புரட்டி எடுக்கும் Flipkart! வீட்டுக்கு 2 ஆர்டர் விழுது! ரூ.6799 க்கு 5000mAh பேட்டரி கொண்ட IP64 ரேட்டிங் போன்!
பிளிப்கார்ட் வலைத்தளத்தில் நடக்கும் பிக் பில்லியன் டேஸ் சேல் 2025 (Flipkart Big Billion Days Sale 2025) விற்பனையில்.. பிரீமியம் ஸ்மார்ட்போன்கள் மீதோ அல்லது பிளாக்ஷிப் மாடல்கள் மீதோ.. அவ்வளவு ஏன் மிட்ரேன்ஜ் போன்கள் மீதான ஆபர்களை கூட நீங்கள் பார்க்க விரும்பவில்லை என்றால.. உங்கள் பட்ஜெட் ரூ.10,000 க்குள் தான் என்றால்.. நீங்கள் முதல் கருத்தில் கொள்ள வேண்டியது இந்த மொபைல் டீலை தான்!
அது இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 10 (Infinix Smart 10) ஸ்மாட்போன் மீதான டீல் ஆகும். இது ரூ.10,000 க்குள் என்கிற பட்ஜெட்டில் அறிமுகம் செய்யப்பட்டு இருந்தாலும் கூட, உண்மையில் இது விலையை மீறிய பல அம்சங்களை பேக் செய்கிறது. இது தூசி மற்றும் நீர் தெறிப்புகளை எதிர்ப்பிற்கான ஐபி64 ரேட்டிங்கை கொண்டுள்ளது. மேலும் 5000mAh பேட்டரியையும் பேக் செய்கிறது.

சுவாரசியமாக இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 10 ஸ்மார்ட்போன் ஆனது ஃபோலாக்ஸ் ஏஐ வாய்ஸ் அசிஸ்டென்ட் போன்ற இன்பினிக்ஸ் ஏஐ அம்சங்களையும் ஆதரிக்கிறது. எல்லாவற்றை விட முக்கியமாக செல்லுலார் நெட்வொர்க் இல்லாமல் மற்ற இன்பினிக்ஸ் ஸ்மார்ட்போன் பயனர்களுடன் வாய்ஸ் காலிங் செய்ய அனுமதிக்கும் இன்பினிக்ஸ் நிறுவனத்தின் அல்ட்ராலிங்க் அம்சத்தையும் (UltraLink Feature) கொண்டுள்ளது.
தற்போது பிளிப்கார்ட்டில் இந்த ஸ்மார்ட்போன், அதன் அசல் எம்ஆர்பி விலையான ரூ.8,299 க்கு பதிலாக ரூ.2,200 தள்ளுபடியை பெற்று ரூ.6799 க்கு வாங்க கிடைக்கிறது. இது இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 10 ஸ்மார்ட்போனின் 4 ஜிபி ரேம் + 64 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜின் விலையாகும்.
இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 10 ஸ்மார்ட்போனின் விரிவான அம்சங்கள்: டிஸ்பிளேவை பொறுத்தவரை இது 6.67-இன்ச் எச்டி பிளஸ் (720 x 1600 பிக்சல்ஸ்) ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளேவை கொண்டுள்ளது, இதில் 120ஹெர்ட்ஸ் வரையிலான ரெஃப்ரெஷ் ரேட், 700 நிட்ஸ் வரையிலான பீக் ப்ரைட்னஸ் மற்றும் 240ஹெர்ட்ஸ் வரையிலான டச் சாம்ப்ளிங் ரேட் ஆகியவைகளும் உள்ளது.
சிப்செட்டை பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போன் ஆக்டா-கோர் யுனிசாக் டி7250 சிப்செட் உடன் இணைக்கப்பட்டுள்ளது, இது 4ஜிபி LPDDR4x ரேம் மற்றும் 64ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜை கொண்டுள்ளது. இது மைக்ரோ எஸ்டி கார்டு வழியாக 2டிபி வரை விரிவாக்கக்கூடிய ஸ்டோரேஜையும் ஆதரிக்கிறது. முன்னரே குறிப்பிட்டபடி இந்த போன் 4 வருட லேக்-ப்ரீ அனுபவத்திற்காக TÜV SÜD சான்றிதழை கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.
ஓஎஸ்-ஐ பொறுத்தவரை இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 10 ஸ்மார்ட்போன் ஆனது ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் அடிப்படையிலான எக்ஸ்ஓஎஸ் 15.1 உடன் வருகிறது. இது தனிப்பட்ட வாய்ஸ் அசிஸ்டென்ட், ஃபோலாக்ஸ் ஏஐ உட்பட பல இன்பினிக்ஸ் ஏஐ அம்சங்களுடன் வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் டாக்குமெண்ட் அசிஸ்டென்ட் மற்றும் ரைட்டிங் அசிஸ்டென்ட் போன்ற ஏஐ ஆதரவு கொண்ட ப்ரொடெக்டிவ் டூல்களையும் ஆதரிக்கிறது.
கேமராக்களை பொறுத்தவரை இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 10 ஸ்மார்ட்போன் ஆனது 8 மெகாபிக்சல் டூயல் ரியர் கேமரா யூனிட் மற்றும் 8 மெகாபிக்சல் செல்பீ ஷூட்டரை பேக் செய்கிறது. இது டூயல் வீடியோ மோட் ரெக்கார்டிங்கை ஆதரிக்கிறது. மேலும் பின்பக்க மற்றும் முன்பக்க கேமராக்கள் இரண்டும் 30fps வேகத்தில் 2கே வீடியோ பதிவை ஆதரிக்கின்றன.
பேட்டரியை பொறுத்தவரை இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 10 ஸ்மார்ட்போன் ஆனது யூஎஸ்பி டைப்-சி போர்ட் வழியாக 15W சார்ஜிங் ஆதரவுடன் 5000mAh பேட்டரியை கொண்டுள்ளது. கவனிக்கப்பட வேண்டிய மற்ற அம்சங்களை பொறுத்தவரை ஐபி64 ரேட்டிங் தூசி மற்றும் ஸ்பிளாஸ்-எதிர்ப்பு கட்டமைப்பை கொண்டுள்ளது டிடிஎஸ் (DTS) ஆல் டியூன் செய்யப்பட்ட டூயல் ஸ்பீக்கர்களை கொண்டுள்ள இந்த ஸ்மார்ட்போன் 4ஜி, வைஃபை, ப்ளூடூத், ஜிபிஎஸ், எப்எம் ரேடியோ மற்றும் ஓடிஜி ஆகிய கனெக்டிவிட்டி ஆப்ஷன்களையும் கொண்டுள்ளது.
முன்னரே குறிப்பிட்டபடி இந்த ஸ்மார்ட்போன் இன்பினிக்ஸ் அல்ட்ராலிங்க் அம்சத்தையும் ஆதரிக்கிறது, இது செல்லுலார் நெட்வொர்க் இல்லாத பகுதிகளில் தகுதியான பிற இன்பினிக்ஸ் ஸ்மார்ட்போன்களுக்கு வாய்ஸ் கால்களை செய்ய அனுமதிக்கிறது. கடைசியாக அளவீட்டில் 165.62 x 77.01 x 8.25மிமீ மற்றும் எடையில் 187 கிராம் உள்ளது.


Click it and Unblock the Notifications








