Home
Deal of the day

சர்ர்னு குறைந்த விலை.. ஆர்டர் குவிக்கும் iQOO 5ஜி போன்.. 64MP பெரிஸ்கோப் கேம், 12GB ரேம், 120W சார்ஜிங்!

ஐக்யூ நிறுவனத்திடம் இருந்து மிகவும் எதிர்பார்க்கப்படும் (ஒன்பிளஸ் 13 ஸ்மார்ட்போனின் முக்கிய போட்டியாளர் ஆன) ஐக்யூ 13 மாடல் வருகிற டிசம்பர் 3 ஆம் தேதியன்று இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதனை தொடர்ந்து கடந்த டிசம்பர் 2023 இல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட ஐக்யூ 12 (iQOO 12) ஸ்மார்ட்போனின் விலை கடுமையாக குறைக்கப்பட்டுள்ளது.

ஐக்யூ 12 ஸ்மார்ட்போனின் அசல் விலை என்ன? இதன் மீது எவ்வளவு விலை குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது? இது அறிமுகமாகி கிட்டத்தட்ட 11 மாதங்கள் ஆகிவிட்டது; போதாக்குறைக்கு இன்னும் சில வாரங்களில் ஐக்யூ 13 வருகிறது, இந்நிலைப்பாட்டில் ஐக்யூ 12-ஐ மாடலை நம்பி வாங்கலாமா? இதோ விவரங்கள்:

சர்ர்னு குறைந்த விலை.. ஆர்டர் குவிக்கும் iQOO 5ஜி போன்!

தற்போது அமேசான் இந்தியா வலைதளத்தில், ஐக்யூ 12 ஸ்மார்ட்போனின் 12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆப்ஷன் ரூ.59,999 க்கு பதிலாக ரூ.52,9999 க்கு பட்டியலிடப்பட்டுள்ளது. அதாவது ​​அமேசான் இந்தியா வலைத்தளமானது இந்த மாடலின் மீது ரூ.7,000 (அல்லது 12%) குறைத்து உள்ளது

கூடுதலாக ஐக்யூ 12 ஸ்மார்ட்போனை வாங்கும் போது தேர்ந்தெடுக்கப்பட்ட கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளை பயன்படுத்தினால் வாடிக்கையாளர்களுக்கு ரூ.3,000 வரையிலான உடனடி தள்ளுபடியும் கிடைக்கும். மேலும், உங்கள் பழைய ஸ்மார்ட்போனை எக்ஸ்சேன்ஜ் செய்வதன் மூலம் ரூ.40,000 வரையிலான எக்ஸ்சேன்ஜ் போனஸும் கிடைக்கும்.

ஒருவேளை நீங்கள் ஐக்யூ 12 ஸ்மார்ட்போனின் மீதான இந்த விலை குறைப்பை பயன்படுத்திக்கொள்ள விரும்புகிறீர்கள். ஆனால் கொஞ்சம் "டைட் ஆன பட்ஜெட்டில்" இருக்கிறீர்கள் என்றால், அமேசான் இந்தியா வலைதளத்தில் ஐக்யூ 12 ஸ்மார்ட்போனின் இஎம்ஐ வெறும் ரூ.4,159 முதல் தொடங்குகிறது என்பதை இங்கே குறிப்பிட விரும்புகிறோம்.

ஐக்யூ 12 ஸ்மார்ட்போனை இப்போது நம்பி வாங்கலாமா? அறிமுகமாகி 11 மாதங்கள் ஆனாலும் கூட இந்த ஸ்மார்ட்போனை கண்களை மூடிக்கொண்டு வாங்க 4 காரணங்களை முன் வைக்கலாம். முதல் காரணம், இந்த ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 3 சிப்செட் உள்ளது, இது டாப்-நாட்ச் பெர்ஃபார்மென்ஸை வழங்கும் ஒரு சிப்செட் ஆகும்

இரண்டாவது காரணம் - ஐக்யூ 12 ஸ்மார்ட்போனின் அட்டகாசமான டிஸ்பிளே. இது மென்மையான விஷுவல்ஸ் மற்றும் ஸ்க்ரோலிங்கை உறுதி செய்யும் 144ஹெர்ட்ஸ் ஹை ரெஃப்ரெஷ் ரேட், எச்டிஆர்10 ஆதரவு , 3000 நிட்ஸ் பீக் ப்ரைட்னஸ் உடனான 6.78-இன்ச் அமோஎல்இடி டிஸ்பிளேவை கொண்டுள்ளது.

மூன்றாவது காரணம் - இது வெறும் 30 நிமிடங்களில் 5000எம்ஏஎச் பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்யும் 120W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் வருகிறது. நான்காவது காரணம் - இந்த ஸ்மார்ட்பினின் தரமான டிரிபிள் கேமரா செட்டப். ஐக்யூ 12 ஸ்மார்ட்போனில் 50எம்பி ப்ரைமரி கேமரா + 120-டிகிரி FoV கொண்ட 50எம்பி அல்ட்ரா-வைட்-ஆங்கிள் கேமரா + 64எம்பி பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ கேமரா உள்ளது

ஐக்யூ 12 ஸ்மார்ட்போனில் சில குறைகளும் உள்ளன" இது ​வயர்லெஸ் சார்ஜிங்கிற்கான ஆதரவை கொண்டிருக்கவில்லை. ஆனால் இதன் போட்டியாளர் ஆன ஒன்பிளஸ் 12 ஸ்மார்ட்போனில் 50W வயர்லெஸ் சார்ஜிங் இருக்கிறது (சமீபத்தில் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஒன்பிளஸ் 13 மாடலிலும் கூட வயர்லெஸ் சார்ஜிங் சப்போர்ட் இருக்கிறது என்பதையும் இங்கே நினைவூட்ட விரும்புகிறோம்)

ஐக்யூ 12 ஸ்மார்ட்போனில் உள்ள இன்னொரு குறை, இதன் 16எம்பி செல்பீ கேமராவனது 1080பி வீடியோ ரெக்கார்டிங்கிற்கான ஆதரவை மட்டுமே கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் பேக் செய்யப்பட்டுள்ள ஹார்ட்வேர் அம்சங்களை வைத்து பார்க்கும்போது, இதன் செல்பீ கேமராவில் மிகவும் எளிமையாக 4கே வீடியோ பதிவை சேர்திருக்க முடியும். ஆனால் ஐக்யூ நிறுவனம் அதை செய்யவில்லை.

டிச.3 இந்தியாவில் அறிமுகமாகும் ஐக்யூ 13 ஸ்மார்ட்போனின் சீன விலை நிர்ண்யம்: சீனாவில் இந்த ஸ்மார்ட்போனின் பேஸிக் 12ஜிபி + 256ஜிபி ஆப்ஷன் இந்திய ரூபாய் மதிப்பின்படி சுமார் ரூ.47,190-க்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதேபோல 16ஜிபி + 256ஜிபி ஆப்ஷன் ரூ.50,730-க்கும், 12ஜிபி + 512ஜிபி ஆப்ஷன் ரூ.53,090-க்கும், 16ஜிபி + 512ஜிபி ஆப்ஷன் ரூ.55,450-க்கும் மற்றும் 16ஜிபி + 1டிபி ஆப்ஷன் ரூ.61,350-க்கும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

English summary
iQOO 12 5G India Price Reduced in Amazon India Ahead iQOO 13 India launch on December 3 2024
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X