட்டில் பக்கா பர்ஃபாமென்ஸ் எதிர்பார்க்கும்படி ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 6 ஜென் 1 4என்எம் (Octa Core Snapdragon 6 Gen 1 4nm) சிப்செட் மற்றும் கேமிங் பிரியர்களை தட்டித்தூக்க அட்ரினோ 710 ஜிபியு (Adreno 710 GPU) கிராபிக்ஸ் கார்டு கிடைக்கிறது. ஃபன்டச்ஓஎஸ் 14 (FuntouchOS 14) உள்ளது.

லேட்டஸ்ட் மாடலாக வெளியானதால், ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் (Android 14 OS) இருக்கிறது. இந்த ஐக்யூ இசட்9எக்ஸ் 5ஜி போனில் 50 எம்பி + 2 எம்பி மேக்ரோ கேமரா கொண்ட டூயல் ரியர் கேமரா சிஸ்டம் (Dual Rear Camera System) மற்றும் 8 எம்பி செல்பீ ஷூட்டர் பேக் செய்யப்பட்டுள்ளது. ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன் கொண்ட டிஸ்பிளே வருகிறது.
6.72 இன்ச் (2408 × 1080 பிக்சல்கள்s) எல்சிடி (LCD) பேனலுடன் 120Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 1000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது. ஆகவே, டிஸ்பிளேவில் மீடியம் பர்ஃபாமென்ஸ் எதிர்பார்க்க முடியும். பேட்டரி சிஸ்டம் பக்கா பேக்கப் கொடுக்கும்படி இருக்கிறது. ஆகவே, 44W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 6000mAh பேட்டரி பேக் செய்யப்பட்டுள்ளது.
இந்த பெரிய பேட்டரிக்கு டைப்-சி போர்ட் (Type-C Port) உள்ளது. 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட 2 வேரியண்ட்கள் இருக்கின்றன. 8 ஜிபிக்கான டைனாமிக் ரேம் (Dynamic RAM) மற்றும் 1 டிபிக்கான மைக்ரோஎஸ் எஸ்டி கார்டு சிலாட் (microSD Card Slot) கிடைக்கிறது. 2 கலர்களில் இந்த ஐக்யூ கிடைக்கிறது.
இந்த ஐக்யூ இசட்9எக்ஸ் 5ஜி போனில் கிரே (Grey) மற்றும் கிரீன் (Green) ஆகிய கலர்கள் இருக்கிறது. மேலும், IP64 டஸ்ட் ரெசிஸ்டன்ட், 3.5 எம்எம் ஆடியோ மற்றும் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் கிடைக்கின்றன. சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரின்ட் சென்சாரும், 5ஜி எஸ்ஏ/என்எஸ்ஏ கனெக்டிவிட்டியும் கிடைக்கிறது.
ஐக்யூ இசட்9எக்ஸ் 5ஜி அமேசான் விற்பனை (iQOO Z9x 5G Amazon Sale): இந்திய மார்கெட்டில் அறிமுகமானபோது, 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.14,499ஆகவும், 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.15,999ஆகவும் இருந்தது. இப்போது, 6 ஜிபி ரேம் மாடலின் விலை அமேசான் விற்பனையில் ரூ.13,999ஆக இருக்கிறது.
இந்த கம்மி விலையிலும் ரூ.500 கூப்பன் டிஸ்கவுண்ட் மற்றும் ரூ.1,250 பேங்க் டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. இந்த பேங்க் டிஸ்கவுண்ட் பெறுவதற்கு எச்டிஎப்சி கிரெடிட் கார்டு பயன்படுத்த வேண்டும். இந்த சலுகைகள் போக ரூ.13,250 மதிப்பில் எக்ஸ்சேஞ்ச் சலுகை கிடைக்கிறது. ஆகவே, ரூ.12,249 பட்ஜெட்டில் இந்த ஐக்யூ போனை வாங்கி கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications