Home
Deal of the day

அடித்தது யோகம்.. எந்த கிரெடிட் கார்டும் இல்லாம iPhone 16 மீது ரூ.27,900 டிஸ்கவுண்ட் பெறுவது எப்படி?

ஆப்பிளின் புதிய ஐபோன் 17 சீரீஸ் (iPhone 17 Series) மாடல்களின் அறிமுகமானது, கடந்த ஆண்டு அறிமுகமான ஐபோன் 16 சீரீஸ் (iPhone 16 Series) தொடங்கி மிகவும் பழைய ஐபோன் 14 (iPhone 14) மாடல் வரையிலாக பல ஐபோன்களின் விலைகளை கடுமையாக குறைத்து உள்ளது.

இவைகளில் - பலருடைய கண்களும் ஐபோன் 16 மாடல் மீதான விலை குறைப்புகள், ஆபர்கள் மற்றும் டிஸ்கவுண்ட்கள் மீது தான் உள்ளது. அதை நன்றாக புரிந்துகொண்ட பிளிப்கார்ட் வலைத்தளமானது, ஐபோன் 16 மாடலின் மீது மிகப்பெரிய நேரடி விலைக்குறைப்பை அறிவித்து உள்ளது.

எந்த கிரெடிட் கார்டும் இல்லாம iPhone 16 மீது ரூ.27,900 டிஸ்கவுண்ட்!

வருகிற செப்டம்பர் 23 ஆம் தேதி தொடங்கும் பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் சேல் 2025 விற்பனையின் போது ஐபோன் 16 மாடல் ஆனது ரூ. 51,999 என்கிற தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கும் என்பதை பிளிப்கார்ட் வலைத்தளம் ஆனது அதன் மொபைல் ஆப்பில் உள்ள பிக் பில்லியன் டேஸ் சேல் பக்கம் வழியாக உறுதிப்படுத்தியுள்ளது

சுவாரஸ்யமாக குறிப்பிட்ட மைக்ரோசைட் ஆனது "நீங்கள் பார்ப்பதை தான் செலுத்த வேண்டும்" மற்றும் "விதிமுறைகள் பொருந்தாது" போன்ற டேக்லைன்களையும் கொண்டுள்ளது. ஆக ஐபோன் 16 மீதான இந்த விலைக்குறைப்பானது - தேர்ந்தெடுக்கப்பட்ட வங்கிகளின் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகள் மூலம் பெறக்கூடிய கூடுதல் வங்கி சலுகையாக இருக்காது; நேரடி விலைகுறைப்பாக இருக்கலாம்.

நினைவூட்டும் வண்ணம், கடந்த ஆண்டு இந்தியாவில் அறிமுகமான போது ஐபோன் 16 மாடலின் பேஸிக் 128ஜிபி ஆப்ஷனின் விலை ரூ.79,900 ஆக இருந்தது. தற்போது இதே ​​128ஜிபி ஆப்ஷன், பிளிப்கார்ட் வலைத்தளத்தில் ரூ.74,900 க்கு பட்டியலிடப்பட்டுள்ளது. இது ஐபோன் 17 அறிமுகத்திற்கு பிறகான விலை குறைப்பாகும்.

ஆக வருகிற செப்.23 தொடங்கும் பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் விற்பனையின் போது, ​​இதே 128ஜிபி ஆப்ஷன் மேலும் ரூ.23,000 வரையிலான தள்ளுபடியை பெற்று, மொத்தம் ரூ.27,900 தள்ளுபடியின் கீழ் ரூ.51,999 க்கு வாங்க கிடைக்கலாம். இதோடு ஆக்சிஸ் வங்கி மற்றும் ஐசிஐசிஐ வங்கி கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு வைத்து இருப்பவர்களுக்கு 10 சதவீத உடனடி தள்ளுபடியும் கிடைக்கும்.

இதேபோல பிளிப்கார்ட்டில் ஐபோன் 14 மீதும் ஆபர் கிடைக்கிறது. பிளிப்கார்ட் மொபைல் ஆப் வழியாக வெளிப்படுத்தப்பட்டுள்ள தகவலின்படி, வங்கி தள்ளுபடியுடன் சேர்த்து ஆப்பிள் ஐபோன் 14 மாடல் ஆனது வெறும் ரூ.39,999 க்கு வாங்க கிடைக்கும். தற்போது ​​128ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் உடன் வரும் ஐபோன் 14 மாடல் ஆனது ரூ.52,990 க்கு வாங்க கிடைக்கிறது.

நினைவூட்டும் வண்ணம் கடந்த செப்டம்பர் 2022 இல் அறிமுகப்படுத்தப்பட்ட போது ஐபோன் 14 மாடலின் விலை நிர்ணயம் ரூ.79,900 ஆக இருந்தது. ஆக ஐபோன் 14 ஆனது "கிட்டத்தட்ட" பாதிக்கு பாதி விலையில் வாங்க கிடைக்கிறது. இந்த டிஸ்கவுண்ட்டும் கூட செப்.23 ஆம் தேதி தொடங்கும் பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் விற்பனையின் போது கிடைக்கும்.

ஐபோன் 16 உடன் சேர்த்து பிளிப்கார்ட் பிக் பில்லியன் டேஸ் விற்பனையின் போது ஐபோன் 16 ப்ரோ மற்றும் ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் ஆகிய மாடல்கள் மீதும் நல்ல ஆபர்கள் கிடைக்கும். இந்த 2 ப்ரோ வேரியண்ட்களுமே மிகப்பெரிய தள்ளுபடி விலையில் வாங்க கிடைக்கலாம். ஐபோன் 16 ப்ரோ மாடல் ஆனது ரூ. 70,000 க்கும் குறைவான விலையிலும், ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் மாடல் ஆனது ரூ. 90,000 க்கும் குறைவான விலையிலும் வாங்க கிடைக்கலாம் (வங்கி சலுகைகள் உட்பட)!

Best Mobiles in India

English summary
iPhone 16 to get Biggest Direct Discount in Flipkart Big Billion Days Sale 2025 Check Details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X