iQOO வெச்சான் பாரு.. ஆஃபர் ரேட்ல 7600mAh பேட்டரி.. 100W சார்ஜிங்.. AMOLED டிஸ்பிளே.. எந்த மாடல்?
ஐக்யூ நிறுவனத்தின் மிட்-ரேஞ்ச் மாடலான ஐக்யூ 15ஆர் (iQOO 15R) ஸ்மார்ட்போனுக்கு அமேசான் தளத்தில் தள்ளுபடி கிடைக்கிறது. 100W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 7600mAh பேட்டரி மற்றும் சோனி எல்ஒய்டி சென்சார் கொண்ட 50 எம்பி மெயின் கேமராவுடன் விற்பனைக்கு கிடைக்கிறது.
பிரீமியம் பர்ஃபாமென்ஸ் கொண்ட மிட்-ரேஞ்ச் மாடலாக இந்த ஐக்யூ 15ஆப் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது. ஏனென்றால், ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 (Snapdragon 8 Elite Gen 5) சிப்செட்டை கொடுத்துள்ளது. கியூ2 கேமிங் சிப் கொடுத்துள்ளது. மேலும், ஐஸ்கோர் விசி கூலிங் சிஸ்டம் கிடைக்கிறது.

இந்த பீச்சர்களுடன் அமேசான் தளத்தில் 13 சதவீத தள்ளுபடி போக 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மெமரி வேரியண்ட் கிடைக்கிறது. ஆகவே, ரூ.46,999 விலைக்கு வாங்கி கொள்ளலாம். மேலும், தேர்ந்தெடுக்கப்பட்ட பேங்குகளின் கிரெடிட் கார்டுகளுக்கு ரூ.2,000 தள்ளுபடியும் கிடைக்கும். ஆகவே, ரூ.44,999 விலைக்கு வாங்கி கொள்ளலாம்.
லேட்டஸ்ட் ஏஐ மற்றும் கேமிங் பீச்சர்களுடன் ஓர்ஜின்ஓஎஸ் 6 (OriginOS 6) கிடைக்கிறது. மேலும், ஆண்ட்ராய்டு 16 ஓஎஸ் (Android 16 OS) கிடைக்கிறது. 4 வருடங்களுக்கு ஆண்ட்ராய்டு ஓஎஸ் அப்டேட் கிடைக்கிறது. மேலும், 6 வருடங்களுக்கு செக்யூரிட்டி அப்டேட்கள் கொடுக்கப்பட்டு இருக்கின்றன.
ஐக்யூ 15ஆர் அம்சங்கள் (iQOO 15R Specifications): கேமிங் பிரியர்களுக்கு ஏற்ப பிளாட் டிஸ்பிளே டிசைன் கிடைக்கிறது. இந்த டிசைனுடன் 144Hz ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 144FPS கொண்ட 6.59 இன்ச் (2750 x 1260 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளேவை இந்த ஐக்யூ 15ஆர் ஸ்மார்ட்போன் கொடுத்துள்ளது.
மேலும், இந்த டிஸ்பிளேவுக்கு 1.5K ரெசொலூஷன் மற்றும் 5000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கொடுக்கப்பட்டு உள்ளது. 300Hz டச் சாம்பிளிங் ரேட், 4320Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி கிடைக்கிறது. ஓடிடி பிரியர்களுக்காக எச்டிஆர்10பிளஸ் (HDR10+) கிடைக்கிறது. மேலும், டிசி டிம்மிங் (DC Dimming) கொடுத்து இருக்கிறது.
இந்த டிஸ்பிளேவுக்கு ஸ்காட் ஷீல்டு கிளாஸ் (Schott Shield Glass) புரொடெக்சன் கிடைக்கிறது. பிரீமியம் பர்ஃபாமென்ஸ் கொடுக்கும்படி ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 5 3என்எம் (Octa Core Snapdragon 8 Gen 5 3nm) சிப்செட் கிடைக்கிறது. அட்ரினோ 840 ஜிபியு (Adreno 840 GPU) கிராபிக்ஸ் கார்டு கிடைக்கிறது.
ஹீட் கன்ட்ரோலுக்காக டூயல் லேயர் கிராபைட் ஷீட் (Dual Layer Graphite Sheet) கிடைக்கிறது. 100W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 7600mAh பேட்டரி கிடைக்கிறது. சோனி எல்ஒய்டி 700வி (Sony LYT 700V) சென்சாருடன் 50 எம்பி மெயின் கேமரா கிடைக்கிறது. ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் டெக்னாலஜி கிடைக்கிறது.
8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா கொண்ட டூயல் ரியர் கேமரா சிஸ்டம் கொண்டுள்ளது. 32 எம்பி செல்பீ ஷூட்டர் உள்ளது. IP68 ரேட்டிங் + IP69 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ட் (Dust & Water Resistant) இந்த ஐக்யூ 15ஆர் ஸ்மார்ட்போனுக்கு கிடைக்கிறது. டிரையம்ப் சில்வர் (Triumph Silver) மற்றும் டார்க் நைட் (Dark Knight) ஆகிய கலர்களில் வாங்கி கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications