அமேசான் மிரளுது.. ரூ.2000 டிஸ்கவுண்ட்.. SONY கேமரா.. 120W சார்ஜிங்.. 5160mAh பேட்டரி.. 8GB ரேம்.. எந்த மாடல்?
பிரீமியம் போனுக்கு பக்கா டிஸ்கவுண்ட் கிடைத்தால், ஆர்டரை அடிச்சு புடிச்சுதான போடுவாங்க.. அப்படியான பேங்க் டிஸ்கவுண்ட்டில் 1.5K ரெசொலூஷன் கொண்ட அமோலெட் டிஸ்பிளே, சோனி ஐஎம்எக்ஸ்920 சென்சார் கொண்ட 50 எம்பி மெயின் கேமரா, 120W அல்ட்ரா ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 5160mAh பேட்டரி போன்ற பிரீமியம் பீச்சர்களை கொடுக்கும் ஐக்யூ நியோ9 ப்ரோ (iQOO Neo9 Pro) ஆர்டருக்கு கிடைக்கிறது. டூயல் டோன் லெதர் பேனல், கியூ1 சூப்பர்கம்ப்யூட்டிங் சிப் போன்ற பிரத்யேக பீச்சர்களும் வருகின்றன.
இந்தியாவில் வெளியான ஐக்யூ போன்களில் பிரீமியம் பீச்சர்கள் மட்டுமல்லாமல், பிரீமியம் லுக் கொடுக்கும் போனாக ஐக்யூ நியோ9 ப்ரோ பெயர் பெற்றிருக்கிறது. கேமிங் பிரியர்களுக்கான பீச்சர்கள் வருவதால், லாக்-ப்ரீ பர்ஃபாமென்ஸ் கிடைக்கிறது. சிப்செட் மற்றும் கேமரா சென்சார்களும் பிரீமியமாக இருக்கின்றன. இப்படி ஒட்டுமொத்தமாக பட்ஜெட்டுக்கு ஏற்றதாக இருக்கிறது.

ஐக்யூ நியோ9 ப்ரோ விலை, அம்சங்கள் (iQOO Neo9 Pro Price Specifications): கேமிங் பிரியர்களுக்காக பிரீமியம் அனுபவம் கொடுக்கும்படி பிளாட் டிசைனில் 1.5K ரெசொலூஷன் மற்றும் 144Hz ரெஃப்ரெஷ் ரேட் பீச்சர்களுடன் 6.78 இன்ச் (2800 × 1260 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே வருகிறது. இந்த டிஸ்பிளேவில் 2160Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி மற்றும் 3000 நிட்ஸ் பிரைட்னஸ் வருகிறது.
கேமிங் மட்டுமல்லாமல், ஓடிடி பிரியர்களுக்காவும் எச்டிஆர்10பிளஸ் (HDR10+) அவுட்புட் கிடைக்கிறது. இதுபோக கியூ1 சூப்பர்கம்ப்யூட்டிங் சிப்செட் பிரத்யேகமாக கிடைக்கிறது. இதுபோக 4என்எம் ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 மொபைல் (4nm Octa Core Snapdragon 8 Gen 2 Mobile) சிப்செட் கிடைப்பதால், பர்ஃபாமென்ஸ் அடுத்த லெவலுக்கு எதிர்பார்க்கலாம்.
ஓஎஸ் மற்றும் யுஐ பார்க்கையில், ஆண்டாராய்டு 14 (Android 14) மற்றும் ஃபன்டச்ஓஎஸ் 14 (Funtouch OS 14) கிடைக்கிறது. 2 சிப்செட்கள் இருந்தும், கூடுதல் அவுட்புட் எதிர்பார்க்கும்படி அட்ரினோ 730 ஜிபியு (Adreno 730 GPU) கிராபிக்ஸ் கார்டு இருக்கிறது. இந்த ஐக்யூ நியோ9 ப்ரோவில் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட் ஆர்டருக்கு கிடைக்கிறது.
மேலும், 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டும், 12 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டும் ஆர்டருக்கு வருகிறது. இந்த ஐக்யூவில் கேமராவும் பக்கா டெக்னாலஜி மற்றும் சென்சார் கொண்டதாகவே இருக்கிறது. விசிஎஸ் பயோனிக் (VCS Bionic) மற்றும் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) சப்போர்ட் வருகிறது.
இந்த பீச்சர்களுடன் சோனி ஐஎம்எக்ஸ்920 (Sony IMX920) சென்சார் கொண்ச 50 எம்பி மெயின் கேமரா கிடைக்கிறது. இந்த கேமராவில் 4K வீடியோ ஷூட் மற்றும் நைட் வீடியோ ஷூட் செய்து கொள்ளலாம். 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா மற்றும் 1080p வீடியோ ஷூட் கொடுக்கும் 16 எம்பி செல்பீ கேமராவும் இந்த ஐக்யூ நியோ9 ப்ரோ போனில் இருக்கிறது.
120W சார்ஜிங் கொடுக்கும் 5160mAh பேட்டரி மற்றும் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் கிடைக்கின்றன. இந்த ஐக்யூ போனின் 8 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டின் விலை ரூ.35,999ஆக இருக்கிறது. அமேசான் விற்பனையில் (Amazon Sale) ஐசிஐசிஐ கிரெடிட் கார்டுக்கு ரூ.2000 உடனடி டிஸ்கவுண்ட் போக ரூ.33,999 பட்ஜெட்டில் ஆர்டர் செய்து கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications