Home
Deal of the day

அமேசான் சிறப்பு விற்பனை: iQOO ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி தள்ளுபடி.!

அமேசான் தளத்தில் பல்வேறு சாதனங்களுக்கு விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த விலைகுறைப்பு சலுகை
பல்வேறு மக்களுக்கு பயன்படும் வகையில் இருக்கும் என்றுதான் கூறவேண்டும். குறிப்பாக ஒரு சில ஸ்மார்ட்போன், டிவி, லேப்டாப், டேப்லெட் உள்ளிட்ட சாதனங்களுக்கு விலைகுறைப்பு அறிவிக்கப்பபட்டுள்ளது.

அமேசான் சிறப்பு விற்பனை: iQOO ஸ்மார்ட்போன்களுக்கு அதிரடி தள்ளுபடி.!

மேலும் அமேசான் தளத்தில் மிகவும் எதிர்பார்த்த iQOO ஸ்மார்ட்போன்களுக்கு தள்ளபடி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி விலைகுறைக்கப்பட்ட அந்த ஸ்மார்ட்போன்களின் பட்டியலை சற்று விரிவாகப் பார்ப்போம்.

iQOO Z5 5G ஸ்மார்ட்போன்

8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட iQOO Z5 5G ஸ்மார்ட்போனின் அசல் விலை ரூ.29,990-ஆக உள்ளது. ஆனால் அமேசான் தளத்தில் அறிவிக்கப்பட்ட சலுகையின் மூலம் ரூ.23,990-விலையில் வாங்க முடியும். குறிப்பாக இந்த சாதனத்திற்கு 20 சதவிகிதம் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. அம்சங்கள் குறித்து பார்க்கையில், இந்த ஸ்மார்ட்போன் ஆனது 6.67 இன்ச் முழு எச்டி ப்ளஸ் டிஸ்ப்ளே உடன் வருகிறது. 1,080x2,400 பிக்சல்கள் தீர்மானத்துடன் எல்சிடி டிஸ்ப்ளே ஆதரவோடு வருகிறது. மேலும் குவால்காம் ஸ்னாப்டிராகன் 778ஜி எஸ்ஓசி, 5000 எம்ஏஎச் பேட்டரி, 64எம்பி ரியர் கேமரா, 16எம்பி செல்பீ கேமரா உள்ளிட்ட பல்வேறு சிறப்பான அம்சங்களை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்.

iQOO Z3 5G ஸமார்ட்போன்

iQOO Z3 5G ஸமார்ட்போனின் அசல் விலை ரூ.24,990-ஆக உள்ளது. ஆனால் அமேசான் தளத்தில் அறிவிக்கப்பட்ட சலுகையின் மூலம் இந்த ஸ்மார்ட்போனை ரூ.18,990-விலையில் வாங்க முடியும். குறிப்பாக இந்த சாதனத்திற்கு 24 சதவிகிதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 6.58 இன்ச் முழு எச்டி ப்ளஸ் எல்சிடி டிஸ்ப்ளே 2400 × 1080 பிக்சல்கள் தீர்மானத்தோடு வருகிறது. மேலும் இது 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்துடன் வருகிறது. அட்ரினோ 620 ஜிபீயூ, 4 எக்ஸ் ரேம் உடன் வருகிறது. மேலும் 1டிபி வரை மெமரி விரிவாக்கக்கூடிய மைக்ரோ எஸ்டி கார்ட் ஸ்லாட் வசதி இருக்கிறது. குவால்காம் ஸ்னாப்டிராகன் 768ஜி எஸ்ஓசி வசதியும் இந்த ஸ்மார்ட்போனில் இருக்கிறது. குறிப்பாக 64எம்பி ரியர் கேமரா, 16எம்பி செல்பீ கேமரா ஆதரவுடன் வெளிவந்துள்ளது iQOO Z3 5G ஸமார்ட்போன்.

iQOO 7 Legend 5G ஸ்மார்ட்போன்

iQOO 7 Legend 5G ஸ்மார்ட்போனின அசல் விலை ரூ.44,990-ஆக உள்ளது. ஆனால் அமேசான் தளத்தில் அறிவிக்கப்பட்ட சலுகையின் மூலம் இந்த ஸ்மார்ட்போனை ரூ.39,990-விலையில் வாங்க முடியும். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனுக்கு 11 சதவிகிதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. இந்த புதிய ஸ்மார்ட்போன் 6.62' இன்ச் கொண்ட 120Hz ரெப்பிரேஷ் ரெட் 2400 x 1080 பிக்சல் உடன் கூடிய டிஸ்பிளேவுடன் வருகிறது. இது குவால்காம் ஸ்னாப்டிராகன் 888 5G சிப்செட் உடன் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் உடன் வருகிறது. இது 48MP கொண்ட முதன்மை கேமராவுடன் கூடிய ட்ரிபிள் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. 66W பிளாஷ் சார்ஜ் கொண்ட 4000 பேட்டரியை கொண்டுள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம்.

iQOO 7 5G ஸ்மார்ட்போன்

8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி கொண்ட iQOO 7 5G ஸ்மார்ட்போனின் விலை அசல் விலை ரூ.34,990-ஆக உள்ளது. ஆனால் அமேசான் தளத்தில் அறிவிக்கப்பட்ட சலுகையின் மூலம் இந்த ஸ்மார்ட்போனை ரூ.29,990-விலையில் வாங்க முடியும். மேலும் 6.62' இன்ச் கொண்ட 120Hz ரெப்பிரேஷ் ரெட் 2400 x 1080பிக்சல் உடன் கூடிய டிஸ்பிளேவுடன் வருகிறது. இது குவால்காம்
ஸ்னாப்டிராகன் 888 5பு சிப்செட் உடன் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் உடன் வருகிறது. இது48MP கொண்ட முதன்மை கேமராவுடன் கூடிய ட்ரிபிள் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. 66W பிளாஷ் சார்ஜ் கொண்ட 4000 பேட்டரியை கொண்டுள்ளது. குறிப்பாக கேமிங் உள்ளிட்ட வசதிகளுக்கு தகுந்தபடி இந்த ஸ்மார்ட்போன் உருவாக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
iQOO Smartphone Gets Huge Discount in Amazon Great indian Festival Sale: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X