அடிமட்ட விலைக்கு ஆப்பிள் iPhone.. ரூ.25000 விலை குறைப்பு + ரூ.2500 வங்கி தள்ளுபடி.. எந்த மாடல்?
அவுட் ஆஃப் ஸ்டாக் என்கிற பேச்சுக்கே இடமின்றி.. பிளிப்கார்ட் சாசா லேலே விற்பனை (Flipkart SASA LELE Sale) ஆனது சில பரபரப்பான மொபைல் ஆபர்களை தொடர்ந்து வழங்கி கொண்டே இருக்கிறது. அவைகளில் பழைய ஐபோன் 15 மாடல் மீதான ஆபரும் அடக்கம்.
இந்த விற்பனையில்.. ஆப்பிள் ஐபோன் 15 (Apple iPhone 15) மாடல் ஆனது இதுவரை இல்லாத அளவிற்கு மிகவும் குறைந்த விலையில் வாங்க கிடைக்கிறது. நீங்கள் ஒரு பிளாக்ஷிப் போனிற்கான விலையை கொடுக்காமல் ஒரு ஐபோனை வாங்க நினைத்து கொண்டிருந்தால், இந்த பிளிப்கார்ட் ஆபர் மிகவும் கவனிக்கத்தக்க டீல்களில் ஒன்றாகும்.

பிளிப்கார்ட் வலைத்தளத்தில் நடக்கும் சாசா லேலே விற்பனையில், ஐபோன் 15 மாடலின் 128ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷன், அதன் அறிமுக விலையான ரூ.79,999-இலிருந்து ரூ.25,000 நேரடி தள்ளுபடியை பெற்று ரூ.54,900 க்கு பட்டியலிடப்பட்டுள்ளது. மேலும் உங்களிடம் இருக்கும் பேங்க் கார்ட்டை பொறுத்து, ஐபோன் 15 மாடலின் ஃபைனல் ஆபர் ப்ரைஸ்-ஐ மேலும் குறைக்கலாம்.
எஸ்பிஐ கிரெடிட் கார்டு வைத்து இருந்தால் - ரூ.2,500 உடனடி தள்ளுபடியை பெறலாம், இதன் மூலம் ஐபோன் 15 மாடலின் விலையை ரூ.52,400 க்கு கொண்டு வரலாம். பிளிப்கார்ட் ஆக்சிஸ் கிரெடிட் கார்டு இருந்தால் - கேஷ்பேக்குடன் சேர்த்து ரூ.5,120 தள்ளுபடி கிடைக்கும், இதன் மூலம் ஐபோன் 15 மாடலின் விலை சுமார் ரூ.49,780 ஆக குறைகிறது.
எக்ஸ்சேன்ஜ் சலுகையை பயன்படுத்தி, உங்கள் பழைய ஸ்மார்ட்போனை பரிமாற்றம் செய்தால், நீங்கள் கொடுக்கும் ஸ்மார்ட்போனின் நிலையை பொறுத்து ரூ.48,800 வரை தள்ளுபடி பெறலாம். நீங்கள் ஒரு லேட்டஸ்ட் ஆண்ட்ராய்டு ஃபிளாக்ஷிப் அல்லது பழைய ஐபோனைப் பரிமாற்றம் செய்தால் உங்களுக்கு நல்ல எக்ஸ்சேன்ஜ் வேல்யூ கிடைக்கும்
OPINION - 2026 இல் ஆப்பிள் ஐபோன் 15 மாடலை நம்பி வாங்கலாமா? ரூ.50,000 க்குள் என்கிற விலைக்கு ஐபோன் 15 மாடலை வாங்க முடிந்தால், நிச்சயம் இதுவொரு நல்ல தேர்வாக இருக்கும். நீங்கள் ஆண்ட்ராய்டில் இருந்து மாறுகிறீர்கள் என்றாலோ அல்லது ஐபோன் 11 அல்லது பழைய மாடலிலிருந்து அப்கிரேட் ஆகிறீர்கள் என்றாலோ, செயல்திறன், கேமரா தரம் மற்றும் மென்பொருள் நேர்த்தியில் உள்ள முன்னேற்றம், இந்த விலையை நியாயப்படுத்தும் அளவுக்கு குறிப்பிடத்தக்கதாக இருக்கும்.
இருப்பினும், ஐபோன் 15 மாடலை வாங்கிவிட்டு அடுத்த மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்டுகளுக்கு இதையே வைத்திருக்க திட்டமிட்டால் - நீங்கள் ஆப்பிளின் ஐபோன் 16 மாடலை கருத்தில் கொள்ளலாம். ஏனென்றால் இது முழுமையான ஆப்பிள் இன்டெலிஜென்ஸ் ஆதரவு, புதிய ஏ18 சிப் மற்றும் கேமரா கண்ட்ரோல் பட்டன் ஆகியவற்றை கொண்டுள்ளது.
உங்களுக்கு ஒரு ஐபோனை இப்போதே வாங்கியாக வேண்டும் என்கிற அவசரம் இல்லை என்றால், 'பிக் பில்லியன் டேஸ்' போன்ற ஒரு பெரிய விற்பனை நிகழ்வுக்காக காத்திருப்பது பயனுள்ளது. கடந்த கால போக்குகளின் அடிப்படையில், இதுபோன்ற பெரிய விற்பனை நிகழ்வில் ஐபோன் 15 மாடலுக்கு மட்டுமின்றி ஐபோன் 16 மாடலுக்கும் அதிக தள்ளுபடிகள் கிடைக்கக்கூடும்.
இருப்பினும், உலகளவில் மெமரி சிப் விலைகள் அதிகரித்து வருவதால், ஆப்பிள் நிறுவனம் தனது பழைய மாடல்களின் லாப வரம்புகளை பாதுகாக்க முற்படலாம். இதன் காரணமாக, இந்த ஆண்டின் பிற்பகுதியில் நாம் காணும் தள்ளுபடிகள் முந்தைய ஆண்டுகளை போல ஆழமானதாக இல்லாமல் போகலாம். ஆக இப்போது கிடைக்கும் ஐபோன் 15 டீல் அந்த உங்களுக்கு பொருத்தமானதாக தெரிந்தால், கண்களை மூடிக்கொண்டு ஆர்டர் போட்டு விடவும்.


Click it and Unblock the Notifications