Home
Deal of the day

Flipkart-ல் அடேங்கப்பா ஆபர்.. புது iPhone மீது ரூ.3000 விலை குறைப்பு + ரூ.3995 வங்கி தள்ளுப்படி.. எந்த மாடல்?

பிளிப்கார்ட் (Flipkart) வலைத்தளமானது லேட்டஸ்ட் ஐபோன் மாடல்களில் ஒன்றான ஐபோன் 17 (iPhone 17) மீது ஒன்றல்ல, இரண்டல்ல, மொத்தம் 3 வகையான ஆபர்களை அறிவித்து.. வாடிக்கையாளர்களை அடேங்கப்பா" என்று வாய்பிளக்க வைத்து உள்ளது.

பிளிப்கார்ட்டில் தற்போது ஐபோன் 17 மீது நேரடி விலை குறைப்பு + பேங்க் டடிஸ்கவுண்ட் + எக்ஸ்சேன்ஜ் போனஸ் என மொத்தம் 3 ஆபர்கள் கிடைக்கிறது. நினைவூட்டும் வண்ணம், அறிமுகமான நேரத்தில் ஐபோன் 17 மாடலின் ஆரம்ப விலை ரூ. 82,900 ஆக இருந்தது.

Flipkart-ல் அடேங்கப்பா ஆபர்.. புது iPhone மீது ரூ.3000 விலை குறைப்பு!

தற்போது ரூ.3000 நேரடி விலை குறைப்பை பெற்று ரூ.79,900 க்கு பட்டியலிடப்பட்டுள்ளது. கூடவே ஐபோன் 17 மீது ரூ.3995 வரையிலான பேங்க் டிஸ்கவுண்ட் கிடைக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக நீங்கள் பிளிப்கார்ட் ஆக்சிஸ் கிரெடிட் கார்டு அல்லது பிளிப்கார்ட் எஸ்பிஐ கிரெடிட் கார்ட்டை பயன்படுத்த வேண்டியிருக்கும்.

கடைசியாக ஐபோன் 17 மீது ரூ.47,350 வரையிலான எக்ஸ்சேன்ஜ் போனஸும் கிடைக்கிறது. இதற்காக நீங்கள் தகுதியான பழைய ஸ்மார்ட்போனை எக்ஸ்சேன்ஜ் செய்ய வேண்டி இருக்கும்.இப்படியாக பிளிப்கார்ட் வலைத்தளத்தில் தற்போது ஐபோன் 17 மாடல் ஆனது நல்ல தள்ளுபடி விலையின் கீழ் வாங்க கிடைக்கிறது. ஆர்வமுள்ள வாடிக்கையாளர்கள் இதை பயன்படுத்தி கொள்ளவும்.

ஐபோன் 17 மாடலின் விரிவான அம்சங்கள்: ஐஓஎஸ் 26 (iOS 26) கொண்டு இயங்கும் ஐபோன் 17 மாடல் ஆனது டூயல் சிம் (நானோ + இசிம்) ஆதரவுடன் வருகிறது. டிஸ்பிளேவை பொறுத்தவரை இது 120ஹெர்ட்ஸ் வரையிலான ரெஃப்ரெஷ் ரேட் உடனான பெரிய 6.3-இன்ச் சூப்பர் ரெடினா XDR OLED டிஸ்பிளேவை கொண்டுள்ளது.

மேலும் ஐபோன் 17 மாடலின் டிஸ்பிளேவானது - புதிய ப்ரோமோஷன் (ProMotion) பேனலை ஆதரிக்கிறது. இது ஐபோன் 16 ப்ரோ மாடல்களில் மாடல்களில் இருந்து ஏற்றுக்கொள்ளப்பட்ட அம்சமாகும். மேலும் 3000 நிட்ஸ் வரையிலான பீக் ப்ரைட்னஸ், மேம்படுத்தப்பட்ட செராமிக் ஷீல்ட் 2 பாதுகாப்பு மற்றும் ஆஆல்வேஸ் ஆன் டிஸ்பிளே ஆகிய அம்சங்களையும் ஆதரிக்கிறது.

தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான ஐபி68 ரேட்டிங்கை கொண்டுள்ள ஐபோன் 17 மாடலின் கேமராக்களை பொறுத்தவரை - இது டூயல் ரியர் கேமரா செட்டப்பை கொண்டுள்ளது. அதில் எப் /1.6 அபெர்க்ஷர் மற்றும் சென்சார்-ஷிப்ட் ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் (OIS) உடனான 48 மெகாபிக்சல் ஃப்யூஷன் பிரைமரி கேமரா உள்ளது.

இந்த சென்சாரால் 52மிமீ குவிய நீளம் கொண்ட 2எக்ஸ் டெலிஃபோட்டோ கேமராவாகவும் செயல்பட முடியும். இதனுடன் எப்/2.2 அபெர்க்ஷர் மற்றும் மேக்ரோ திறன்களை கொண்ட 48 மெகாபிக்சல் ஃப்யூஷன் அல்ட்ரா-வைட் கேமராவும் உள்ளது. முன்பக்கத்தில், நீங்கள் ஒரு புதிய சென்டர் ஸ்டேஜ் செல்ஃபி கேமராவை பெறுவீர்கள்.

சிப்செட்டை பொறுத்தவரை ஐபோன் 17 மாடல் ஆனது ஏ19 சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது. இது 16-கோர் நியூரல் எஞ்சினை கொண்டுள்ளது. ஆப்பிளின் கூற்றுப்படி, பவர் எபிஷியன்ட் ஏஐ இன்பெரென்ஸ் (Power-efficient AI inference), அதிகரித்த மெமரி பேண்ட்வித் மற்றும் மேம்பட்ட செயல்திறனை வழங்கும்.

ஆப்பிள் நிறுவனம் அதன் ஐபோன் 17 மாடலின் ஸ்டோரேஜையும் அதிகரித்துள்ளது, பேஸிக் ஸ்டோரேஜ் ஆக 256ஜிபி உள்ளது. நிறுவனத்தின் கூற்றுப்படி, ஐபோன் 17 மாடல் ஆனது ஐபோன் 16 உடன் ஒப்பிடும்போது எட்டு மணிநேரம் வரை கூடுதல் பேட்டரி ஆயுளை வழங்கும். மேலும் இது வேகமாக சார்ஜிங்கையும் ஆதரிக்கிறது. ஆப்பிளின் கூற்றுப்படி சில நிமிடங்களில் 50 சதவீதம் சார்ஜ் ஆகும்; 10 நிமிட சார்ஜ் எட்டு மணிநேர பயன்பாட்டை வழங்கும்.

Best Mobiles in India

English summary
iPhone 17 gets Rs 3000 Price Cut Rs 3995 Bank Discount and Good Exchange Offer in Flipkart All Details Here
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X