ரூ.3,500 பேங்க் டிஸ்கவுண்ட்.. ரூ.1,000 கூப்பன் டிஸ்கவுண்ட்.. 120W சார்ஜிங்.. 7000mAh பேட்டரி.. எந்த மாடல்?
அமேசான் தளத்தில் பிரீமியம் பர்ஃபாமென்ஸ் கொடுக்கும் ஸ்மார்ட்போனான ஐக்யூ நியோ 10 (iQOO Neo 10) மாடலுக்கு ஒரே நரத்தில் பேங்க் டிஸ்கவுண்ட் மற்றும் கூப்பன் டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. ஆகே, இதைவிட மலிவான விலைக்கு இந்த ஐக்யூ நியோ 10 ஸ்மார்ட்போன் கொடுக்கிறது.
இப்போது, அமேசான் தளத்தில் நடந்துவரும் கிரேட் சம்மர் விற்பனையில் ரூ.37,999 விலைக்கு ஐக்யூ நியோ 10 ஸ்மார்ட்போனின் 8 ஜிபி ரேம் +256 மெமரி மாடல் கிடைக்கிறது. இந்த தள்ளுபடி போக தெர்ந்தெடுக்கப்பட்ட கிரெடிட் கார்டுகளுக்கு ரூ.3,500 தள்ளுபடி கிடைக்கிறது. ரூ1.000 கூப்பன் டிஸ்கவுண்ட்கிடைக்கிதறது. ஆகவே, ரூ.4,500 விலை கம்மியாக வாங்கி கொள்ளலாம்.

ஐக்யூ நியோ 10 அம்சங்கள் (iQOO Neo 10 Specifications):
ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) கொண்ட மாடலாக இருக்கிறது. 3 ஓஎஸ் அப்டேட்கள் மற்றும் 4 வருட செக்யூரிட்டி அப்டேட்கள் வருகின்றன. ஃபன்டச் ஓஎஸ் 15 (Funtouch OS 15) கிடைக்கிறது. 120W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 7000mAh பேட்டரி கிடைக்கிறது. வெறும் 19 நிமிடங்களில் 50 சதவீத சார்ஜ் செய்து கொள்ளலாம். 36 நிமிடங்களில் 100 சதவீத சார்ஜ் செய்து கொள்ளலாம்.
மேலும், ஃபைபாஸ் சார்ஜிங் சப்போர்ட் கொடுத்துள்ளது. 7கே டோம் விசி லிக்விட் கூலிங் (7K Ice Dome VC Liquid Cooling) கிடைக்கிறது. பெரிய பேட்டரியுடன் 206 கிராம் எடை உள்ளது. 6.78 இன்ச் (2800 x 1260 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளேவை கொடுக்கிறது. 1.5K ரெசொலூஷன் மற்றும் 144Hz ரெஃப்ரெஷ் ரேட் கிடைக்கிறது. 360Hz டச் சாம்பிளிங் ரேட் உள்ளது.
5500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது. எச்டிஆர் 10பிளஸ் (HDR 10+) வருகிறது. 4320Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி, டிசி டிம்மிங் (DC Dimming) மற்றும் எம்இஎம்சி (MEMC) சப்போர்ட் கொண்ட மாடலாக ஐக்யூ நியோ 10 ஸ்மார்ட்போன் இருக்கிறது. ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8எஸ் ஜென் 4 4என்எம் (Octa Core Snapdragon 8s Gen 4 4nm) சிப்செட் உள்ளது.
அட்ரினோ 825 ஜிபியு (Adreno 825 GPU) கிராபிக்ஸ் கார்டையும் கொடுத்து இருக்கிறது. சோனி ஐஎம்எக்ஸ்882 (Sony IMX882) சென்சார் மற்றும் எப்/1.79 அபெர்சர் கொண்ட 50 எம்பி மெயின் கேமரா கிடைக்கிறது. ஓஐஎஸ் டெக்னாலஜி மற்றும் 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா கிடைக்கறது. ஜிசி08ஏ3 WA1XA சென்சாருடன் வைடு ஆங்கிள் கேமரா கிடைக்கிறது.
4K வீடியோ ரெக்கார்டிங் கிடைக்கிறது. முன்பக்கத்தில் எப்/2.45 அபெசர் மற்றும் 4K 60 fps வீடியோ ரெக்கார்டிங் கிடைக்கிறது. இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (In-display Fingerprint Sensor) மற்றும் இன்பிராரெட் சென்சாரை (Infrared Sensor) இந்த ஐக்யூ நியோ 10 ஸ்மார்ட்போன் கொடுத்துள்ளது. ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo Speakers) கொடுக்கப்பட்டு உள்ளன.
யூஎஸ்பி டைப்-சி ஆடியோ மற்றும் IP65 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & ஸ்பிளாஷ் ரெசிஸ்டன்ட் கிடைக்கிறது. 8.09 எம்எம் தடிமன் மற்றும் 206 கிராம் எடை கொண்டுள்ளது. 5ஜி எஸ்ஏ / என்எஸ்ஏ (5G SA/NSA) மற்றும் டூயல் 4ஜி வோஎல்டிஇ உள்ளது. இன்பெர்னோ ரெட் (Inferno Red) மற்றும் டைட்டானியம் குரோம் (Titanium Chrome) ஆகிய கலர்களில் வாங்கி கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications