iQOO நீ கலக்கு.. 9000mAh பேட்டரி புது போன்.. உடனே 7000எம்ஏஎச் மாடல் மீது ரூ.4000 வங்கி தள்ளுபடி.. செம்ம டீல்!
ஐக்யூ நிறுவனத்தின் அடுத்த பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் ஆன ஐக்யூ 16 (iQOO 16) மாடல் ஆனது ஐஎம்இஐ (IMEI) தரவுத்தளத்தில் காணப்பட்டதாக கூறப்படுவதால், இது கூடிய விரைவில் இந்தியா மற்றும் உலகளவில் அதிகாரப்பூர்வமாக அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தகவல் வெளியான வேகத்தில், முன்னதாக அறிமுகமான ஐக்யூ 15 ஸ்மார்ட்போனின் மீது அமேசான் இந்தியா வலைத்தளம் ஆனது ரூ.4000 பேங்க் டிஸ்கவுண்ட்டை அறிவித்துள்ளது.
நினைவூட்டும் வண்ணம் ஒன்பிளஸ் 15 ஸ்மார்ட்போனின் முக்கிய போட்டியாளர் ஆக அறிமுகம் செய்யப்பட்ட ஐக்யூ 15 ஸ்மார்ட்போன், கடந்த டிசம்பர் 2025 முதல் இந்தியாவில் வாங்க கிடைக்கிறது. தற்போது அமேசான் இந்தியா வலைத்தளத்தில் வங்கி சலுகையின் கீழ் குறைக்கப்பட்ட விலையின் கீழ் விற்பனை செய்யப்படுகிறது.

அதாவது நேரடி விலை குறைப்பை பெறவில்லை. இன்னமும் ஐக்யூ 15 ஸ்மார்ட்போனின் பேஸிக் 12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.72,999 க்கும், 16ஜிபி ரேம் + 512ஜிபி ஆப்ஷன் ரூ.79,999 க்கும் தான் வாங்க கிடைக்கிறது. ஆனால தகுதியான பேங்க் கார்டுகளை (எஸ்பிஐ கிரெடிட் கார்டு, ஐசிஐசிஐ கிரெடிட் கார்டு) கொண்டுள்ள வாடிக்கையாளர்களை இவ்விரு ஸ்டோரேஜ் ஆப்ஷன்கள் மீதுமே ரூ.4000 டிஸ்கவுண்ட்டை பெறலாம்.
இதன் மூலம் ஐக்யூ 15 ஸ்மார்ட்போனின் பேஸிக் 12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷனின் விலையை ரூ.72,999 இல் இருந்து ரூ.68,999 ஆகவும், 16ஜிபி ரேம் + 512ஜிபி ஆப்ஷனின் விலையை ரூ.79,999 இல் இருந்து ரூ.75,999 ஆகவும் குறைக்க முடியும். இந்த டிஸ்கவுண்ட் ஐக்யூ 15 ஸ்மார்ட்போனின் 2 கலர் ஆப்ஷன்களின் மீதும் - ஆல்பா (பிளாக்) மற்றும் லெஜண்ட் (ஒயிட்) கிடைக்கிறது.
ஐக்யூ 15 ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்:
- 6.85-இன்ச் சாம்சங் எம்14 அமோஎல்இடி டிஸ்பிளே
- 3என்எம் ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 5 சிப்செட்
- ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்
- 50 மெகாபிக்சல் (f/1.88) ப்ரைமரி கேமரா
- 100எக்ஸ் டிஜிட்டல் ஜூம் வரை வழங்கும் 50-மெகாபிக்சல் (எப்/2.65) பெரிஸ்கோப் கேமரா
- 50 மெகாபிக்சல் (எப்/2.05) வைட்-ஆங்கிள் கேமரா
- முன்பக்கத்தில் 32-மெகாபிக்சல் (எப்/2.2) செல்பீ கேமரா
- 100W வயர்டு மற்றும் 40W வயர்லெஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவு
- 7000எம்ஏஎச் பேட்டரி
ஐக்யூ 16 ஸ்மார்ட்போனில் என்னென்ன அம்சங்களை எதிர்பார்க்கலாம்? டெக் பிளாக்கர் பாரஸ் குக்லானியின் ஒரு பதிவின்படி, ஐக்யூ 16 ஸ்மார்ட்போன் ஆனது I2601 என்ற மாடல் எண்ணுடன் IMEI தரவுத்தளத்தில் வெளிவந்துள்ளது. இந்த IMEI சான்றிதழ், ஐக்யூ 16 ஸ்மார்ட்போன் ஆனது இந்தியா மற்றும் பிற உலகளாவிய சந்தைகள் உட்பட பல பிராந்தியங்களில் விரைவில் அறிமுகப்படுத்தப்படலாம் என்பதை குறிக்கிறது.
ஐக்யூ 16 ஸ்மார்ட்போன் ஆனது குவால்காமின் வரவிருக்கும் ஸ்னாப்டிராகன் 8 எலைட் ஜென் 6 ப்ரோ பிளஸ் சிப்செட்டை கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சிப்செட், ஏஐ பணிச்சுமைகள், கேமிங் செயல்திறன் மற்றும் மேம்படுத்தப்பட்ட மின்சார திறன் ஆகியவற்றில் கவனம் செலுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் இந்த ஸ்மார்ட்போனில், சுயமாக உருவாக்கப்பட்ட பெர்பார்மென்ஸ் சிப்புடன், ஒரு அட்வான்ஸ்டு பேஸிவ் கூலிங் சிஸ்டமும் இடம்பெறலாம். இந்த காம்பினேஷன், நீண்ட நேர கேமிங் அமர்வுகளின் போது நிலையான செயல்திறனை பராமரிக்கவும், வெப்ப தணிப்பைக் கட்டுப்படுத்தவும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஐக்யூ 16 ஸ்மார்ட்போனில், பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ சென்சார் உட்பட மூன்று ரியர் கேமராக்கள் இடம்பெறலாம் என்றும், இது முந்தைய மாடல்களை காட்டிலும் நீண்ட தூர ஜூம் திறன்களை மேம்படுத்தக்கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆரம்பகட்ட கசிவுகளின்படி, ஐக்யூ 16 ஸ்மார்ட்போனில் 9,000mAh பேட்டரி இடம்பெறலாம். இது உண்மையாக இருந்தால், இந்த பேட்டரி திறன் தற்போதைய பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்களை விட கணிசமான அதிகரிப்பாக இருக்கும்.


Click it and Unblock the Notifications