Home
Deal of the day

விட்றாதீங்க.. வந்த 5 மாசத்துல விலை குறைப்பு.. ஆபர் விலையில் iQOO-வின் 7300mAh பேட்டரி 5ஜி போன்!

இன்றைய தேதிக்கு இந்திய மொபைல் மார்க்கெட்டில், 7000mAh பேட்டரி கொண்ட பல ஸ்மார்ட்போன்கள் இருக்க காரணம் ஐக்யூ (iQOO) நிறுவனம் தான். இந்நிறுவனம் தான் 7000mAh க்கும் அதிகமான கெப்பாசிட்டி கொண்ட ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் இறக்கி அந்த டிரெண்ட்-ஐ கொண்டு வந்தது.

அப்படியாக வந்த ஸ்மார்ட்போன்களில் ஒன்று தான் - ஐக்யூ இஸட்10 5ஜி (iQOO Z10 5G). இது கடந்த ஏப்ரல் மாதம் 7300mAh பேட்டரி உடன் அறிமுகம் செய்யப்பட்டு இருந்தது. தற்போது அமேசானில் நடக்கும் கிரேட் இந்தியன் பெஸ்டிவல் சேல் 2025 விற்பனையின் ஒரு பகுதியாக ரூ.1000 விலை குறைப்பை பெற்றுள்ளது.

ஆபர் விலையில் iQOO-வின் 7300mAh பேட்டரி 5ஜி போன்!

நினைவூட்டும் வண்ணம் இந்தியாவில் ஐக்யூ இஸட்10 5ஜி ஸ்மார்ட்போனின் பேஸிக் 8ஜிபி ரேம் + 128ஜிபி மாடல் ரூ.21,999 க்குஅறிமுகமானது. ஆனால் தற்போது அமேசான் இந்தியா வலைதளத்தில் ரூ.1000 நேரடி விலை குறைப்பை பெற்று ரூ.20,998 க்கு வாங்க கிடைக்கிறது. சுவாரஸ்யமாக இந்த விலை குறைப்பு - க்ளேசியர் சில்வர் (Glacier Silver) மற்றும் ஸ்டெல்லர் பிளாக் (Stellar Black) ஆகிய 2 கலர் ஆப்ஷன்களின் மீதும் கிடைக்கிறது.

ஐக்யூ இஸட்10 5ஜி ஸ்மார்ட்போனின் விரிவான அம்சங்கள்:
- டூயல் சிம் (நானோ + நானோ)
- 2392 x 1080 பிக்சல்ஸ்
- எச்டிஆர் 10 பிளஸ்
- 20:9 ஸ்க்ரீன் ரேஷியோ
- 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்
- 1300 நிட்ஸ் வரையிலான எச்பிஎம்
- 5000 நிட்ஸ் வரையிலான பீக் ப்ரைட்னஸ்
- 6.77-இன்ச் எப்எச்டி பிளஸ் அமோலெட் டிஸ்பிளே

- அட்ரெனோ 720 ஜிபியு
- ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 3 4என்எம் மொபைல் பிளாட்ஃபார்ம்
- 128ஜிபி / 256ஜிபி UFS 2.2 ஸ்டோரேஜ்
- 8ஜிபி / 12ஜிபி LPDDR4X ரேம்
- ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் அடிப்படையிலான பன்டச்ஓஎஸ் 15

- டூயல் ரியர் கேமரா செட்டப்
- சோனி IMX882 சென்சார், எப்/1.79 அபெர்க்ஷர் உடனான 50எம்பி ப்ரைமரி கேமரா
- எப்/2.4 அபெர்க்ஷர் உடனான 2எம்பி டெப்த் சென்சார்
- ஆரா லைட், 30 fps 4கே வீடியோ ரெக்கார்ட்
- எப்/2.0 அபெர்க்ஷர் உடனான 32எம்பி செல்பீ கேமரா (30 fps 4கே வீடியோ ரெக்கார்ட்)

- 90W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு
- 7300mAh பேட்டரி
- இன் டிஸ்பிளே பிங்கர் பிரிண்ட் சென்சார்
- இன்ப்ராரெட் சென்சார்
- யூஎஸ்பி டைப்-சி ஆடியோ
- பாட்டம்-போர்ட்டு ஸ்பீக்கர்
- இராணுவ தர MIL-STD-810H சான்றிதழ்
- தூசி மற்றும் ஸ்பிளாஸ் எதிர்ப்பிற்கான ஐபி65

- 5ஜி
- டூயல் 4ஜி வோல்ட்இ
- வைஃபை 6 802.11 ஏஎக்ஸ்
- ப்ளூடூத் 5.2
- ஜிபிஎஸ் / க்ளோனாஸ் / பெய்டு
- யூஎஸ்பி டைப்-சி
- அளவீட்டில் 7.92மிமீ
- எடையில் 199 கிராம்

ஒருவேளை நீங்கள் வேறு சில பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்கள் மீதான ஆபர்களை தேடினால், பிளிப்கார்ட் (Flipkart) வலைத்தளம் ஆனது பிக் பேங் தீபாவளி விற்பனை (Big Bang Diwali Sale) என்கிற மற்றொரு பண்டிகை கால சிறப்பு விற்பனையை வருகிற அக்டோபர் 11 ஆம் தேதி தொடங்கவுள்ளது. அதில் ஐபோன் 16, ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ், சாம்சங் கேலக்ஸி எஸ்25, சாம்சங் கேலக்ஸி எஸ்25 அல்ட்ரா, பிக்சல் 10, பிக்சல் 9 ப்ரோ ஃபோல்ட் போன்ற மாடல்கள் தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கும். அதுகுறித்த விரிவான கட்டுரையை படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
iQOO Z10 5G Gets Rs 1000 Price Cut in Amazon Great Indian Festival Sale 2025
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X