ஆண்டு கடைசி.. ரூ.10,000-க்கு மேல ஆஃபர்.. iPhone வாங்க இதுதான் நேரம்.. 48MP கேமரா.. OLED டிஸ்பிளே மாடல்!
விஜய் சேல்ஸ் (Vijay Sales) தளத்தில் நடக்கும் எண்ட் ஆப் இயர் சேல் (End of Year Sale) என்னும் சிறப்பு விற்பனையில் ஐபோன் மாடல்கள் தள்ளுபடி விலையில் கிடைக்கின்றன. இதில் அல்ட்ரா ஸ்லிம் பாடியில் வெளியான ஐபோன் 16இ (iPhone 16e) ஸ்மார்ட்போனுக்கு ரூ.10,000 க்கும் மேலாக விலை குறைப்பு கிடைக்கிறது. இந்த ஐபோன் 16இ ஸ்மார்ட்போனுக்கு கிடைக்கும் தள்ளுபடி விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.
இந்திய மார்கெட்டில் 128 ஜிபி மெமரி வேரியண்ட் ரூ.59,900 விலைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால், விஜய் சேல்ஸ் தளத்தில் ரூ.51,490 விலைக்கு கிடைக்கிறது. இந்த விலை குறைப்பு சலுகை போக தேர்ந்தெடுக்கப்பட்ட பேங்க் கார்டுகளுக்கு ரூ.2,000 டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. ஆகவே, ரூ.49,490 பட்ஜெட்டில் இந்த ஐபோன் 16இ மாடலை வாங்கி கொள்ளலாம்.

ஐபோன் 16இ அம்சங்கள் (iPhone 16e Specifications): செராமிக் ஷீல்டு புரொடெக்சன் கொண்ட 6.1 இன்ச் (2532 x 1170 பிக்சல்கள்) ஓஎல்இடி (OLED) டிஸ்பிளே கிடைக்கிறது. இந்த டிஸ்பிளேவுக்கு 460 பிபிஐ பிக்சல் டென்சிட்டி மற்றும் 1200 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் கிடைக்கிறது. மேலும், இந்த சூப்பர் ரெடினா எக்ஸ்டிஆர் (Super Retina XDR) டிஸ்பிளேவுக்கு ட்ரூ டோன் (True Tone) சப்போர்ட் கிடைக்கிறது.
ஐஓஎஸ் 18 (iOS 18) கொண்ட இந்த ஐபோன் 16இ மாடலுக்கு சிக்ஸ் கோர் ஏ18 3என்எம் (Six-Core A18 3nm) சிப்செட் கிடைக்கிறது. பிரீமியம் பர்ஃபாமென்ஸ் எதிர்பார்க்கும் ஐபோன் பிரியர்களுக்கு இது பட்டையை கிளப்பும் அவுட்புட் கொடுக்க இருக்கிறது. 48 எம்பி வைடு ஆங்கிள் கேமராவை கொடுக்கிறது. இந்த பிரைமரி கேமராவுக்கு ஆப்டிகல் இமேஜ் ஸ்டெபிலைசேஷன் கிடைக்கிறது.
மேலும், 2X டெலிபோட்டோ சப்போர்ட் கிடைக்கிறது. ஐபோன் 16 மாடல்களை போலவே இதிலும் போட்டோனிக் என்ஜின் (Photonic Engine) மற்றும் டால்வி விஷன் (Dolby Vision) வீடியோ ரெக்கார்டிங் கிடைக்கிறது. ட்ரூ டோன் பிளாஷ் (True Tone Flash) மற்றும் 1080p ஸ்லோ-மோ ரெக்கார்டிங் கொடுக்கிறது. 12 எம்பி ட்ரூடெப்த் செல்பீ கேமராவை இந்த ஐபோன் 16இ கொண்டுள்ளது.
செல்பீகள், வீடியோ கால்கள் மட்டுமல்லாமல், டால்பி விஷனில் ரெக்கார்டிங் செய்து கொள்ளலாம். இதில் ஆட்டோ போகஸ் (Autofocus) கிடைக்கும். மேலும், போகஸ் பிக்சல் (Focus Pixels) ரெடினா பிளாஷ் (Retina Flash) கிடைக்கிறது. இந்த ஐபோன் 16இ மாடலுக்கு ஆக்சன் பட்டன் கிடைக்கிறது. ஆப்பிள் இன்டலிஜென்ஸ் கிடைக்கிறது. மேலும், பேஸ் ஐடி சப்போர்ட் கிடைக்கிறது.
செராமிக் ஷீல்டு புரொடெக்சன் மட்டுமல்லாமல், IP68 ரேட்டிங் கொண்ட டஸ்ட் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ஸ் பெற்று கொள்ளலாம். இந்த ஐபோன் 16இ மாடலுக்கு நானோ சிம் சிலாட் கிடைக்கிறது. மேலும், ஈசிம் (eSIM) கனெக்டிவிட்டி சப்போர்ட் கிடைக்கிறது. 26 மணி நேர பேக்கப் மற்றும் வயர்லெஸ் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட பில்ட்-இன் லித்தியம்-அயன் பேட்டரி கிடைக்கிறது.
இந்த பேட்டரியுடன் 7.8 எம்எம் தடிமன் மட்டுமே வருகிறது. மேலும், 167 கிராம் எடை மட்டுமே கொடுக்கிறது. 5ஜி, ஜிகாபைட்-கிளாஸ் எல்டிஇ, வை-பை 7, ப்ளூடூத் 5.3 மற்றும் ஜிபிஎஸ் போன்ற கனெக்டிவிட்டிகள் கிடைக்கின்றன. என்எப்சி இகுக்கிறது. ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் (Stereo speakers) உள்ளன. பிளாக் (Black) மற்றும் ஒயிட் (White) கலர்களில் விற்பனைக்கு கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications








