பொளந்து காட்டும் தீபாவளி ஆஃபர்.. ரூ.13,999-க்கு 3D டிஸ்பிளே.. 64MP கேமரா.. 5500mAh பேட்டரி.. எந்த மாடல்?
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நடக்கும் பிளிப்கார்ட் பிக் பேங்க் தீபாவளி சேல் 2025 (Flipkart Big Bang Diwali Sale 2025) என்னும் சிறப்பு விற்பனையில் இன்ஃபினிக்ஸ் நோட் 50எஸ் 5ஜி (Infinix Note 50s 5G) ஸ்மார்ட்போனுக்கு தள்ளுபடி கிடைக்கிறது. 3டி கர்வ்ட் அமோலெட் டிஸ்பிளே, சோனி சென்சார் கேமரா, 5500mAh பேட்டரி, 45W ஃபாஸ்ட் சார்ஜிங் போன்ற பீச்சர்களை பட்ஜெட்டில் கொடுக்கிறது. இந்த இன்ஃபினிக்ஸ் நோட் 50எஸ் 5ஜி ஸ்மார்ட்போனின் விலை மற்றும் பீச்சர்களை இப்போது தெரிந்து கொள்ளலாம்.
பிளிப்கார்ட் தளத்தில் 6 ஜிபி ரேம் (6 ஜிபி விர்ச்சுவல் ரேம்) + 128 ஜிபி மெமரி கொண்ட வேரியண்ட்டின் விலை ரூ.14,999ஆக இருக்கிறது. இந்த விலையில் ரூ.1,000 உடனடி டிஸ்கவுண்ட் போக ஆர்டர் செய்து கொள்ளலாம். எஸ்பிஐ பேங்க் கிரெடிட் கார்டுக்கு இந்த டிஸ்கவுண்ட் கிடைக்கிறது. ரூபி ரெட் (Ruby Red) மற்றும் டைட்டானியம் கிரே (Titanium Grey) ஆகிய கலர்களில் கிடைக்கிறது.

இதுபோக வீகன் லெதர் பேனல் கொண்ட மரைன் டிரிஃப்ட் ப்ளூ (Marine Drift Blue) கலரும் கிடைக்கிறது. ஆனால், இந்த ப்ளூ வேரியண்ட் மட்டும் ரூ.18,999 பட்ஜெட்டில் கிடைக்கிறது. மற்ற ரெட் மற்றும் கிரே கலர் வேரியண்ட்களை ரூ.13,999 பட்ஜெட்டில் வாங்கி கொள்ளலாம். அல்ட்ரா பிரீமியம் டிசைன் கொண்ட ஸ்மார்ட்போனை பட்ஜெட்டில் வாங்கி கொள்ளலாம்.
இன்பினிக்ஸ் நோட் 50எஸ் 5ஜி அம்சங்கள் (Infinix Note 50s 5G Specifications): இந்த ஸ்மார்ட்போனில் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 (Corning Gorilla Glass 5) புரொடெக்சன் கொண்ட 6.78 இன்ச் (2436 x 1080 பிக்சல்கள்) அமோலெட் (AMOLED) டிஸ்பிளே கிடைக்கிறது. இந்த 3டி கர்வ்ட் டிஸ்பிளேவுக்கு ஃபுல்எச்டிபிளஸ் (FHD+) ரெசொலூஷன் மற்றும் 144Hz ரெஃப்ரெஷ் ரேட் கிடைக்கிறது.

மேலும், 1300 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 2304Hz PWM டிம்மிங் ஃபிரிகொன்சி கிடைக்கிறது. 240Hz டச் சாம்பிளிங் ரேட் மற்றும் 2160Hz இன்ஸ்டன்ட் டச் சாம்பிளிங் ரேட் கிடைக்கிறது. 1100 நிட்ஸ் எச்பிஎம் கிடைக்கிறது. ஆக்டா கோர் மீடியாடெக் டைமன்சிட்டி 7300 அல்டிமேட் 4என்எம் (Octa Core MediaTek Dimensity 7300 Ultimate 4nm) சிப்செட் மற்றும் ஆண்ட்ராய்டு 15 ஓஎஸ் (Android 15 OS) வருகிறது.
மேலும், மாலி ஜி615 எம்சி2 ஜிபியு (Mali G615 MC2 GPU) கிராபிக்ஸ் கார்டு மற்றும் எக்ஸ்ஓஎஸ் 15 (XOS 15) கிடைக்கிறது. இந்த இன்பினிக்ஸ் நோட் 50எஸ் 5ஜி ஸ்மார்ட்போனுக்கு 2 ஜெனரேஷன் ஓஎஸ் அப்டேட் மற்றும் 3 வருட செக்யூரிட்டி அப்டேட் கிடைக்கிறது. எக்ஸ்ஓஎஸ் 15 மூலம் டைனாமிக் பார் (Dynamic Bar) மட்டுமல்லாமல், ப்ளோட்டிங் விண்டோ (Floating Window) கிடைக்கிறது.
இதுபோக ஃபோளக்ஸ் ஸ்மார்ட் அசிஸ்டன்ட் (Folax Smart Assistant), கேம் மோட் (Game Mode), கிட்ஸ் மோட் (Kids Mode), பீக் ப்ரூப் (Peek Proof) போன்ற பீச்சர்களும் கிடைக்கின்றன. இந்த நோட் 50எஸ் 5ஜி ஸ்மார்ட்போனில் IP64 ரேட்டிங் கொண்ட டஸ்ட் & வாட்டர் ரெசிஸ்டன்ட் கிடைக்கிறது. மேலும், MIL-STD-810H சர்டிபைடு மிலிட்டரி கிரேடு டியூரபிலிட்டி வருகிறது.
இன்பினிக்ஸ் ஏஐ (Infinix AI) மற்றும் ஆக்டிவ் ஹாலோ லைட்டனிங் (Active Halo Lighting) கிடைக்கிறது. சோனி சென்சாருடன் 64 எம்பி மெயின் கேமரா + 2 எம்பி மேக்ரோ கேமரா கிடைக்கிறது. 13 எம்பி ஷூட்டர் கேமரா கிடைக்கிறது. இந்த நோட் 50எஸ் 5ஜி ஸ்மார்ட்போனில் 45W ஃபாஸ்ட் சார்ஜிங் சப்போர்ட் கொண்ட 5500mAh பேட்டரி கிடைக்கிறது.


Click it and Unblock the Notifications








