Home
Deal of the day

SALE முடிந்தும் OFFER முடியல.. ரூ.4200 தள்ளுபடியில் 6500mAh பேட்டரி Infinix 5ஜி போன்.. எந்த மாடல்?

பிளிப்கார்ட் (Flipkart) வலைத்தளத்தில் கடந்த வாரம் முழுவதும் நடைபெற்ற சாசா லேலே 2026 சேல் ஆனது நேற்றுடன் முடிந்தும் கூட, பல வகையான ஸ்மார்ட்போன்கள் மீதான தள்ளுபடி - எங்கும் போகாமல் அப்படியே தான் உள்ளன. அதில் இன்பினிக்ஸ் நோட் 60 ப்ரோ 5ஜி (Infinix Note 60 Pro 5G) ஸ்மார்ட்போனின் மீதான தள்ளுபடியும் அடங்கும்.

தற்போது இந்த ஸ்மார்ட்போன் நேரடி விலை குறைப்பு அல்லது நேரடி தள்ளுபடியை பெறவில்லை என்றாலும் கூட, அதற்கு ஈடான வங்கி சலுகைகளின் கீழ் வாங்க கிடைக்கிறது. பிளிப்கார்ட்டில் தற்போது இன்பினிக்ஸ் நோட் 60 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனின் பேஸிக் 8ஜிபி ரேம் + 128ஜிபி ஆப்ஷன் ரூ.31,999 க்கு வாங்க கிடைக்கிறது.

ரூ.4200 தள்ளுபடியில் 6500mAh பேட்டரி Infinix 5ஜி போன்.. எந்த மாடல்?

இது அறிமுகமான நாளில் இருந்து நீடிக்கும் அதே விலை ஆகும். இருப்பினும் பிளிப்கார்ட் வலைத்தளம் ஆனது இந்த ஸ்மார்ட்போனின் மீது பேங்க் கிரெடிட் கார்டு மற்றும் பேங்க் டெபிட் கார்டு கேஷ்பேக்கை அறிவித்துள்ளது. நீங்கள் பிளிப்கார்ட் ஆக்சிஸ் கிரெடிட் கார்ட்டை பயன்படுத்தினால் உங்களுக்கு ரூ.4200 கேஷ்பேக் கிடைக்கும்.

அதுவே பிளிப்கார்ட் ஆக்சிஸ் டெபிட் கார்ட்டை பயன்படுத்தினால் உங்களுக்கு ரூ.3500 கேஷ்பேக் கிடைக்கும். பொதுவாக பிளிப்கார்ட் வலைத்தளத்தில் பட்டியலிடப்படும் பேங்க் டிஸ்கவுண்ட் ஆனது அவ்வப்போது மாறிக்கொண்டே இருக்கும் என்பதால், எது உங்களுக்கு நல்ல டிஸ்கவுண்ட் என்று தெரிகிறதோ.. அப்போதே ஆர்டர் போட்டு விடவும்.

இன்பினிக்ஸ் நோட் 60 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனின் விரிவான அம்சங்கள்: இது 6.78-இன்ச் 1.5கே கர்வ்டு அமோலெட் (curved AMOLED) டிஸ்பிளேவை கொண்டுள்ளது. மேலும் இதன் டிஸ்பிளேவில் 2644 × 1208 பிக்சல்ஸ், 4500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் (144Hz refresh rate), கார்னிங் கொரில்லா கிளாஸ் 7ஐ புரொடெக்சன் (Corning Gorilla Glass 7i protection) உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளன.

ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 4 4என்எம் (Octa Core Snapdragon 7s Gen 4 4nm) சிப்செட் உடன் இன்பினிக்ஸ் நோட் 60 ப்ரோ 5ஜி போன் இயங்குகிறது. மேலும் கேமிங் பயனர்களைக் கவரும் வகையில் அட்ரினோ 810 ஜிபியு (Adreno 810 GPU) கிராபிக்ஸ் கார்டு வசதியும் இந்த இன்பினிக்ஸ் போனில் உள்ளது.

XOS 16 சார்ந்த ஆண்ட்ராய்டு 16 இயங்குதள வசதியுடன் இன்பினிக்ஸ் நோட் 60 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது. அதேபோல் IP64 தர டஸ்ட் மற்றும் ப்ளாஷ் ரெசிஸ்டன்ட் (Dust and splash resistant) வசதியும் இந்த போனில் உள்ளது.

50எம்பி பிரைமரி கேமரா + 8எம்பி அல்ட்ரா வைடு கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா உடன் இன்பினிக்ஸ் நோட் 60 ப்ரோ போன் வெளிவந்துள்ளது. மேலும் இந்த போன் 4கே வீடியோ ரெக்கார்டிங் சப்போர்ட் கொண்டுள்ளது. செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 13எம்பி கேமராவும் இந்த போனில் உள்ளது. இதுதவிர எல்இடி பிளாஸ் மற்றும் பல கேமரா அம்சங்கள் இந்த போனில் உள்ளது.

இன்பினிக்ஸ் நோட் 60 ப்ரோ போனின் பின்புறம் ஆக்டிவ் மேட்ரிக்ஸ் டிஸ்பிளே வசதியும் உள்ளது. இன்-டிஸ்பிளே ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் (Ultrasonic in-display Fingerprint Sensor), இன்பிராரெட் சென்சார் (Infrared Sensor)போன்ற வசதிகளுடன் இந்த போன் வெளிவந்துள்ளது.

அதேபோல் JBL சவுண்ட், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், ஹை-ரெஸ் ஆடியோ (Hi-Res Audio), டூயல் மைக்ரோபோன்கள் போன்ற ஆதரவுகளும் இந்த போனில் உள்ளன. 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 802.11 ஏசி, புளூடூத் 5.4, ஜிபிஎஸ், குளோனாஸ் (GLONASS), யுஎஸ்பி டைப்-சி போர்ட், என்எப்சி உள்ளிட்ட பல்வேறு கனெக்டிவிட்டி ஆதரவுகள் இந்த போனில் உள்ளன.

6500எம்ஏஎச் பேட்டரி உடன் இன்பினிக்ஸ் நோட் 60 ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 90W ஃபாஸ்ட் சார்ஜிங், 30W வயர்லெஸ் சார்ஜிங் ஆதரவுகளும் உள்ளன. குறிப்பாக இந்த போனின் எடை 199 கிராம் ஆகும். டீப் ஓஷன் ப்ளூ, மோக்கா பிரவுன் மற்றும் சோலார் ஆரஞ்சு நிறங்களில் இந்த போனை வாங்கலாம்.

Best Mobiles in India

English summary
Infinix Note 60 Pro 5G Bank Credit Debit Card Discount You Should Not Miss in Flipkart Offer Page
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X